மன்னை முத்துக்குமார்
அவளை
இப்போது
பார்த்தாலும்
கேட்கத் தோணும்,
கணக்கு புத்தக 25 ம் பக்கத்தில்
அடை வைத்த
மயிலிறகு
குட்டி போட்டதா ?
என்று !
*
- மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
பெரியார் தாசன் என்று முற்போக்கு
சிந்தனையாளர்களால் பெரிதும் அறியப்பட்டவரும் , கருத்தம்மா என்ற படத்தில்
அறிமுகமாகி அதே படத்திற்கு சிறந்த குணசித்திர நடிகர் என்று தேசிய விருதினை
பெற்றவரும் , தத்துவவியல் பேராசிரியரும், தனது அறிவுக்கெட்டிய வகையில்
கடவுளே இல்லையென்றவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவி,
தன் பெரியார் தாசன் என்ற பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றியவருமான தோழர்
பெரியார் தாசன் இன்று நம்மிடம் இல்லை. அவரது பகுத்தறிவு முழக்கத்தால்
தெளிவு பெற்றவர்களில் நானும் ஒருவனாய் அவரை இழந்து வருந்துகிறேன்.
ஆழ்ந்த இரங்கல் ... ;-(
மன்னை முத்துக்குமார்
பாரதியாரிடம் ஒருமுறை ஒருவர் கேட்டாராம்,
ஏன்டா சுப்பு, பிரம்மனோட வாயில் இருந்து பிறந்தவன் பிராமணன்,நெஞ்சில்
இருந்து பிறந்தவன் சத்திரியன் (அரசர்கள்) வயிற்றில் இருந்து பிறந்தவன்
வைஷ்யன், காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் -ன்றானுங்களே,
இந்த பஞ்சமன் எங்கிருந்து -டா பிறந்தான் ? னு கேட்டாராம்.
அதுக்கு பாரதியார் –அதுவாய்யா… அவன் ஒருத்தன் தான் அவன் அம்மா அப்பா வுக்கு பிறந்தான் -ன்னாராம்.
கேட்டவர் ஓடியே விட்டாராம்.
***
மன்னை முத்துக்குமார்
போன
வேகத்தில்
திரும்பின
சொந்த தேசத்து
பறவைகள் ;
இன்னும்
துளிர்விட மறந்த
மரங்களும் , மனிதர்களும்
அங்கே !
*
- மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.
முதல் தெய்வம் அறிவு;
இரண்டாவது தெய்வம் சுயமரியாதை;
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.
இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை .
*
- அண்ணல் அம்பேத்கர்.
மன்னை முத்துக்குமார்
*
இந்த அன்பும் சகோதரத்துவமும் என்றும் நிலைக்க இந்த ரமலான் நாளில் உறுதி பூணுவோமாக..!!!
***