மன்னை முத்துக்குமார்


கொலம்பசைப் பாராட்டி நடைபெற்ற விருந்து ஒன்றில் அவர்மீது பொறாமை கொண்ட சிலரும் கலந்து கொண்டனர்.

அவர்களுள் ஒருவர், கொலம்பஸ் மட்டுமல்ல, வேறு யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திருந்தாலும் புதிய நாடுகளைக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று கூறினார்.

இதனைக் கேட்ட கொலம்பஸ், விருந்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றினை எடுத்தார். சொன்னவரிடம் கொடுத்து, இதைச் செங்குத்தாக மேசையின்மேல் நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம் என்றார்.
நிறுத்தி வைத்துப் பார்த்து முடியாமல், உங்களால் செங்குத்தாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று கொலம்பசைக் கேட்டார்.

முட்டையை வாங்கிய கொலம்பஸ் குறுகலான பகுதியை மேசையின்மீது மெதுவாகத் தட்டினார். முட்டையில் சிறிய பள்ளம் விழ, முட்டை மேசையின்மீது செங்குத்தாக நின்றது.

எதிரில் இருந்தவர், இப்படிச் செய்வது என்றால் நானும் செய்திருப்பேனே என்றதும்,

  “எந்தக் காரியத்தையும் ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். முதல்முறையாக அதைச் செய்வதற்குத்தான் மூளை வேண்டும் ”

என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் கொலம்பஸ்.( Christopher Columbus )
மன்னை முத்துக்குமார்
“நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை,
அடிமைத்தனத்தை தவிர !
ஆனால், வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது.!”

- தோழர் கார்ல் மார்க்ஸ்
மன்னை முத்துக்குமார்


 முதல் தளத்தில் இழவு
மூன்றாம் தளத்தில் முகூர்த்தம்
அடுக்குமாடி குடியிருப்பு !
*
இந்திய நதிகள்
இணைக்கப்படுகிறது.
ஒவ்வொறு தேர்தலின் போதும் !
*
சாதி சங்க மாநாடு
உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான்.
அந்த சே குவேரா டீ சர்ட் போட்ட இளைஞன்.
*
தெரிந்தே அடைகாத்தது
குயிலின் முட்டையை காகம்.
*
பசியால் மரித்துப்போன கவிஞரின் பெயரில்
“வளர்முகக் கவிஞர் விருது !”
*
தீ வைத்தும்
சிரிக்கிறது மெழுகுவர்த்தி !
*
புல்லாங்குழல் விற்பவன் ஊதினான்
தன் பசியையும் சேர்த்து !
*

     
மன்னை முத்துக்குமார்

பெருநகரங்களில் மிதிவண்டியை மிதிக்கையில் காரோட்டிகளின் வசவுகளையும் சேர்த்தே மிதிக்க வேண்டி இருக்கு !

*
மன்னை முத்துக்குமார்
கதை , திரைக்கதை நேர்த்தி, கச்சிதமான பாத்திரபடைப்பு , உயிரோட்டமுள்ள வசனம் அருமையான முடிவு என என்னை ஆட்கொண்ட திரைப்படம் மெளனகுரு.

நான் அடுத்த தலைமுறை இயக்குநர்களில் முதலில் வைத்து பார்ப்பது இந்த சாந்தகுமாரை தான் 



ஹேட்ஸ்- ஆப் சாந்தகுமார்.

யூ டியூப் லின்க் : http://www.youtube.com/watch?v=gSCNS1Tf9ec
மன்னை முத்துக்குமார்
என்னடா இவன் எப்ப பார்த்தாலும் பெரியார் புராணம் பாடுறான் என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ...

‘நாங்கள் சேர்ந்திருக்கும் போது நான் அவரின் சீடனைப் போலவே இருந்தேன். ஆனால் அவரோ என்னை தன் தலைவரை போல நடத்தினார் . அவர் எனக்கு மிகவும் கெளரவமான இடத்தை தந்தபோதும் நான் அவரின் உதவியாளனை போல தான் செயல்பட்டேன். ஒரு கட்டத்தில் நாங்கள் கொள்கை அளவில் முரண்பட்டு பிரிந்தாலும் தனிப்பட்ட முறையில் எங்களிடம் பேதமில்லை .”

இது காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து திராவிடர் கழகம் தொடங்கியபின் ராஜாஜியை பற்றி அடிக்கடி பெரியார் நினைவு கூர்ந்து நண்பர்களிடம் சொன்னது .

இப்ப அப்படியா ? பெரியாரிடம் இந்த சமூகம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் இருக்கு...

ஒவ்வொன்னா சொல்வேன்.
மன்னை முத்துக்குமார்

வேட்டி கட்டும் நாட்டில்
வேட்டி கட்டவென்று ஒரு நாள் .
கலாச்சாரம் !

;-(
மன்னை முத்துக்குமார்

ஊர்ந்து செல்லும் பல்லிக்கு தெரியுமந்த
சிலந்தி வலை தனக்கு இரை தரும்
அட்சய பாத்திரமென்று !
;-(
மன்னை முத்துக்குமார்


கண்களை  மூடி
காற்றில் மிதக்கச் செய்யும்
வித்தைக்கு பெயர்
முத்தம் !
*
மன்னை முத்துக்குமார்

ஆயிரம் ஆடுகள்
இருக்குமந்த ஆட்டுமந்தை
கிடாவுக்கு எங்கிருந்து வந்தது
இத்தனை மிடுக்கு?
*