மன்னை முத்துக்குமார்

வேட்டி கட்டும் நாட்டில்
வேட்டி கட்டவென்று ஒரு நாள் .
கலாச்சாரம் !

;-(
மன்னை முத்துக்குமார்

ஊர்ந்து செல்லும் பல்லிக்கு தெரியுமந்த
சிலந்தி வலை தனக்கு இரை தரும்
அட்சய பாத்திரமென்று !
;-(
மன்னை முத்துக்குமார்


கண்களை  மூடி
காற்றில் மிதக்கச் செய்யும்
வித்தைக்கு பெயர்
முத்தம் !
*
மன்னை முத்துக்குமார்

ஆயிரம் ஆடுகள்
இருக்குமந்த ஆட்டுமந்தை
கிடாவுக்கு எங்கிருந்து வந்தது
இத்தனை மிடுக்கு?
*
மன்னை முத்துக்குமார்

எத்தனை ஆண்டுகளாயினும்
போகியில் பொசுக்க முடிவதில்லை.
அரும்பு மீசை காலத்திய
அவளின் பொங்கல் வாழ்த்து அட்டையை !
*
மன்னை முத்துக்குமார்

 பொய் எனத் தெரிந்தும்
போதையூட்டத்தான் செய்கிறது
காதலன் சொல்லும் கவிதைகள் !
*
நொடி நொடியாய்
 என் பொழுதை திருடும் 
உன் அழகை  ரசிக்க விடாமல் செய்யும் 
அந்த கொஞ்சநேர தூக்கத்தை 
 என்ன செய்ய ?
*

உண்மை தான்.
ஒரு போதும் என்னைப் புகழ்ந்து கவிபாட விடாமல்
உன்னை மட்டுமே புகழ்ந்து கவி படைக்கும் நான்
ஒரு ஆணாதிக்கவாதி தான்.
*
என்னை
நாளொரு வண்ணம்
பொழுதொரு கவிதையென
சொல்லச் சொல்லி ரசிக்கும்
உன் பெண்ணாதிக்கம் வாழ்க !
*
 
மன்னை முத்துக்குமார்

பள்ளியில் சேர்க்கையில்
பெயர் ஊர் முகவரிக்கு பின்
என்ன சாதி என்ற தலைமை ஆசிரியரின் கேள்விக்கு
சாதியை மறுத்த
அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொள்வதை
விழி உயர்த்திப் பார்க்கும்
குழந்தை என்ன சாதி நீங்களாவது சொல்லுங்க ?

மன்னை முத்துக்குமார்

எத்தனை அழகு ஆபரணமிருந்தாலும்
மரியாதை மிகு ஆபரணமாய்
நகைக்கடையில் மெட்டி !
*
மன்னை முத்துக்குமார்

அவங்க உங்களை போலவே இருப்பாங்க
எனும் போது ஓடி ஓடி எடுத்துவருமந்த
துணிக்கடை பெண்ணுக்கு கிடைக்கும்
அந்த நிமிட மகிழ்ச்சி அலாதியானது !
*
மன்னை முத்துக்குமார்

எத்தனை முறை 
எத்தனை பேர் கேட்டாலும் சலிக்காமலும்
தெரியாது போகும் போது பக்கத்து கடையில் கேட்டும் 

வழிச்சொல்லும் அந்த மூலைக்கடை பெரியம்மாவுக்கு 
வணக்கத்தை பதிலாக தரும் மனிதர்கள் இருக்கும்வரை 
அலுத்துபோகாது முகவரிச் சொல்ல !