மன்னை முத்துக்குமார்


 முதல் தளத்தில் இழவு
மூன்றாம் தளத்தில் முகூர்த்தம்
அடுக்குமாடி குடியிருப்பு !
*
இந்திய நதிகள்
இணைக்கப்படுகிறது.
ஒவ்வொறு தேர்தலின் போதும் !
*
சாதி சங்க மாநாடு
உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான்.
அந்த சே குவேரா டீ சர்ட் போட்ட இளைஞன்.
*
தெரிந்தே அடைகாத்தது
குயிலின் முட்டையை காகம்.
*
பசியால் மரித்துப்போன கவிஞரின் பெயரில்
“வளர்முகக் கவிஞர் விருது !”
*
தீ வைத்தும்
சிரிக்கிறது மெழுகுவர்த்தி !
*
புல்லாங்குழல் விற்பவன் ஊதினான்
தன் பசியையும் சேர்த்து !
*