மன்னை முத்துக்குமார்

ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன் அமைச்சரிடம் படித்துக் காட்டினான். அமைச்சர் சொன்னார்,”இவை மோசமான மொக்கை கவிதைகள் உங்களால் முடியாத காரியத்தில் ஏன் மன்னா தலையிட வேண்டும்?” என்று கேட்டார். 

மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.

சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பி காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.

”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.

”கழுதை லாயத்திற்கு”என்றார் அமைச்சர்.
மன்னை முத்துக்குமார்




புத்தரால் தோற்றுவிக்கப் பெற்றதால் சமயம் பௌத்தம் எனப்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்த சித்தார்த்தர் கடுமையான தவம் மேற்கொண்டு புத்தர் ஆனார். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்று அவர் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு அளித்தார்.

புத்தரான பிறகு ஒருநாள் அவர் அரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதை என்பவள் அவருக்குப் பால் உணவு ஒன்றை அளித்தாள். பசுக்களில் சிறந்த பசுவைத் தேர்ந்தெடுத்து, அதன் பாலைக் கறந்து அதைப் பலமுறை பக்குவம் செய்து சுவை சேர்த்து உலகத்தில் எங்கும் கிடைக்காத உணவாக அதை உருவாக்கியிருந்தாள். புத்தர் அதனை அருந்தினார். அவரிடம் உணவின் சுவையைப் பற்றிக் கேட்டார். புத்தர் புலன்களுக்கு அடிமையாகாதவராக இருந்ததனால் அந்த உணவு அவரைப் பெரிதும் கவரவில்லை. எனினும், நன்றாக இருந்தது என்று கூறினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரை சுந்தன் என்ற வேடன் விருந்துக்கு அழைத்தான். வருவதாகப் புத்தரும் வாக்குறுதி கொடுத்துவிட்டார். விருந்தின் போது என்ன உணவு செய்திருக்கிறாய்? என்று கேட்டார். நல்ல பன்றியை நான் உணவாக்கி வைத்திருக்கிறேன் என்று சுந்தன் கூறினான். வாக்குறுதி கொடுத்துவிட்ட புத்தரால் அதனை மீற முடியவில்லை. பற்று இல்லாமல், சுவைக்கு அடிமை ஆகாமல் அந்த உணவை உட்கொண்டார்.

இரவில் வயிற்றுவலியால் புத்தர் துடித்தார். இறப்பு அவரை நெருங்கியது. அப்போது தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தர் என்ற சீடரிடம்

“புத்தருக்கு சுஜாதை அளித்த பாலுணவும், சுந்தன் கொடுத்த இறைச்சி உணவும் ஒன்றுதான். புத்தரின் இறப்புக்கு சுந்தன் அளித்த உணவு காரணமில்லை என்று கூறுங்கள்” என்று கூறினார்.

இவ்வாறு எதையும் ஒரு பற்றில்லாமல் அணுகும் வாழ்க்கை முறையைப் பௌத்தம் வகுத்துத் தந்தது.
மன்னை முத்துக்குமார்

 
ஒரு காட்டில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பலத்த போர். காடு யாருக்குச் சொந்தமென்று. பல நாட்கள், மாதங்கள் நடைபெறுகிறது போர். ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் ஜெயிக்கிற மாதிரி
ஒரு சூழல் வருகிறது. பறவை

க்கூட்டத்தில் இருந்த வௌவால் இதைக் கணிக்கிறது. உடனே பறந்து விலங்கின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைக்கிறது.

வௌவாலைத் தடுக்கிற பறவைக்கூட்டணி. ‘நீ செய்வது நியாயமா’ என்று கேட்கிறது.

பறவைக்கூட்டணி தன்னைப் பார்த்து அவ்வாறு கேட்டதும் வௌவால் சொன்னது: ‘நானென்ன உங்களைப் போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறேனா? நான் குட்டியிட்டு பாலூட்டுகிறேன். பாலூட்டுவதால் நான் விலங்கினம்’ என்று சொல்லிவிட்டு விலங்குக் கூட்டணியில்… ச்சே. கூட்டத்தில் சேரப் பறந்தோடியது. போரில் வெல்ல எவர் வந்து கூட்டத்தில் சேர்ந்தாலும் சேர்த்துக் கொள்வோமென விலங்கினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது.

போர் தொடர்ந்தது. இரு தரப்பும் சம பலத்தில் இருக்க, இப்போது பறவையினம் ஜெயிக்கிறாற்போல ஒரு தோற்றம். பயந்தது வௌவால். சடாரெனப் புறப்பட்டது பறவைக் கூட்டத்தில் சேர. தடுத்த விலங்கினத்திடம் கூறியது: ‘நானென்ன உங்களைப் போல நாலு காலால் நடக்கிறேனா? இதோ பாருங்கள்.. இறக்கை இருக்கிறது.. பறக்கிறேன். பறப்பதால் நான் பறவையினம்!’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது. கூட்டணி தர்மத்தில் பறவையினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது!

மீண்டும் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் போர் தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்த வனதேவதை சடாரென இரண்டு தரப்பினரின் முன்பும் தோன்றினாள்.

“இதோ பாருங்கள்…. இந்தக் காடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால் அதை மூட்டை கட்டி வையுங்கள். இந்தக் காடு எனக்குச் சொந்தம். இதில் நீங்கள் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இப்படி சண்டையிடுவீர்களேயானால் இப்போதே இந்தக் காட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்றது கண்டிப்பான குரலில்.

வனதேவதையின் உக்கிரத்தைக் கண்ட விலங்கினமும், பறவையினமும் தங்கள் போரை நிறுத்திக் கொள்வதென தீர்மானித்தன. போரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஒற்றுமையாக காட்டின் நலனுக்காக உழைப்பது என முடிவெடுத்தன.

இப்போது திண்டாடியது வௌவால். பறவையினம் ‘நீ என்ன எங்களைப் போல முட்டையிட்டா குஞ்சு பொரிக்கிறாய்? போ.. போ.. விலங்குகளுடனே வாழ்’ என்று துரத்த விலங்கினமோ ‘நீ இறக்கையெல்லாம் வைத்துக் கொண்டு பறக்கிற பறவையல்லவா.. போ.. போ… பறவைக் கூட்டத்தில் சென்று வாழ்’ என்று துரத்தின.

சந்தர்ப்பத்திற்காக மாறி மாறி கூட்டு சேர முற்பட்டதால் இரண்டு புறமும் சேர முடியாத வௌவால், அவமானத்தால் பகலில் தலைகாட்ட இயலாமல் பகல் முழுதும் தலைகீழாகத் தொங்கி இரவு மட்டுமே இரை தேடி, உண்ணும் வாய் வழியாகவே மலமும் கழிக்கிற அவல நிலைக்கு ஆளானதாம்!

இது லியோ டால்ஸ்டாய் சொன்ன கதை
மன்னை முத்துக்குமார்
ஒரு பாடதிட்டம், அதுக்கு கால அவகாசம் , தேர்வு, கொடுத்த புத்தகத்தில் இருந்து மட்டுமே கேள்வி, 100 /100 இது கல்வியா ? கதையை படிங்க...

ஒரு ஊரில் இரண்டு குருக்களுக்கிடையே சில பரம்பரைகளாகவே கடும் பகை இருந்தது.அந்த இருவரிடமும் இரு சிறுவர்கள் சந்தைக்குப் போவது போன்ற சில்லறை வேலைகள் பார்க்க பணியமர்த்தப் பட்டிருந்தனர். குருக்கள் அந்த சிறுவர்களிடம் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்று ஆணை இட்டிருந்தனர்.ஆனாலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனம் மிகுந்தவர்கள் ஆதலால் வழியில் சந்தித்தால் பேசிக்கொள்வர்.

 ஒரு நாள் ஒருவன் மற்றவனிடம்,”எங்கே போகிறாய்?”என்று கேட்டான். அடுத்தவன் பதில் சொன்னான்,”காற்று எங்கே இழுத்து செல்கிறதோ,அங்கே,”என்றான். கேள்வி கேட்டவனுக்கு புரியவில்லை.எனவே தன் குருவிடம் இதுபற்றி கேட்டான்.அவனிடம் பேசியதற்குக் கோபப்பட்ட குரு,”இருந்தாலும் இது மானப்பிரச்சினை.அவனை வெற்றி கொள்ள விடக்கூடாது.நாளை அவனிடம் இன்று போலவே பேசு. அவன் நேற்று சொன்ன பதிலையே சொல்வான்.உடனே நீ,காற்று வீசாத போதுஎன்ன செய்வாய் என்று கேள்,”என்றார்.

சிறுவனும் அடுத்தவனை வழியில் பார்த்தபோது,”நீ எங்கே செல்கிறாய்?”என்று கேட்க,அவன் சொன்னான்,”கால்கள் எங்கே அழைத்து செல்கிறதோ,அங்கே,”என்றான். இவனுக்கு சிரமமாகி விட்டது.தன் தயாரான பதிலை கூற முடியவில்லை.வாட்டத்துடன் திரும்பி வந்த சிறுவனைப் பார்த்த குரு,நடந்த விபரம் கேட்க , அவனும் சொன்னான்.அவர் சொன்னார், அந்தப் பையன் அந்தக் கூட்டத்தாருக்கே உள்ள வஞ்சகத்துடன் பேசியுள்ளான்.நாளை இதுபோல கால்கள் எங்கே போகிறதோ,அங்கே போகிறேன் என்று சொன்னால்,நீ நொண்டியாகி விட்டால் என்ன செய்வாய் என்று கேள்.அவனை நீ பேச முடியாமல் தோற்கடிக்க வேண்டும்,”

அடுத்த நாளும் இவன் அவனைப்பார்த்து எங்கே போகிறாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்,”காய்கறி வாங்க சந்தைக்கு செல்கிறேன்.” மனம் வருந்தியவனாகக் கோவிலுக்கு திரும்பிய இவன் நடந்ததைக் கூறி ”நான் ஒவ்வொரு முறையும் தயாரான பதிலுடன் செல்கிறேன்.ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் மாறி மாறிப் பேசுகிறான்.அந்தப் பையனின் வாயை அடைப்பது சிரமமாக இருக்கிறது,”என்றான்.

வாழ்க்கையும் இவ்வாறே ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது.நீங்களோ தயாரான பதிலை ஏந்திக்கொண்டு அதனிடம் செல்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தவற விடுவதெல்லாம் இத்தகைய தயாரான பதிலைக் கொண்டுதான்.
மன்னை முத்துக்குமார்
 
மன்னை முத்துக்குமார்
தருமபுரியைச் சேர்ந்த வன்னியர் இன ப் பெண்ணும் அப்பகுதி தலித் இளைஞர் ஒருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது கலவரத்தில் முடிந்திருக்கிறது.

அந்தத் திருமணத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள், விஷமிகளால் தீவைக்கப்பட்டிருக்கிறது.
.
அந்த மக்கள் அண்டையிலுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுவரை 15 பேர் தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது நிலை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

திவ்யா என்ற பெண்ணும் இளவரசன் என்பவரும் சில காலம் காதலித்து வந்திருக்கின்றனர், குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்க, தாங்களாகவே திருமணம் செய்துகொண்டு சேலம் போலீசாரிடம் தஞ்சமடைந்திருக்கின்றனர். போலீசார் பாதுகாப்பளிப்பதாக உறுதியளித்தனர்.
 
ஆனால் வன்னியர் இனத் தலைவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கத் தயாரில்லை. மாறாக அவர்கள் தலித் சமூகத்தினர் பெண்ணை அவரது பெற்றோரிடம் “ஒப்படைக்கவேண்டுமென” உத்தரவிட்டதாகவும், ஆனால் அந்தப் பெண் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டதாகவும், இந்நிலையிலேயே திவ்யாவின் தந்தை நாகராசன் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
.
வன்னியர்கள் தலித்மக்கள் வாழும் நத்தம் காலனியைச் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகவும், மிரண்டுபோய் வெளியேறியவர்கள் இரவெல்லாம் கடும் குளிரில், திறந்தவெளியில் தங்க நேரந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று் மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞர் வன்னியர் பெண்ணை காதல் திருமணம் செய்த பிரச்சினையில் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதற்கு அங்கு நிலவும் கட்டைப்பஞ்சாயத்து கலாச்சாரமே காரணம் என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் இயக்குநர் அ கதிர்.
.
தருமபுரி கலவரம் தொடர்பில் அவரது நிறுவனத்தின் உண்மை அறியும் குழுவினர் கண்டறிந்த விவரங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு அ கதிர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.


           
   
           
   
           
   
           
   
           
   
           
           
           
   
       

-
நன்றி
http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121108_dharmapuriviolence.shtml
மன்னை முத்துக்குமார்
புத்தர் தன் சீடர்களிடம்,”ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?”என்று கேட்டார்.

ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர் அறுபது என்றார்,மற்றொருவர் ஐம்பது என்றார்.அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,சரியான விடையை அவரே சொல்லும்படி அனைத்து சீடர்களும் வேண்டினர்.

புத்தர் புன் முறுவலுடன் சொன்னார், ”ஒரு மூச்சு விடும் நேரம்”என்று .

சீடர்கள் வியப்படைந்தனர்.”மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?” என்றனர்.”உண்மை.மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்.”என்றார் புத்தர்.

பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.அதை முழுமையாக வாழ வேண்டும்
மன்னை முத்துக்குமார்
தமிழ் சினிமா இயக்குனர்களில் மிகப் பெரிய ஆளுமை மகேந்திரன்

அவரது “மெட்டி“ படம் அதற்கு ஒரு சான்று .. தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு அவரது படங்களே இலக்கணம். அவரை ஒரு முறை படித்தால் மொக்கை படங்களை தவிர்க்கலாம். முதலில் மகேந்திரனை படியுங்கள் . பிறகு திரைப்படம் இயக்க தொடங்குங்கள்.
-
மன்னை முத்துக்குமார்
 அகிரா நிதிலன் இயக்கியுள்ள புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்....அற்புதமான குரும்படம். அகிரா நிதிலன் தமிழ் சினிமாவில் தனக்கென் ஒரு இடத்தை பிடிப்பார். மகேந்திரனின் , பாரதிராஜாவின் அடுத்த தலைமுறை இயக்குனர். தமிழ் சினிமாவினை உலக சினிமாக்களுக்கு முன் மாதிரி ஆக்குவார். இந்த குரும்படத்தை பாருங்க..என்னைப்போல நீங்களும் அழுவீங்க.
-

மன்னை முத்துக்குமார்
அண்ணல் அம்பேத்கரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனையும் அரசு இரும்பு கம்பி கூண்டுக்குள் வைப்பதன் பொருள் என்னவாக இருக்க முடியும்?

அவர்கள் யார் என்று அறிந்துக்கொள்ள முடியாமல் இறந்தும் அவர்களை கண்டு அச்சமுற செய்யும் அளவுக்கு அவர்களை கொடியவர்களாக கருதும் அறிவீலிகள் நிறைந்தது தமிழ்நாடு என்று தானே பொருள்?

# தேவை அடிப்படை கல்வி. இரும்புக்கூண்டுகள் அல்ல !