மன்னை முத்துக்குமார்

நீ..
பெரியவளானதை
என்னிடம் சொல்ல கூசிய போது புரிந்தது
நம் நட்பை எத்தனை பெரிதாய்
மதிக்கிறாய் என்று !
***
 அவனுக்கு பொம்பள புள்ளைங்க தான் 
பிரண்டு என்று  புறம் பேசியவனுக்கு 
தெரிய வாய்ப்பில்லை.

நட்பு பாலின பேதங்களற்றது என்று !

***
 நட்பு !
வார்த்தையல்ல.

வேதம்
வாழ்க்கை
உயிர்மூச்சு .

***
 
நண்பர் என்பதை விட நண்பன் எனபதில்
உண்மையும் அழுத்தமும் அதிகம் !

***
 அவன் இவன் என்பது நட்பின் அடர்த்தியை
வெளிப்படுத்தும் வார்த்தைகள் !
***
 
ஆறு மாத குழந்தைக்கு
காதல் தெரியாது..
ஆனால்
அதன் வயதொத்த
குழந்தையை கண்டால்
நட்பு பாராட்டும் ..

எல்லாத்துக்கும் மேல நட்பு !

***
 
பசி, காதல் , பாசம், செக்ஸ் ...
எதைப் பற்றியும் பேச
நண்பனிடம் மட்டுமே முடியும் !
***
 
 தோழியின் நட்பை பற்றி சொல்லும் போது
பூரிப்படையும் மனைவி கிடைத்தவன்
பாக்யவான் !

***
 
அம்மா அப்பாவை
தாண்டி கோபம் செல்லுபடியாகும்
ஒரே இடம் நட்பு !

***
-மன்னை முத்துக்குமார்.
.
புகைப்படம் : நவீன்  கெளதம்.