மன்னை முத்துக்குமார்
மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப வக்கீலை அழைத்தார்.

“உயில் எழுத வேண்டும். என்னுடைய சொத்துக்களை என் மகன்களுக்கு பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்.”

“அந்த கவலையை விடுங்க! என்னிடம் கொடுங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“அது எனக்கும் தெரியும். உங்களுக்குப் போக கொஞ்சமாவது என் பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறேன்!”
மன்னை முத்துக்குமார்

பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், "பெர்னாட்ஷா, திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

அதற்குப் பெர்னாட்ஷா, "கடவுளுக்கு நன்றி சொல்வேன்" என்றார்.

குழப்பமடைந்த நண்பர், "கடவுளுக்கு நன்றியா? ஏன்?" என்று கேட்டார்.

"பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா? அதனால்தான்" என்றார் ஷா அமைதியாக.

அந்த நண்பர் அசடு வழிந்து ஓடியே போய்விட்டாராம்.
மன்னை முத்துக்குமார்
வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது,

வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

”பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலில்
- தந்தை பெரியார்

மன்னை முத்துக்குமார்

ஹைக்கூ கவிதைகளுக்கென விதிமுறைகள் இருக்கு. அவை
-
ஒரே வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள்.

மூன்று வரியில் 17 சொற்கள் 5 – 7 – 5 என்ற வரிசையில்.
சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் – நடு வரி மட்டும் சற்று நீளம்.
மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.

மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.

வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.

எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.
தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.

உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).

எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.
மன்னை முத்துக்குமார்
இரு துறவிகள்… ஒரு ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.

அப்போது ஆற்றைக் கடக்க முடியாமல் ஒரு இளம்பெண் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார்.

ஆனால் மற்றவர் தயங்கவில்லை. அந்தப் பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்று விட்டாள்.

துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

சிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு உதவ மறுத்த துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா? நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர்? இது தவறுதானே?” என்றார்.

பெண்ணுக்கு உதவிய துறவி சொன்னார்… “நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்!” என்றார் புன்முறுவலுடன்.

# எண்ணங்களையும் துறப்பதே துறவு.

மன்னை முத்துக்குமார்
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே நண்பர்கள்.

முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது.

''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

முதல் நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த நபரை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் இரண்டாவது நபர். அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது நபர் வந்தார். அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

மூன்றாவது நபர் சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''
-

மன்னை முத்துக்குமார்
 நண்பர் முரளி மனோகர் இயக்கிய இந்த கர்ண மோட்சம் குறும்படம் சிறந்த குறும்படங்களுக்கான தேசிய விருதை பெற்றுள்ளது .


 -
மன்னை முத்துக்குமார்
குப்பைத் தொட்டி
குறைகளையும்
போடத் தான்.

-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
பசித்தால் சாப்பிடு
தூக்கம் வந்தால் தூங்கு.
ஆனால் இவை பற்றிய எண்ணங்களிலேயே
மூழ்கி விடாதே.

மனது மட்டும்
இவற்றிலிருந்து விலகி இருக்கட்டும் 
-ஜென்.

மன்னை முத்துக்குமார்



பகுத்தறிவு பகலவன் அய்யா பெரியாரின் நினைவு தினம் இன்று.

ராஜசேகர ரெட்டியோ , சந்திரபாபு நாயுடுவோ, தேவே கவுடாவோ மன்மோகன் சிங்கோ , ஈ கே நாயனாரோ-போன்று சாதி பெயர்களை தாங்கிய தர்குரிகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்க காரணமானவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களே. இன்றும் தமிழகத்தை ஆள்வது அவரது வழித்தோன்றல்களான திராவிட இயக்கங்களே .

அய்யாவின் சிந்தனைகளில் சில..

மானமும் அறிவும் மனிதற்கு அழகு .
கடவுளை மற , மனிதனை நினை.
--
கடவுள் துணை யாருக்கு..?
கையாலாகாதவனுக்கு கடவுள் துணை;
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன்;
செயல் தவற்றை உணர முடியாதவனுக்கு தலைவிதி.
(13-12-1937 "குடி அரசு" பக்கம் 14)
--
எனக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ,சாத்திரத்தைப் பற்றியோ, அக்கறையில்லை. ஆனால், கெடுதிகளை போக்க முயற்சிக்கிற போது,

"கடவுள்தான் சாதிகளை ஏற்படுத்தினார் - அதன்படிதான் நடக்க வேண்டும்"என்றால், அந்த கடவுள் எத்துணை பெரிய கடவுளாயிருந்தாலும் அதைசுட்டுபொசுக்கவேண்டாமா - அதைப்புதைக்கவேண்டாமா என்றே உங்களை கேட்கிறேன்.
(15 - 6 - 1930"குடி அரசு" பக்கம் 12)
--

"முட்டாள்தனம்"
பத்து மாதத்து குழந்தையைக் கக்கத்தில் வைத்துச் சாமியைக்காட்டி
அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட இருபது வருஷத்து
மனிதனைப்பார்த்து, நீ கடவுளை கும்பிடுவது
முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
(13 ‍ 4 - 1930 "குடி அரசு" பக்கம் 9)
-
பெரியாரின் பொது வாழ்க்கை - ஒரு காலக் கணக்கு
.
பெரியாரின் பொது வாழ்க்கை - ஒரு காலக் கணக்கு1. வாழ்நாள்:
------------
ஆண்டுகள்: 94 (3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள்: 1131
வாரங்கள்: 4919
நாள்கள்: 34,433
மணிகள்: 8,26,375
நிமிடங்கள்: 4,95,82,540
விநாடிகள்: 297,49,52,400

2. சுற்றுப்பயணம்:
-----------------
நாள்கள்: 8200
வெளிநாடுகளில்: 392
தொலைவு: 8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப் போல் 3 மடங்கு.

3. கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
----------------------------
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700

கருத்துரை ஆற்றிய காலம்:
-------------------------
மணிகள் : 21,400
நாள்கணக்கில்: 891
நிமிடங்களில்: 12,84,000
வினாடிகளில்: 77,04,000

சிறப்புக் குறிப்பு:
-------------
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- தஞ்சை மருதவாணன், பெரியார்-பகுத்தறிவாளர் நாட்குறிப்பிலிருந்து (1984)