மன்னை முத்துக்குமார்

-
பாடலை கேட்க மேலே உள்ள லின்ங் கை  சொடுக்கவும்.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?

உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!

நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே.......

குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!

இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்! 
-
-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
1 Response



  1. எந்த ஊரிற்கு சென்றாலும் , கால்போன போக்கில் அந்த ஊரின் சாலைகளில் சுற்றி திரிவது என் வழக்கம் . அப்படி ஒருநாள் புதுச்சேரி வீதியில் நடக்கும் போது , கண்ணில் பட்டது பாரதிதாசனின் இல்லம் . சரியான பராமரிப்பு இல்லாதபோதும் , மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டதால் மனம்மகிழ்ந்தேன்