ஒரு ஜென் கதை
-
-
ஒரு சமயம் ஜென் குரு ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வழிநடையாய் சென்று கொண்டு இருந்தார். அப்போது சற்று ஓய்வு எடுக்க விரும்பி கண்ணில் தென்பட்ட அந்த ஊர் அரண்மனைக்கு சென்று மன்னனிடம்,
இந்த சத்திரத்தில் கொஞ்ச நாள் நான் தங்கலாம் என்று இருக்கிறேன் , என்றார்.
அதற்கு மன்னன் " இது சத்திரம் இல்லை ஐயா , இது அரண்மனை " என்றார்.
அப்படியா? உங்களுக்கு முன் இங்கு யார் இருந்தார் ? ஜென் குரு கேட்டார்.
என் தந்தை. இப்போது அவர் இல்லை, இறந்துவிட்டார். என்று மன்னன் சொன்னார்.
அதற்கு முன் ? என்று குரு மீண்டும் கேட்டார்.
அதற்கு முன் என் தாத்தா வாழ்ந்தார் அவரும் இப்போது இல்லை. என்றார்.
அதற்கு ஜென் குரு பொறுமையாக -
ஓ...அப்படி சிலர் சில காலம் இந்த இடத்தில் வாழ்ந்து செல்லும் போது இது எப்படி அரண்மமையாகும் ... சத்திரம் தானே ?
-
மன்னர் விழித்தார்.