|
பாசிசம் , நாசிசம் ஆகியவற்றைப் போன்ற ஒரு அரசியல் கொள்கையே இந்து மதம் ஆகும்.பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதற்காக, இந்த நாட்டின் ஆட்சியை இந்துக்களிடம் ஒப்படைப்பதை, இந்திய நாட்டின் நிலைமைகளை நன்கறிந்த, நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரும் ஒப்புக் கொள்வர் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கக்கூடாது. இந்து மதம் பாசிச, நாசிச சித்தாந்தங்களைப் போன்ற ஓர் அரசியல் சித்தாந்தமாகும் என்பதையும், அது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் காங்கிரஸ் மறந்து விடுகிறது. இந்து மதம் அதன் போக்கில் விடப்பட்டால் - அதைத்தான் இந்து பெரும்பான்மையினர் விரும்புகின்றனர் - இந்து மதத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் இந்து மத எதிர்ப்பாளர்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கு அது அச்சுறுத்தலாக அமையும். இது, முஸ்லிம்களின் கருத்து மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதவர்களின் கருத்துமாகும்.
கீழ்க்காணும் வழிமுறைகளில் ஆங்கில அரசு பிரகடனம் செய்ய முடியும் என்று நினைக்கிறேன் :
1. அமைதிப் பிரகடனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் இந்தியாவை டொமினியன் (குடியேற்ற நாட்டு) அந்தஸ்துக்கு உயர்த்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
2. அந்த இலக்கை நோக்கி விரைவாகச் செயல்படுவதற்காக, போர் நிறுத்தம் கையெழுத்தான நாளிலிருந்து ஓராண்டிற்குள் இந்திய தேசியவாதிகள், அரசமைப்பு குறித்து தங்களிடையிலான வேறுபாடுகளுக்கு ஒருமித்த தீர்வு காண வேண்டும்.
3. அவ்வாறு தீர்வு காணவில்லையென்றால், அந்தப் பிரச்சினையை உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆங்கில அரசு அளித்துவிடும்.
4. அவ்வாறு அந்தத் தீர்வு கிடைத்தவுடன், இந்திய டொமினியன் அரசமைப்பின் ஒரு பகுதியாக அதை நடைமுறைப்படுத்த ஆங்கில அரசு உறுதியேற்கிறது.
...இந்தப் பிரகடனத்தோடு தேசிய அரசு அமைய வேண்டுமா? அது அமைந்தால் நல்லதுதான். திரு. ஜின்னா இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதால் சிக்கல் இருக்கிறது. (1) ஒன்று இறுதியானது. அதுதான் பாகிஸ்தான். (2) இரண்டாவது உடனடியானது. அதõவது, அமைச்சரவையில் 50 சதவிகித பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது. முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்று திரு. ஜின்னா இந்துக்களிடம் கூறுகிறபோது, பாகிஸ்தான் கோரிக்கையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதில் சர்ச்சைக்கு இடமே இல்லை. முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்குப் பாகிஸ்தான் வேண்டும் என்று திரு. ஜின்னா கூறும்போது, இந்துக்கள் நிறைந்த பெரும் எல்லைப் பகுதிகளை எடுத்துச் செல்லாதவரை, தாராளமாக (பாகிஸ்தானை) எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவேன். ஏனென்றால் உங்கள் கொள்கைப்படி, இந்துக்களும் பிறிதொரு தேசிய இனத்தவர்கள்தானே.
வடமேற்கு எல்லைப் பகுதியானது, பாகிஸ்தானுடன் முற்றிணைந்த ஒரு பகுதியாகும். வடமேற்கு எல்லைப் பகுதிக்குத் தான் உரியவரல்ல என்பதை திரு. ஜின்னா ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கு உரியவர் கான் அப்துல் கபார் கான் ஆவார். அவருடைய ஒப்புதல் இல்லாமல், பாகிஸ்தான் என்பது இல்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்ய சூறாவளிப் பயணம் செல்வதைக் காட்டிலும், கான் அப்துல் கபார் கானை மனம் மாறச் செய்ய திரு. ஜின்னா தனது நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டும். இருப்பினும், இது திரு. ஜின்னா முடிவு செய்ய வேண்டிய விஷயம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், பாகிஸ்தானை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால், முஸ்லிம்களுக்கான 50 சதவிகித பிரதிநிதித்துவக் கோரிக்கையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. மேலும், 50 சதவிகிதத்திற்கான உடனடிக் கோரிக்கை, இறுதி லட்சியமான பாகிஸ்தானோடு எவ்வாறு தொடர்புடையது என்றும் புரியவில்லை. முஸ்லிம் லீக்கின் இந்தக் கோரிக்கை நேர்மையற்றது என்று நிச்சயமாக நம்புகிறேன். இதனை நிராகரித்ததன் மூலம் லின்லித்கோ பிரபு, இந்தியாவிற்கு மிகப் பெரும் நன்மை செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
திரு. ஜின்னாவின் கோரிக்கையான 50 சதவிகிதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இந்தியாவில் இடைக்கால நடவடிக்கையாக தேசிய அரசாங்கம் எதுவும் அமைய முடியாது என்று உறுதியாக நினைக்கிறேன். போர் முயற்சியைப் பொருத்தவரையில், இப்போது செய்யப்படுவதைவிட தேசிய அரசு அதிகமாக எதையும் செய்து விட முடியாது. இதைக் காட்டிலும் அதிகமாக இந்தியா செய்ய முடியாது. இந் தியாவின் ஆற்றல் அதிகரிக்கப்படவில்லை. அதற்கான முழு பொறுப்பும் ஆங்கில அரசினுடையதுதான். அமைதிக் காலத்தில் இந்தியாவின் வளத்தை மேம்படுத்தாமல் இருந்து விட்டார்கள். அதனால் இந்த அரசு அல்லது தேசிய அரசு, இப்போது செய்வதைவிட அதிகம் செய்ய முடியாத நிலையிலிருக்கிறது.
நாடு நன்றாக, முழுமையாக வளர்ச்சியடைய செய்யப்பட்டிருந்தால் அதனால் பேரரசைக் காத்திருக்க முடியும். இப்போது அது தன்னையே காத்துக் கொள்ள முடியவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ இருக்கும் ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, அது இங்கிலாந்தை எதிர்பார்க்கும் கட்டாயத்திலிருக்கிறது. நாட்டின் அவலநிலை இவ்வாறு இருக்கிறது. ஓர் இந்தியரை பாதுகாப்பு உறுப்பினராக நியமிப்பது நன்றாக இருக்கும். ஆனால் அது போதுமா? பாதுகாப்பு அவருடைய பொறுப்பில் இல்லாமல், ஓர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்ய முடியும்? புரிந்து கொள்ளவே கடினமாக இருக்கிறது
தேசப்பிதா என்றால் இருந்துட்டு போ, எங்களுக்கு அரியின் குழந்தை என்று பேரு வைக்க நீ யாரடா நாயே? உள்ளக்குமுறலை கேளுங்கள்...
|

இந்நாட்டு தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடன் போராட வேண்டும்..
நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான்.
அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை.
சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன்.
இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை.
அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மனிதனின் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும், அவனுடைய சொந்த தீய நடத்தையே காரணமாகும். துன்பத்துக்கான காரணத்தைப் போக்குவதற்காக புத்தர் பஞ்சசீலத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
பஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள் உள்ளன:
.
1. எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும் தவிர்த்தல்
அரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம். 1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் 'பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331

உலகம் 123வது மே தினத்தை சிறப்போடு கொண்டாடி கொண்டு இருக்கிறது. மே தினம் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாள். எட்டு மணி நேரத்தை பெற்றெடுத்த வீரத் திருநாள். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தால் பெற்றெடுத்ததே இந்த எட்டு மணி நேர வேலை உரிமை. உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்தலுக்காக முதலாளித்துவத்துடன் போராட வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல; இன்றும்தான்.
1899ல் நடைபெற்ற பன்னாட்டு சோசலிசப் பேரவையில் இந்நாளை தொழிலார் நாளாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அன்றுதொட்டு இன்று வரை, உலக நாடுகள் அனைத்திலும் உழைப்போர் மகிழ்வுடன் கொண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இது உலகாளாவிய ஒரு ஒப்பற்ற தினம், அதோடு தமிழகத்தில் இன்றும் தஞ்சை, நாகை , திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்களிடம் நடைமுறையில் உள்ள அமாவாசை விடுமுறை மற்ற பகுதியில் இருப்பதாக தெரியவில்லை. இந்த பகுதியில் சமீப காலங்களில் சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஜமீன் அதிகாரம் கோல்லோச்சி தான் இருந்தது, குறிப்பாக திருவாரூர் மாவட்டம் களப்பால் பகுதியில் ஆண்டான் அடிமை முறை இருந்து இருக்கிறது. காலையில் 7 மணிக்கே வயலுக்கு போக வேண்டும் , தோளில் துண்டு போடக்கூடாது, வேலைக்கு வராதவர்களுக்கு சாட்டை அடி ,சாணிப்பால் என்ற கொடுமையும் நடந்து இருக்கிறது, கம்யூனிச பேரியக்கங்கள் தோழர் ஸ்ரீனிவாசராவ் அவர்கள் முயற்சியில் தென்பரை கிராமத்தில் தனது முதல் செங்கொடியை ஏற்றி போராடி இந்த ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் ,விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்த அவ்வியக்கங்களுக்கு தொழிலாளர்கள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாவர், அதோடு அமாவசை தினத்தையும் விடுமுறை நாளாக அமைத்து கொடுத்தனர், அந்த விடுமுறை இன்றும் இந்த பகுதிகளில் நடைமுறையில் உள்ளது..
வாழ்க தொழிலாளர் தினம், வெல்வோம் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை..
புரட்சிக்கவிஞருக்கு இன்று (29-04-2010) 120 வது பிறந்த நாள்..அவரது பாக்கள் என்றும் அறியாமையை அகற்றும் ஒளிச்சுடர், பகுத்தறிவு போர்வாள்..அவரது புகழ் தமிழுலகம் என்றும் போற்றும்..பார்ப்பனிய அறிவு சூழ்ச்சியை தனது பாடல்களால் தமிழனுக்கு எடுத்து உரைத்த அவரது தொண்டு என்பது ஒவ்வொறு தமிழனும் மறக்க கூடாதது நன்றிக் கடனுக்குரியது, பின்பற்ற வேண்டியது...--------------------------------------
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!
கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!
அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே.......
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!
தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!
---

