மன்னையின் கதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னையின் கதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன்னை முத்துக்குமார்

கல்லூரி காலத்தில்
விடுதிக்கு வரும் நண்பனின் அப்பாவை
நண்பர்கள் உபசரிக்கும் போது
அன்பில் நெளியாத அப்பாவே இருக்க முடியாது !
*
 இமயம் தொட்டாலும்
வாடா போடா தான்
நட்பில் !!

*
 நட்பு !

அவன் அவரானது
கூச்சத்தையே தரும் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

கேட்டபோது சொன்னாள்

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

“அன்பு என்றால் இதுதான்”.
----------
மன்னை முத்துக்குமார்

ஒரு ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டி இருந்தார். அன்று முதலை பற்றிய பாடம்.
முதலை ஆபத்தானது, கிட்டே சென்றால் கையை பிடித்து கடித்து விடும். சின்ன சின்ன விலங்கினங்களை உயிரோடு முழுங்கிவிடும் என்றார்.
உடனே மனிதர்களையுமா? டீச்சர் என்றாள்.
மனிதர்களை முதலைகளால் முழுங்க முடியாது அது உருவத்தில் பெரியது தான் , ஆனால் அதுக்கு மனிதனை முழுங்கும் அளவுக்கு வாய் பெரியது இல்லை. என்றார் ஆசிரியை.
உடனே ஒரு மாணவி எழுந்து , இல்லை டீச்சர் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு மகேசை போன வாரம் முதலை முழுங்கிடுச்சி டீச்சர் என்றாள்.
இருக்கவே இருக்காது மனிதர்களை முதலையால் முழுங்கவே முடியாது என்று ஆணித்தரமாய் டீச்சர் சொல்லியும் மாணவி சமாதானமடையவில்லை.
”சரி டீச்சர், நான் சொர்க்கத்துக்கு போனப்பிறகு மகேசுக்கிட்டேயே கேட்டுக்குறேன் ”என்றாளாம்.
அதுக்கு டீச்சர், ஒரு வேளை மகேசு நரகத்துக்கு போயிருந்தா ? என்று கேட்டாராம்.

உடனே , அப்படின்னா நீங்க கேளுங்க என்றாளாம்.

இது எப்படி இருக்கு?
மன்னை முத்துக்குமார்
ஒரு நாள் கண் சொன்னது
“நான் இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் எழில் கொஞ்சும் அழகிய மலையினைக் காண்கிறேன். அது அழகாக இருக்கிறது “
அதை கேட்ட காது
சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின் சொன்னது,
இங்கே எங்கே இருக்கிறது மலை?
ஒரு மலையுமே இல்லையே? என்றது.
பிறகு கை
”நான் அதை உணரவோ , தொடவோ முயற்சித்தும் என் முயற்சி வீணாகிவிட்டது.என்னால் எந்த மலையையும் காணமுடியவில்லையே? என்றது.
இப்போது மூக்கு சொன்னது,
இங்கே எந்த மலையும் இல்லை. நான் அதை உணரவோ,நுகரவோ மோப்பம் பிடிக்கவோ முடியவி்ல்லையே?
இப்போ , கண் மறு பக்கம் திரும்பிக் கொண்டது.
மற்ற புலன்கள் யாவும் தங்களுக்குள் கூடி கண்ணினுடைய தவறான நம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டன.
இந்தக் கண்ணுக்கு ஏதோ ஆகிவி்ட்டது என்று.
--
அவ்வளவு தான் கதை . இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது :


#1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
# 2. அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
# 3. நான்கு முட்டாள்களுக்கிடையே ஒரு புத்திசாலி வாழ முடியாது.


மன்னை முத்துக்குமார்

மனிதனின் வாழ்க்கை எவ்வளவு காலம் என்று புத்தர் தனது சீடர்களிடம் கேட்டார்.

ஒரு சீடர் 65 ஆண்டுகள் என்றார்.-பதிலில் திருப்தியில்லை.

மற்றொருவர் 50 ஆண்டுகள் என்றார்--அந்த பதிலிலும் புத்தருக்கு திருப்தியில்லை.

மூன்றாமவர் 40 ஆண்டுகள் என்றார். -ம்ஹும்.

சீடர்கள் நீங்கள் சொல்லுங்க என்று கேட்டனர். 

வாழ்க்கை என்பது மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடும் கண பொழுது தான். உள்ளே போகும் காற்று வெளியே வரவில்லையென்றாலோ, வெளியில் இருக்கும் காற்றை உள்ளே இழுக்க முடியவில்லை என்றாலோ வாழ்க்கை முடிந்து விடும்.

ஆகவே வாழ்க்கை என்பது கண பொழுது தான். எனவே ஒவ்வொறு கணமும் வாழ பழகிக்க வேண்டும் என்றார்.

பதிலில் திருப்தி அடைந்த சீடர்கள் அமைதியாய் இருந்தனர்.

# மாயன் காலண்டரில் சொன்னபடி 2012 ம் வருடம், டிசம்பர் மாதம்  21ம் தேதி உலகம் அழியும் என்று பயந்து கிடக்கும் நம்ம நண்பர்களுக்கு இந்த கதை.
மன்னை முத்துக்குமார்
குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர்.

அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.

சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு.

மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார்.

கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார்.

முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, இப்படியா எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை.

எங்களால் முடியவில்லை என்றனர்.

குரு சொன்னார்-பிரச்சினைகளும் இந்த செடியை போல தான் என்று.

புரியாத சீடர் ஒருவர் , அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார்.

சிரித்தபடியே , சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது . ஆனால் சற்றே பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம் , வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது என்றார்.

# சரி தானே ?