மன்னை முத்துக்குமார்


ரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.

எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு தோற்றுவிட மாட்டோம் என்ற அசாத்திய ந

ம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை சிறிதும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் போர். போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.

இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”

“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”

நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.

தலை…!

வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.

அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!

துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.

“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
                             நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!
                                             ------
மன்னை முத்துக்குமார்
ஒரு ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் வசதி வாய்ப்புக்களுக்கு குறைவே  இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் மகிழ்ச்சியும்.  நிம்மதியும் தான் இல்ல.
-

சரி, உள்ளூர்லதான் மகிழ்ச்சி  கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. ரெங்குப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!

சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல.

சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.

உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.

அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், மகிழ்ச்சியும் தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.
.
எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.

அதில் கட்டித் தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.

அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!
.
அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்னப்பா  பயந்துட்டியா…  இந்தா  உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.

சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.

இப்போது அந்த துறவி கேட்டார்.
-
“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!
  
எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!
மன்னை முத்துக்குமார்
 

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்

சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா!
பசியால் பல ஏழைகள் சாவது என்பது தேசியமானதடா! 

இனி தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் ஜோசியம் ஆனதடா..
அட சாட்டைகளே இனி தீர்வுகள் என்பது சூசகமானதடா!

ஒளி வீசுது சூரியனே யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியில்லா புது வேள்வியினால் இனி சோதனை தீர்ந்துவிடும் 

சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும்
அட சாமரம் வீசிய பாமர சாதிகள் சாதனை கண்டுவிடும்

-கவிப் பேரரசு வைரமுத்து
மன்னை முத்துக்குமார்
மனுதர்மம், அர்த்தசாஸ்திரம், பகவத்கீதை ஆகிய மூன்று நூல்களால் சாதியம் இந்தியர் மூளையில் வலுவாக விதைக்கப்பட்டது என்பதே உண்மை.

எனவேதான் ஒரு கட்டத்தில், “என் கைகளில் மட்டும் அந்த மனு கிடைத்திருப்பானாகில் அவனை அப்படியே கடித்துக் குதறி இருப்பேன்”

ஆனால், அவனுடைய ஆவி வடிவம் அல்லவா சாதி அமைப்பு முறையை இன்றளவும் பாதுகாத்து வருகிறது’’ எனச் சீறிச் சினந்து டாக்டர் அம்பேத்கர் கூறியது எத்தனை உண்மை ?
மன்னை முத்துக்குமார்
சாதி
 மதம் 
என்ற
 சாக்கடையைக்
காண
 விரும்பாததால் தான் 
காதல் 
“ கண்மூடி” 
தனமானது !

மன்னை முத்துக்குமார்
அம்பேதக்ருடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான பாகுபாட்டுக்கு எதிராக காந்தியும் செயல்பட்டார். இவ்விரு தலைவர்களும் எதில் வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தார்கள்?

காந்தி, தீண்டத்தகாத மக்களின் நண்பர் அல்லர் .

தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக இந்திய மக்களை உணர்வுவயமாக ஈர்த்தவராக இருந்தாலும்,    காந்தியினுடைய சாகும்வரை பட்டினிப் போராட்டம்தான் – தீண்டத்தகாத மக்கள் தேர்தலில் தங்களுக்கான பிரதிநிதிகளை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை அவர்களிடமிருந்து பறித்தது. 

அவர் ஒரே நேரத்தில் எங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்து கொண்டார்

 பாபாசாகேப் அம்பேத்கருடன் ஓர் இணை ஆய்வாளராகப் பணியாற்றியவர் பகவான் தாஸ் Thus Spoke Ambedkar  என்ற தலைப்பில் நான்கு தொகுப்புகளை 1970களிலேயே கொண்டு வந்த இவர், 'டைம்ஸ் ஆப் இந்தியா' (15.4.2009) நாளேட்டுக்கு அளித்த பேட்டி.
மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்
குழந்தைகளின் 
கோபத்தில் 
நியாயம் 
இருக்கிறதோ 
இல்லையோ 
அழகு 
இருக்கிறது .

மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்

-
மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா
ஒன்னைப்போல அவனைப்போல
எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுஷங்கடா

- டேய் மனுஷங்கடா

ஒங்க தலைவர் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

ஒங்க ஊர்வலத்துல தரும அடிய வாங்கிக்கட்டவும்
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்
நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
- டேய் மனுஷங்கடா

எங்களோட மானம் என்ன தெருவுல கெடக்கா
ஒங்க இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின் கணக்கா
ஒங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க வீடு புகுந்தா ஒங்க மானம் கிழிஞ்சி போகாதா
- டேய் மனுஷங்கடா

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
- டேய் மனுஷங்கடா

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்கப்போனீங்க
- டேய் மனுஷங்கடா
------------------------
                                   மக்கள் பாவலர் தோழர்    " இன்குலாப் "
மன்னை முத்துக்குமார்
ஒரு கணக்கர் தனது அதிகாரியிடம் சார், எனக்கு ஒரு நாலு நாள் லீவு வேணும். இது நாள் வரை நான் லீவே எடுத்ததில்லை. கொஞ்ச ஓய்வு எடுத்துக்கலாம் -னு இருக்கேன் என்றாராம்.

அதிகாரி சிரிச்சிகிட்டே , சரி லீவு எடுத்துக்கோங்க. என்றாராம். கணக்கரும் மகிழ்சியோடு நான்கு நாள் விடுப்பு எழுதி கொடுத்துட்டு வீட்டுக்கு போனாராம்.

அடுத்த நாள் கணக்கரின் மனைவி , என்னங்க சும்மா தானே இருக்கீங்க இந்த மாவை
கொஞ்சம் ஆட்டுக்கல்லுல போட்டு ஆட்டி கொடுங்க என்றாளாம். கணக்கு பிள்ளையும் செய்தார்.

அடுத்து என்னங்க ,சும்மா தானே இருக்கீங்க கொஞ்ச ரேசன் கடைக்கு போயிட்டு வந்துடுங்க, அதையும் முடித்தார் கணக்குபிள்ளை.

மாலை நேரம் , என்னங்க துணியெல்லா அயனிங்க் கொடுத்துருக்கேன் வாங்கி வந்துடுங்க. வந்தார்.

என்னங்க சும்மா தானே இருக்கீங்க , வீட்டை கொஞ்சம் ஒட்டடை அடுச்சி கொடுங்க, செய்தார். நான்கு நாள் லீவு கேட்டவர் மறுநாள் அலுவலகம் வந்து நின்னார்

அதிகாரி அப்பவும் சிரிச்சாராம்.
மன்னை முத்துக்குமார்
 
”தேனீ “ கிட்ட ஒரு பறவை , இவ்வளவு கடின உழைப்பால் நீ சேமிக்கும் தேனை மனிதர்கள் திருடிட்டு போயிடுறாங்களே அதுக்காக நீ வருந்த மாட்டியா?  என்றது.

அதற்கு ,தேனீ நான் ஏன் வருந்த வேண்டும்? நான் சேமிக்கும் தேனை வேண்டுமானால் மனிதர்கள் திருடிச் செல்ல முடியும், ஆனால் ஒரு போதும் பூவிலிருந்து தேனை எடுத்துச் சேமிக்கும் கலையை அவர்களால் திருட முடியாது , என்றதாம்.
மன்னை முத்துக்குமார்

நரேஷ்  ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

  நரேஷ்  தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.

வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.

பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது கணிணியை  திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். கணிணி இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.

அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.
                                                                            
                                                                           இப்படிக்கு உன் அன்புக் கணவன்
.
--
நன்றி : இணையம் .
மன்னை முத்துக்குமார்
ஆங்கில நாடக ஆசிரியரான ஷெரிடன், பார்லிமெண்டில் ஒருமுறை பேசியபோது,

இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப் பேர் கழுதைகள்” என்றார்.

நீ பேசியதை வாபஸ் வாங்கு” என்று உறுப்பினர்கள் கூச்சலிட்டார்கள்.

கூச்சலை அடக்கி, ஷெரிடன் அமைதியாக,
"மன்னிக்க வேண்டும். இந்தப் பார்லிமெண்டில் உள்ளவர்களில் பாதிப்பேர் கழுதைகள் அல்ல" என்றார்.
மன்னை முத்துக்குமார்

ஒப்பனைகளோடு வாழும் வரை உண்மை முகம் உலகுக்கும் உனது பலம் உனக்குமே தெரியாது போய்விடும்.

மன்னை முத்துக்குமார்
 ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள். மரண படுக்கையில் இருக்கும் பொழுது மூன்று பேரையும் அழைத்து சொன்னார், எனது சொத்து முப்பது கோடி. நான் உங்களுக்கு சமமாக அளிக்கிறேன். அனால் ஒரு நிபந்தனை. நான் இறந்ததும் என்னை புதைக்கும் பொழுது, அதில் சரியாக பாதியை ஒவ்வொருவரும் என் கல்லறைக்குள் போட வேண்டும். அப்போது தான் அடுத்த பிறவியிலும் நான் பணக்காரனாக வாழ முடியும் என்றார்.

அனைவரும் சம்மதித்தனர்

ஒரு நாள் அவர் இறந்து போனார். காரியங்கள் முடிந்த பின்பு மகன்கள் பேசி கொண்டார்கள்.

'நீ அப்பா சொன்ன மாதிரி பணத்தை அவரது கல்லறையில் புதைத்தாயா ?

முதல் மகன் : நான் ஒரு கோடி போட்டேன்.

ரெண்டாவது மகன்: நானே பரவாயில்லை. மூணு கோடி போட்டேன். நீ என்னை விட மோசம்.

மூன்றாவது மகன்: நீங்கள் ரெண்டு பேரும் அப்பாவுக்கு குடுத்த சத்யத்தை மீறி விட்டீர்கள். நான் அப்படியில்லை. அப்பா அஞ்சு கோடி தான் கேட்டார். ஆனாலும் நான் அப்பா கொடுத்த பத்து கோடிக்கும் ஒரு செக் எழுதி போட்டுட்டேன்.

மன்னை முத்துக்குமார்
கொலம்பசைப் பாராட்டி நடைபெற்ற விருந்து ஒன்றில் அவர்மீது பொறாமை கொண்ட சிலரும் கலந்து கொண்டனர். அவர்களுள் ஒருவர், கொலம்பஸ் மட்டுமல்ல, வேறு யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திருந்தாலும் புதிய நாடுகளைக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று கூறினார்.


இதனைக் கேட்ட கொலம்பஸ், விருந்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றினை எடுத்தார். சொன்னவரிடம் கொடுத்து, இதைச் செங்குத்தாக மேசையின்மேல் நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம் என்றார். நிறுத்தி வைத்துப் பார்த்து முடியாமல், உங்களால் செங்குத்தாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று கொலம்பசைக் கேட்டார்.

முட்டையை வாங்கிய கொலம்பஸ் குறுகலான பகுதியை மேசையின்மீது மெதுவாகத் தட்டினார். முட்டையில் சிறிய பள்ளம் விழ, முட்டை மேசையின்மீது செங்குத்தாக நின்றது. எதிரில் இருந்தவர், இப்படிச் செய்வது என்றால் நானும் செய்திருப்பேனே என்றதும்,

எந்தக் காரியத்தையும் ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். முதல்முறையாக அதைச் செய்வதற்குத்தான் மூளை வேண்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் கொலம்பஸ்.
மன்னை முத்துக்குமார்

ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன் அமைச்சரிடம் படித்துக் காட்டினான். அமைச்சர் சொன்னார்,”இவை மோசமான மொக்கை கவிதைகள் உங்களால் முடியாத காரியத்தில் ஏன் மன்னா தலையிட வேண்டும்?” என்று கேட்டார். 

மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.

சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பி காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.

”எங்கே போகிறீர்?”என்று அரசன் கேட்டான்.

”கழுதை லாயத்திற்கு”என்றார் அமைச்சர்.
மன்னை முத்துக்குமார்




புத்தரால் தோற்றுவிக்கப் பெற்றதால் சமயம் பௌத்தம் எனப்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்த சித்தார்த்தர் கடுமையான தவம் மேற்கொண்டு புத்தர் ஆனார். ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்று அவர் உணர்ந்த உண்மையை உலகத்திற்கு அளித்தார்.

புத்தரான பிறகு ஒருநாள் அவர் அரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தபோது சுஜாதை என்பவள் அவருக்குப் பால் உணவு ஒன்றை அளித்தாள். பசுக்களில் சிறந்த பசுவைத் தேர்ந்தெடுத்து, அதன் பாலைக் கறந்து அதைப் பலமுறை பக்குவம் செய்து சுவை சேர்த்து உலகத்தில் எங்கும் கிடைக்காத உணவாக அதை உருவாக்கியிருந்தாள். புத்தர் அதனை அருந்தினார். அவரிடம் உணவின் சுவையைப் பற்றிக் கேட்டார். புத்தர் புலன்களுக்கு அடிமையாகாதவராக இருந்ததனால் அந்த உணவு அவரைப் பெரிதும் கவரவில்லை. எனினும், நன்றாக இருந்தது என்று கூறினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு புத்தரை சுந்தன் என்ற வேடன் விருந்துக்கு அழைத்தான். வருவதாகப் புத்தரும் வாக்குறுதி கொடுத்துவிட்டார். விருந்தின் போது என்ன உணவு செய்திருக்கிறாய்? என்று கேட்டார். நல்ல பன்றியை நான் உணவாக்கி வைத்திருக்கிறேன் என்று சுந்தன் கூறினான். வாக்குறுதி கொடுத்துவிட்ட புத்தரால் அதனை மீற முடியவில்லை. பற்று இல்லாமல், சுவைக்கு அடிமை ஆகாமல் அந்த உணவை உட்கொண்டார்.

இரவில் வயிற்றுவலியால் புத்தர் துடித்தார். இறப்பு அவரை நெருங்கியது. அப்போது தனக்குப் பக்கத்திலிருந்த ஆனந்தர் என்ற சீடரிடம்

“புத்தருக்கு சுஜாதை அளித்த பாலுணவும், சுந்தன் கொடுத்த இறைச்சி உணவும் ஒன்றுதான். புத்தரின் இறப்புக்கு சுந்தன் அளித்த உணவு காரணமில்லை என்று கூறுங்கள்” என்று கூறினார்.

இவ்வாறு எதையும் ஒரு பற்றில்லாமல் அணுகும் வாழ்க்கை முறையைப் பௌத்தம் வகுத்துத் தந்தது.
மன்னை முத்துக்குமார்

 
ஒரு காட்டில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பலத்த போர். காடு யாருக்குச் சொந்தமென்று. பல நாட்கள், மாதங்கள் நடைபெறுகிறது போர். ஒரு கட்டத்தில் விலங்கினங்கள் ஜெயிக்கிற மாதிரி
ஒரு சூழல் வருகிறது. பறவை

க்கூட்டத்தில் இருந்த வௌவால் இதைக் கணிக்கிறது. உடனே பறந்து விலங்கின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ள நினைக்கிறது.

வௌவாலைத் தடுக்கிற பறவைக்கூட்டணி. ‘நீ செய்வது நியாயமா’ என்று கேட்கிறது.

பறவைக்கூட்டணி தன்னைப் பார்த்து அவ்வாறு கேட்டதும் வௌவால் சொன்னது: ‘நானென்ன உங்களைப் போல முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறேனா? நான் குட்டியிட்டு பாலூட்டுகிறேன். பாலூட்டுவதால் நான் விலங்கினம்’ என்று சொல்லிவிட்டு விலங்குக் கூட்டணியில்… ச்சே. கூட்டத்தில் சேரப் பறந்தோடியது. போரில் வெல்ல எவர் வந்து கூட்டத்தில் சேர்ந்தாலும் சேர்த்துக் கொள்வோமென விலங்கினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது.

போர் தொடர்ந்தது. இரு தரப்பும் சம பலத்தில் இருக்க, இப்போது பறவையினம் ஜெயிக்கிறாற்போல ஒரு தோற்றம். பயந்தது வௌவால். சடாரெனப் புறப்பட்டது பறவைக் கூட்டத்தில் சேர. தடுத்த விலங்கினத்திடம் கூறியது: ‘நானென்ன உங்களைப் போல நாலு காலால் நடக்கிறேனா? இதோ பாருங்கள்.. இறக்கை இருக்கிறது.. பறக்கிறேன். பறப்பதால் நான் பறவையினம்!’ என்று சொல்லிவிட்டுப் பறந்தது. கூட்டணி தர்மத்தில் பறவையினமும் வௌவாலைச் சேர்த்துக் கொண்டது!

மீண்டும் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் போர் தொடர்ந்தது. பொறுத்துப் பார்த்த வனதேவதை சடாரென இரண்டு தரப்பினரின் முன்பும் தோன்றினாள்.

“இதோ பாருங்கள்…. இந்தக் காடு உங்கள் இருவருக்கும் சொந்தமானதல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால் அதை மூட்டை கட்டி வையுங்கள். இந்தக் காடு எனக்குச் சொந்தம். இதில் நீங்கள் இருக்க வேண்டுமானால் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இந்த இயற்கையைப் பாதுகாக்க வேண்டும். இப்படி சண்டையிடுவீர்களேயானால் இப்போதே இந்தக் காட்டை விட்டு வெளியேறுங்கள்’ என்றது கண்டிப்பான குரலில்.

வனதேவதையின் உக்கிரத்தைக் கண்ட விலங்கினமும், பறவையினமும் தங்கள் போரை நிறுத்திக் கொள்வதென தீர்மானித்தன. போரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஒற்றுமையாக காட்டின் நலனுக்காக உழைப்பது என முடிவெடுத்தன.

இப்போது திண்டாடியது வௌவால். பறவையினம் ‘நீ என்ன எங்களைப் போல முட்டையிட்டா குஞ்சு பொரிக்கிறாய்? போ.. போ.. விலங்குகளுடனே வாழ்’ என்று துரத்த விலங்கினமோ ‘நீ இறக்கையெல்லாம் வைத்துக் கொண்டு பறக்கிற பறவையல்லவா.. போ.. போ… பறவைக் கூட்டத்தில் சென்று வாழ்’ என்று துரத்தின.

சந்தர்ப்பத்திற்காக மாறி மாறி கூட்டு சேர முற்பட்டதால் இரண்டு புறமும் சேர முடியாத வௌவால், அவமானத்தால் பகலில் தலைகாட்ட இயலாமல் பகல் முழுதும் தலைகீழாகத் தொங்கி இரவு மட்டுமே இரை தேடி, உண்ணும் வாய் வழியாகவே மலமும் கழிக்கிற அவல நிலைக்கு ஆளானதாம்!

இது லியோ டால்ஸ்டாய் சொன்ன கதை
மன்னை முத்துக்குமார்
ஒரு பாடதிட்டம், அதுக்கு கால அவகாசம் , தேர்வு, கொடுத்த புத்தகத்தில் இருந்து மட்டுமே கேள்வி, 100 /100 இது கல்வியா ? கதையை படிங்க...

ஒரு ஊரில் இரண்டு குருக்களுக்கிடையே சில பரம்பரைகளாகவே கடும் பகை இருந்தது.அந்த இருவரிடமும் இரு சிறுவர்கள் சந்தைக்குப் போவது போன்ற சில்லறை வேலைகள் பார்க்க பணியமர்த்தப் பட்டிருந்தனர். குருக்கள் அந்த சிறுவர்களிடம் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்று ஆணை இட்டிருந்தனர்.ஆனாலும் சிறுவர்கள் விளையாட்டுத்தனம் மிகுந்தவர்கள் ஆதலால் வழியில் சந்தித்தால் பேசிக்கொள்வர்.

 ஒரு நாள் ஒருவன் மற்றவனிடம்,”எங்கே போகிறாய்?”என்று கேட்டான். அடுத்தவன் பதில் சொன்னான்,”காற்று எங்கே இழுத்து செல்கிறதோ,அங்கே,”என்றான். கேள்வி கேட்டவனுக்கு புரியவில்லை.எனவே தன் குருவிடம் இதுபற்றி கேட்டான்.அவனிடம் பேசியதற்குக் கோபப்பட்ட குரு,”இருந்தாலும் இது மானப்பிரச்சினை.அவனை வெற்றி கொள்ள விடக்கூடாது.நாளை அவனிடம் இன்று போலவே பேசு. அவன் நேற்று சொன்ன பதிலையே சொல்வான்.உடனே நீ,காற்று வீசாத போதுஎன்ன செய்வாய் என்று கேள்,”என்றார்.

சிறுவனும் அடுத்தவனை வழியில் பார்த்தபோது,”நீ எங்கே செல்கிறாய்?”என்று கேட்க,அவன் சொன்னான்,”கால்கள் எங்கே அழைத்து செல்கிறதோ,அங்கே,”என்றான். இவனுக்கு சிரமமாகி விட்டது.தன் தயாரான பதிலை கூற முடியவில்லை.வாட்டத்துடன் திரும்பி வந்த சிறுவனைப் பார்த்த குரு,நடந்த விபரம் கேட்க , அவனும் சொன்னான்.அவர் சொன்னார், அந்தப் பையன் அந்தக் கூட்டத்தாருக்கே உள்ள வஞ்சகத்துடன் பேசியுள்ளான்.நாளை இதுபோல கால்கள் எங்கே போகிறதோ,அங்கே போகிறேன் என்று சொன்னால்,நீ நொண்டியாகி விட்டால் என்ன செய்வாய் என்று கேள்.அவனை நீ பேச முடியாமல் தோற்கடிக்க வேண்டும்,”

அடுத்த நாளும் இவன் அவனைப்பார்த்து எங்கே போகிறாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்,”காய்கறி வாங்க சந்தைக்கு செல்கிறேன்.” மனம் வருந்தியவனாகக் கோவிலுக்கு திரும்பிய இவன் நடந்ததைக் கூறி ”நான் ஒவ்வொரு முறையும் தயாரான பதிலுடன் செல்கிறேன்.ஆனால் அவன் ஒவ்வொரு முறையும் மாறி மாறிப் பேசுகிறான்.அந்தப் பையனின் வாயை அடைப்பது சிரமமாக இருக்கிறது,”என்றான்.

வாழ்க்கையும் இவ்வாறே ஒவ்வொரு வினாடியும் மாறிக் கொண்டே இருக்கிறது.நீங்களோ தயாரான பதிலை ஏந்திக்கொண்டு அதனிடம் செல்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தவற விடுவதெல்லாம் இத்தகைய தயாரான பதிலைக் கொண்டுதான்.
மன்னை முத்துக்குமார்
 
மன்னை முத்துக்குமார்
தருமபுரியைச் சேர்ந்த வன்னியர் இன ப் பெண்ணும் அப்பகுதி தலித் இளைஞர் ஒருவரும் காதல் திருமணம் செய்துகொண்டது கலவரத்தில் முடிந்திருக்கிறது.

அந்தத் திருமணத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தலித்துக்களின் வீடுகள், விஷமிகளால் தீவைக்கப்பட்டிருக்கிறது.
.
அந்த மக்கள் அண்டையிலுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுவரை 15 பேர் தீவைப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது நிலை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

திவ்யா என்ற பெண்ணும் இளவரசன் என்பவரும் சில காலம் காதலித்து வந்திருக்கின்றனர், குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்க, தாங்களாகவே திருமணம் செய்துகொண்டு சேலம் போலீசாரிடம் தஞ்சமடைந்திருக்கின்றனர். போலீசார் பாதுகாப்பளிப்பதாக உறுதியளித்தனர்.
 
ஆனால் வன்னியர் இனத் தலைவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கத் தயாரில்லை. மாறாக அவர்கள் தலித் சமூகத்தினர் பெண்ணை அவரது பெற்றோரிடம் “ஒப்படைக்கவேண்டுமென” உத்தரவிட்டதாகவும், ஆனால் அந்தப் பெண் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டதாகவும், இந்நிலையிலேயே திவ்யாவின் தந்தை நாகராசன் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
.
வன்னியர்கள் தலித்மக்கள் வாழும் நத்தம் காலனியைச் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகவும், மிரண்டுபோய் வெளியேறியவர்கள் இரவெல்லாம் கடும் குளிரில், திறந்தவெளியில் தங்க நேரந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று் மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் தலித் இளைஞர் வன்னியர் பெண்ணை காதல் திருமணம் செய்த பிரச்சினையில் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதற்கு அங்கு நிலவும் கட்டைப்பஞ்சாயத்து கலாச்சாரமே காரணம் என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் இயக்குநர் அ கதிர்.
.
தருமபுரி கலவரம் தொடர்பில் அவரது நிறுவனத்தின் உண்மை அறியும் குழுவினர் கண்டறிந்த விவரங்கள் குறித்து பிபிசி தமிழோசைக்கு அ கதிர் அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.


           
   
           
   
           
   
           
   
           
   
           
           
           
   
       

-
நன்றி
http://www.bbc.co.uk/tamil/india/2012/11/121108_dharmapuriviolence.shtml
மன்னை முத்துக்குமார்
புத்தர் தன் சீடர்களிடம்,”ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?”என்று கேட்டார்.

ஒரு சீடர் எழுபது என்றார்,இன்னொருவர் அறுபது என்றார்,மற்றொருவர் ஐம்பது என்றார்.அனைத்துமே தவறு என்று புத்தர் சொல்ல,சரியான விடையை அவரே சொல்லும்படி அனைத்து சீடர்களும் வேண்டினர்.

புத்தர் புன் முறுவலுடன் சொன்னார், ”ஒரு மூச்சு விடும் நேரம்”என்று .

சீடர்கள் வியப்படைந்தனர்.”மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?” என்றனர்.”உண்மை.மூச்சு விடும் நேரம் கணப்பொழுதுதான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்.”என்றார் புத்தர்.

பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும்,கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது.அதை முழுமையாக வாழ வேண்டும்