மன்னை முத்துக்குமார்
ஆதரவற்ற
முதியோர் இல்லத்தை
கடந்து செல்லும்
ஒவ்வொறு முறையும்

குற்ற உணர்வுடன்
குருகித்தான்
போகிறது மனசு;

பிடிச்சோறு
கொடுத்து வளர்த்த
அம்மாவையும் ,

நிலாச்சோறு ஊட்டி
வளர்த்த பாட்டியையும்

நிர்கதியாய் விட்டுவிட்டு
வீட்டோடு
மாப்பிள்ளையாகிப் போன
எவறுக்கும் !
-
-மன்னை முத்துக்குமார்.