மன்னை முத்துக்குமார்

பெண் : சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்ப லில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு _ வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு _ அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்? 

ஆண் : இப்போ _ காடு வெளையட்டும் பொண்ணே _ நமக்குக்
காலமிருக்குது பின்னே (காடு
மண்ணைப் பொளந்து சொரங்கம் வச்சுப்
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தையெடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் _ ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

பெண் : மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே _ பசி
வந்திடக்காரணம் என்ன மச்சான்?

ஆண் : அவன் _ தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதனால் வரும் தொல்லையடி

பெண் : பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு _ இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

ஆண் : தினம் _ கஞ்சிகஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண் : வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

ஆண் : இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண் : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் _ மீதம்
உள்ளவரின் நிலைமை என்ன மச்சான்?

ஆண் : நாளை வருவதை எண்ணி எண்ணி _ அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலந்தானே மிச்சம்?

ஆண் : நானே போடப்போறேன் சட்டம் _ பொதுவில்
நன்மை புரந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் (நன்மை…
***
மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்

 அவர் தான் பெரியார் - பாவேந்தர் பாரதி தாசன்
-
-
இன்று ( 17/09/2013 ) தந்தை பெரியாரின் 135 வது பிறந்த நாள்…

என்னை என் நண்பர் ஒருவர் கேட்டார் ,
என்ன எப்பவும் பெரியார் பெரியார் என்று பெரிசா பேசுறீங்க அப்படி என்ன பெரிசா பன்னிட்டாரு அவர்’’ என்று.

அவருக்கு பெரியாரை தெரியும். அனால் ஆத்திகம் அவரை அப்படி கேட்க சொல்லுது .

பதில் சொல்வது பெரியாரின் பேரனாகிய என் கடமையல்லவா? 
நான் அவரிடம் கேட்டேன்.
 கொஞ்ச நாளைக்கு முன்பு விமான விபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் பேரு என்ன என்றேன். அவர் உடனே இது என்ன கேள்வி சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே ராஜசேகர ரெட்டி என்று என்றார்.

சரி ஆந்திராவின் அவருக்கு முன்னால் முதல்வரய் இருந்தவர் பேரு என்ன என்றேன். உடனே அவர் சந்திரபாபு நாயுடு என்றார்.

சரி நம் தமிழ்நாட்டு முதல்வர் பேரு என்ன என்றேன் , நண்பருக்கு சற்று எரிச்சல் என்றாலும் பதில் சொன்னார் ஜெயலலிதா என்றார், சரி முன்னால் முதல்வர் பேரு என்ன என்றேன் ,அவர் கருணாநிதி என்றார்.

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஜாதி உண்டு தான் என்றாலும் சாதி பின்னொட்டு இங்கு இல்லை. ஆனால் ஆந்திராவில் இருக்கு .
சாதி பின்னொட்டை பேருக்கு பின்னால் இருந்து எடுத்தவர் எங்கள் பெரியார் .அந்த அளவில் அவர் பெரியார் தானே என்றேன்.அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.

தமிழ்நாட்டில் இன்றும் முனுசாமி முனுசாமி ரெட்டியாக இல்லாமல் முனுசாமியாகவும், முத்துபாண்டி முத்து பாண்டி தேவராக இல்லாமல் முதுபாண்டியாகவும் இருக்க பெரியார் தான் காரணம் என்றால் அது மிகை அல்ல ..

அந்த சமூக புரட்சியாளருக்கு நாளை பிறந்த நாள் .

இன்று காலையில் கூட முகநூலில் யாரோ ஒருவர் எழுதி இருந்தார் மதத்தின் பெயரால் கலவரம் வடக்கே நடக்க காரணம் பெரியாரின் கொள்கைகள் அங்கே போய் சேராதது தான் என்று எத்தனை உண்மையான வாக்கியம் அது.

17-09-1879 இது தமிழனுக்கு மானத்தையும் அறிவையும் புகட்ட பகலவன் அவதரித்த நாள்...

தமிழனுக்கு மானத்தையும் அறிவையும் போதித்து சாதி மத சாக்கடையிலிருந்து மீட்டு எங்களை மனிதனாக இந்த மண்ணில் வாழ வைத்த ஐயா பெரியாரை வணங்கி மகிழ்கிறோம். 
.
300
மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்

அவளை 
இப்போது 
பார்த்தாலும்
கேட்கத் தோணும்,

கணக்கு புத்தக 25 ம் பக்கத்தில்
அடை வைத்த 
மயிலிறகு
குட்டி போட்டதா ?
என்று !
*
- மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

பெரியார் தாசன் என்று முற்போக்கு சிந்தனையாளர்களால் பெரிதும் அறியப்பட்டவரும் , கருத்தம்மா என்ற படத்தில் அறிமுகமாகி அதே படத்திற்கு சிறந்த குணசித்திர நடிகர் என்று தேசிய விருதினை பெற்றவரும் , தத்துவவியல் பேராசிரியரும், தனது அறிவுக்கெட்டிய வகையில் கடவுளே இல்லையென்றவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவி, தன் பெரியார் தாசன் என்ற பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றியவருமான தோழர் பெரியார் தாசன் இன்று நம்மிடம் இல்லை. அவரது பகுத்தறிவு முழக்கத்தால் தெளிவு பெற்றவர்களில் நானும் ஒருவனாய் அவரை இழந்து வருந்துகிறேன்.

ஆழ்ந்த இரங்கல் ... ;-(
மன்னை முத்துக்குமார்



‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.

‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.

கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.

ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்..

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.
 - அப்துல் ரகுமான்.



மன்னை முத்துக்குமார்
பாரதியாரிடம் ஒருமுறை ஒருவர் கேட்டாராம்,

ஏன்டா சுப்பு, பிரம்மனோட வாயில் இருந்து பிறந்தவன் பிராமணன்,நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்திரியன் (அரசர்கள்) வயிற்றில் இருந்து பிறந்தவன் வைஷ்யன், காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் -ன்றானுங்களே,

இந்த பஞ்சமன் எங்கிருந்து -டா பிறந்தான் ? னு கேட்டாராம்.

அதுக்கு பாரதியார் –அதுவாய்யா… அவன் ஒருத்தன் தான் அவன் அம்மா அப்பா வுக்கு பிறந்தான் -ன்னாராம்.

கேட்டவர் ஓடியே விட்டாராம். 
***

மன்னை முத்துக்குமார்

போன
வேகத்தில்
திரும்பின
சொந்த தேசத்து
பறவைகள் ;

இன்னும்
துளிர்விட மறந்த
மரங்களும் , மனிதர்களும்
அங்கே !
*
- மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.

முதல் தெய்வம் அறிவு;
இரண்டாவது தெய்வம் சுயமரியாதை;
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.

இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை .
*
- அண்ணல் அம்பேத்கர்.