மன்னை முத்துக்குமார்
.
வண்ணத்துப் பூச்சியை பிடித்து
முத்தமிட்டு பறக்கச் செய்து
அழகு பார்த்த அதே மனசு தான் ;

ஓணானை பிடித்து
புகையிலை திணித்து ஆடவும் செய்தது !

எல்லாம் நிறைந்தது
குழந்தை பருவம்.

எது சரி , எது தவறென புரிந்த பின்
ஏனோ வாழவும் மறந்து போனோம் !

-மன்னை முத்துக்குமார்.