மன்னை முத்துக்குமார்
 நீ
பார்க்கும்
அந்த கோப
பார்வையே போதும்.
வேறெதுவும் தேவையில்ல.

உரிமையுள்ள
இடத்தில் தான்
கோபப் பட முடியுமாமே ?
*
~ மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளை பெற்றதப்பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை யாவும்
ஒரு தரமன்றோ..

இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றமென்றும்
சொல்லலாமோ..

சாதி பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்

சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் செழித்திடும் வையம்...
-


***


மன்னை முத்துக்குமார்
*
வெடி சத்தத்துக்கு கூட
குலை நடுங்கி போகிறது
புகலிடம் வந்த பறவை !
**
.
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

நம்ம ஊர் கணிப்பொறி வல்லுநர் அமெரிக்காவிற்கு தொழில்முறை பயணம் சென்றார்.அங்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கணினி மூலம் மறு வாரம் அங்கு வரவிருக்கும்தன் மனைவிக்கு மின்-அஞ்சல் அனுப்ப முடிவு செய்தார்.பயண அசதியால் மனைவியின் மின்-அஞ்சல் முகவரியை தவறாக பதிவு செய்ததை அறியாமல் அஞ்சலை அனுப்பினார்.

இதற்கிடையே இறந்த தனது கணவனின் இறுதி காரியத்தை முடித்து வீடுதிரும்பிய பெண் ஒருவர் தன் கணவன் மரணத்திற்கு வந்த துக்க விசாரிப்புகளை காண தனது மின்-அஞ்சல்கள் முகவரியை திறந்தார்.வந்த மின்-அஞ்சலை கண்டு கதறி அழுதார்.அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கணினித்திரையில் அந்தஅதிர்ச்சி செய்தியை கண்டனர்.

To: My Loving Wife

Subject: I've reached

I know you're surprised to hear from me. They have computers here, and we are allowed to send e-mails to loved ones. I've just reached and have been checked in. I see that everything has been prepared for your arrival nextweek.
------------
மன்னை முத்துக்குமார்


100 சதிவீத தேர்ச்சி என்று மார்தட்டி கொள்வதெல்லாம் சரி. அது மட்டும் தான் கல்வியா ? மருத்துவம் பொறியியல் கல்விக்கு கட் ஆப் மார்க்கை குறி வைத்து 11 ம் வகுப்பு படிக்கும் போதே 12 ம் வகுப்பு பாடத்தை சொல்லிக் கொடுத்து மனனம் செய்ய பழக்கப்படுத்தி சுயமாக சிந்திக்க விடாமல் செய்யும் கல்வி எப்படி நல்ல கல்வியாக கூடும்?

சரி வாங்க நாம் கதைக்கு போவோம்...ஒரு ஜென் கதை.


ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.

அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே…

எனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் குருவின் இந்த ‘வேகம்’ மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே இருக்கிறாரே’ என்று குற்றம் சாட்டினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து ‘அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் வை’ என்றார்.

விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன், அதன் கனம் தாங்காமல் தடுமாறி விழுந்தான். எழுந்து கையைத் தட்டிக் கொண்டு, ‘தூக்க முடியவில்லை குருவே… மிகவும் கனமாக உள்ளது’ என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

‘சரி… அந்தக் கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு போய் வை’ என்றார் ஞானி.

அட… நான்கைந்து முறை எடுத்து வைத்ததில், விறகுகள் விரைவில் இடம்பெயர்ந்தன!

உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன் மூளைக்குள் திணித்தால் நீ திணறி விழுந்துவிடுவாய். கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால் அது நிரந்தரமாக உன் மனதில் தங்கிவிடும்.. நீ கற்ற கல்வி தரமாகவும் இருக்கும்’ என்று விளக்கினார் ஞானி.

மாணவனுக்கு மிக நல்ல பாடமாக அது அமைந்தது!
-----------------

தொடர்ந்து ஞானி இப்படிச் சொன்னார்…

நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள்.

ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்…

ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோல் மேல் போட்டு கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது.

எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர்.

ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.

எப்படி?

‘இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.

பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.

அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும். ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும். இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல. படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார்.

*
மன்னை முத்துக்குமார்

குழந்தைகளற்ற வீடு
யாருமில்லா பூங்கா
காதலில்லா காதலர்கள்
எல்லாம் வீண் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்


பாலவர் பள்ளியில்
சத்துணவுக்காக குழந்தை

வயலில் சிந்தியது
தாய்ப்பால் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
*
செய்யப் போகும் கொலைக்கு
முன் கூட்டியே தண்டனை
ஒற்றைக் காலில் கொக்கு !
**
~ மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்

பலத்த மழை
விளைந்த பயிர்
வீண் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
எனக்கு பிடித்த இளையராஜாவின் திரைப்பட பாடல்கள் யூ டியூப் பில் கிடைக்கிறது.  நீங்களும் கேட்டு ரசிங்க.

.