மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்
சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா!
பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா!
இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியம் ஆனதடா..
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா!
ஒளி வீசுது சூரியனே யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்துவிடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்
-கவிப் பேரரசு வைரமுத்து