இன்று உலக இசை தினம். ( 21/06/2013)
தமிழ்த் திரைப்பட பாடல்களில் காம விரசமில்லாது எழுதும் ஒரே கவிஞர் அண்ணன் அறிவுமதியாக தான் இருக்கும். அந்த வகையில் அண்ணன் எழுதிய ஆயிரக்கணக்கான பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்
இந்த முத்தமிழே முத்தமிழே...ராமன் அப்துல்லா படத்துக்காக .
அண்ணன் அறிவுமதி அவர்களின் பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க எஸ் .பி .பாலசுப்ரமணியன் -சித்ரா ஆகியோர் பாடிய | |
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன – மனம்
வேகுது மோகத்திலே...
நோகுது தாபத்திலே
( முத்தமிழே முத்தமிழே...
காதல்வாழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை
தாகம் வந்து பாய்விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர்குடிக்க கைவளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரைச் சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த ஆனாந்தம் தான்
( முத்தமிழே முத்தமிழே...
கனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா
பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்
( முத்தமிழே முத்தமிழே...
-