மன்னை முத்துக்குமார்

காற்றை விட கடுவேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்
- ஷேக்ஸ்பியர் .

அறிவின் தாயகமாய், அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண் -ஜெயகாந்தன்

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு - லெனின்

உலகத்தின் உன்னதமான பொருள் பரிபூரணம் அடைந்த பெண்ணே. -லவல்

அவதூறு நல்ல பெண்ணின் வீட்டு வாசலில் பலமிழந்து மாய்ந்து விடுகிறது. -ஹீஸ்

ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது ஒரு குடும்பத்தையே படிக்க வைப்பதற்கு நிகரானது - டிக்கன்ஸ்

பெண்ணின் வாழ்வு அன்பின் சரித்திரம் -துவிஜேந்திரலால்.
----------
உலக மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ..;-)
                                    ----அன்புடன் உங்கள் மன்னை.----
மன்னை முத்துக்குமார்

கப்பற்ப்படை
காலாட்படை,
விமானப் படை
என்பதெல்லாம் தாண்டி
கரும்புலி கொண்ட
வீரப் பரம்பரையடா நீ..!

உனது இனப்பற்றை காட்ட,
அநியாயத்துக்கெதிரான
உனது கோபத்தை காட்ட,
உனது ஆற்றாமையை காட்ட ,
தற்கொலைகள் சரியாகாது.

தமிழா ..நீ பாசக்காரன் தான் ,
கோபக்காரன் தான் , 

அவையெல்லாம் தற்கொலை என்ற
கோழைத்தனத்துக்கும் முன்
மண்டியிடச் செய்திடாதே.

கொடியோர் செயல் அற
கத்தியையையும் தீட்டு அதோடு உன்
புத்தியையும் தீட்டு .

தமிழனின் வீரம் தரணியெங்கும்
தலை நிமிரும் நேரம்
தற்கொலைகளால் அதை
தரம் கெட செய்திடலாமோ ?

தமிழா தற்கொலை தவிர்த்து
தரணியில் உன் தலை நிமிர்த்து !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
  Best CINEMATOGRAPHY Award Winning Documentary film 2012
-
மன்னை முத்துக்குமார்
உன்னைப் போய்
தப்பா நினைச்சிட்டேனே ?

என்பது

என்
தகுதிக்கு
மீறிய
புகழ்ச்சி !

என்ன வேண்டும்
உனக்கு ?
---
-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
என்னைப் பேட்டிக் காண
என்ன இருக்கிறது ? என்றேன்.

உங்கள் பெருமையை
ஊரறியும் ஐயா , என்றவன்

பேட்டியைத்
தொடங்கிக் கேட்டான்,

உங்களைப் பற்றிச்
சொல்லுங்க ஐயா  !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
தாலாட்டு
தூங்குவதற்குத் தான்.
சேயுடன் தாயும் !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

நீதிமன்றம் !

உண்மையை
உரக்கச் சொல்லி
உணர்த்தவும்

அதனால்
உணர்ந்து
கொள்ளவும் தான்.

மற்றபடி
குற்றவாளிக்கு
தன்
குற்றம்
புரியாமலில்லை !
-
-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
பிறப்பதற்கே
துணிந்தவன்
நீ ..!

இடையில்
என்ன ..

துட்சம் தான்
  எல்லாம் 
உனக்கு !
மன்னை முத்துக்குமார்
வார்த்தைகளால்
வளமையை,
வலியை,
மகிழ்வை,
காதலை,
அன்பை,
வெளிபடுத்தும்
ஆயுதமே
கவிதை !
-
- மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
உண்மையென்று
ஒன்றிருக்க..

ஒவ்வொறு நாளும்
நடிக்கிறோம் அல்லது
நகர்கிறோம்
நீதிமானாய்
நியாயவாதியாய்
நல்லவனாய்
இன்னும் பலவாய்..

அதுவதுவாய்
அதுவதற்க்கேற்றாற் போல்
நம்மை நாமே
பாத்திரப்படுத்திக் கொள்கிறோம்.

உண்மை என்பது
எல்லோருக்கும்
ஒரே மாதிரியாய் இருப்பதால்
அதுவே யதார்தமாகி விடுகிறது.

எளிதில் தப்பி விடுகிறோம் அல்லது
தப்பித்துக் கொள்கிறோம்.

 -
-மன்னை முத்துக்குமார்