மன்னை முத்துக்குமார்
எத்தனை ஆண்டுகளாயினும்
போகியில் பொசுக்க முடிவதில்லை.
அரும்பு மீசை காலத்திய
அவளின் பொங்கல் வாழ்த்து அட்டையை !
*
மன்னை முத்துக்குமார்
பொய் எனத் தெரிந்தும்
போதையூட்டத்தான் செய்கிறது
காதலன் சொல்லும் கவிதைகள் !
*
நொடி நொடியாய்
என் பொழுதை திருடும்
உன் அழகை ரசிக்க விடாமல் செய்யும்
அந்த கொஞ்சநேர தூக்கத்தை
என்ன செய்ய ?
*
உண்மை தான்.
ஒரு போதும் என்னைப் புகழ்ந்து கவிபாட விடாமல்
உன்னை மட்டுமே புகழ்ந்து கவி படைக்கும் நான்
ஒரு ஆணாதிக்கவாதி தான்.
*
என்னை
நாளொரு வண்ணம்
பொழுதொரு கவிதையென
சொல்லச் சொல்லி ரசிக்கும்
உன் பெண்ணாதிக்கம் வாழ்க !
*
மன்னை முத்துக்குமார்
எத்தனை அழகு ஆபரணமிருந்தாலும்
மரியாதை மிகு ஆபரணமாய்
நகைக்கடையில் மெட்டி !
*
மன்னை முத்துக்குமார்
அவங்க உங்களை போலவே இருப்பாங்க
எனும் போது ஓடி ஓடி எடுத்துவருமந்த
துணிக்கடை பெண்ணுக்கு கிடைக்கும்
அந்த நிமிட மகிழ்ச்சி அலாதியானது !
*
மன்னை முத்துக்குமார்
எத்தனை முறை
எத்தனை பேர் கேட்டாலும் சலிக்காமலும்
தெரியாது போகும் போது பக்கத்து கடையில் கேட்டும்
வழிச்சொல்லும் அந்த
மூலைக்கடை பெரியம்மாவுக்கு
வணக்கத்தை பதிலாக தரும் மனிதர்கள் இருக்கும்வரை
அலுத்துபோகாது முகவரிச் சொல்ல !
◙
மன்னை முத்துக்குமார்
உரிமையில் கட்டளையிடும் போது அதை ஆதிக்கம் என்று எடுத்துக்கொள்ளாதவரை தான் அது “ அன்பு ” என்று பொருள்படும் .!
*
-மன்னை முத்துக்குமமார்
மன்னை முத்துக்குமார்
எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்.
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது !
*
-பாவலர் அறிவுமதி.