மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
.
.
ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.
முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.
கேட்டபோது சொன்னாள்
“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்
குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்
“அன்பு என்றால் இதுதான்”.
----------
மன்னை முத்துக்குமார்
ஒரு ஜென் கதை
-
-
ஒரு சமயம் ஜென் குரு ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வழிநடையாய் சென்று கொண்டு இருந்தார். அப்போது சற்று ஓய்வு எடுக்க விரும்பி கண்ணில் தென்பட்ட அந்த ஊர் அரண்மனைக்கு சென்று மன்னனிடம்,
இந்த சத்திரத்தில் கொஞ்ச நாள் நான் தங்கலாம் என்று இருக்கிறேன் , என்றார்.
அதற்கு மன்னன் " இது சத்திரம் இல்லை ஐயா , இது அரண்மனை " என்றார்.
அப்படியா? உங்களுக்கு முன் இங்கு யார் இருந்தார் ? ஜென் குரு கேட்டார்.
என் தந்தை. இப்போது அவர் இல்லை, இறந்துவிட்டார். என்று மன்னன் சொன்னார்.
அதற்கு முன் ? என்று குரு மீண்டும் கேட்டார்.
அதற்கு முன் என் தாத்தா வாழ்ந்தார் அவரும் இப்போது இல்லை. என்றார்.
அதற்கு ஜென் குரு பொறுமையாக -
ஓ...அப்படி சிலர் சில காலம் இந்த இடத்தில் வாழ்ந்து செல்லும் போது இது எப்படி அரண்மமையாகும் ... சத்திரம் தானே ?
-
மன்னர் விழித்தார்.
மன்னை முத்துக்குமார்
காரைக்கால்: காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோதினி என்ற இளம் பெண், தற்போது
மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டு வருகிறார். சென்னையில்
சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர்
காரைக்காலைச் சேர்ந்த வினோதினி
(23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24)
என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி,
வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும்
மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து
தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
வினோதினி.
பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட
பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. அவரது கால்
பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காரைக்காலில் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் அவரது
தந்தை, வினோதியின் மருத்துவ செலவிற்காக மிகவும் கஷ்டப்பட்டு
கொண்டிருக்கிறார்.
டாக்டர்கள் பல மாதங்கள் வினோதினி மருத்துவமனையில்
தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என கூறியிருப்பதால், அவர் நல்ல மனம்
படைத்தவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்
மன்னை முத்துக்குமார்
நீ இறக்கும் வரையில் உன் மதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று
ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன்,
“ஆம்…. மரணம் உண்மையை உரைக்கக் கூடியது. அப்போது, நான் சொன்னதைவிட செய்தது அதிகம் என்றும், செய்ததைவிட செய்யவிரும்பியது அதிகம் என்றும் தெரியவரும் , என்றான்.
-கலீல் ஜிப்ரான்.
ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன்,
“ஆம்…. மரணம் உண்மையை உரைக்கக் கூடியது. அப்போது, நான் சொன்னதைவிட செய்தது அதிகம் என்றும், செய்ததைவிட செய்யவிரும்பியது அதிகம் என்றும் தெரியவரும் , என்றான்.
-கலீல் ஜிப்ரான்.
மன்னை முத்துக்குமார்
உங்களுக்கு கருப்பு மூக்கு புத்தரை தெரியுமா?
புத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள்.
அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள்.
அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள் அவள் .
அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக்குள் பொறுத்தி விட்டாள். இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது.
இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.
நாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வது தான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம்.
இது போன்ற செயல்களை செய்கையில் புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன.
மன்னை முத்துக்குமார்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
-
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
-
--புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
மன்னை முத்துக்குமார்










