மன்னை முத்துக்குமார்

`தனித் தொகுதி என்ற ஒன்று தேவையில்லை’ என்று சொன்ன இந்த குடிகார கூமுட்டையை யாரும் பெரிதாக கண்டிக்காததால் நான் செருப்பால் அடிக்கிறேன்..
மன்னை முத்துக்குமார்
சர்வதேச மரண தண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கம் : -
தோழர் கொளத்தூர் மணி உரை

மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
Justify Full
சற்குணத்தின் போர்க்குணம்தான் ‘வாகை சூட வா’



இந்தியத் திரைப்பட வரலாற்றில், மூத்த படைப்பாக்கப் பெருமையை தமிழ் மொழி பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் பண்பாட்டு ஆழம், இது வளர்த்து வைத்துள்ள பல்வேறு கலைகளின் வளர்ச்சி ஆகியவை, இந்த பெருமைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. சினிமா என்னும் திரைப்படம், பல்வேறு கலைப்படைப்புகள் ஒன்று கூடி சேர்ந்து, இசைப்பதைப் போன்றது தான். போதிய கலை, வளர்ச்சி பெறாத மொழிகளால் சிறந்த திரைப்படங்களைப் பெற்றெடுக்க முடியாது.

கேமராவின் மொழி தான் சினிமா என்று கூறுவார்கள். இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம், ஆழ்ந்து யோசித்துப் பார்க்கும்போது, பண்பாட்டின் மொழியாகவே சினிமாவை நான் உணருகிறேன். இன்றைய தமிழ் சினிமாக்கள், தமிழ் பண்பாட்டை அப்படியே, படுகொலை செய்கின்றன. கசாப்பு கடைகளில் கறியை கொத்திய ஆணவத்தில் கறிக்கடை கத்தி சத்தம் எழுப்புவதைப் போல, தமிழ்ப் பண்பாட்டைக் கொத்துக் கறியாக்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் சத்தம் செவிப் பறைகளைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.



இந்தப் பின்னணியில் தான், தமிழ்ப் பண்பாட்டின் ஆழம் அறிந்து, அதனையே தன் மொழி கொண்டு, 'வகை சூட வா' என்ற கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார் திரைப்பட இயக்குநர் சற்குணம். சற்குணத்தைப் போன்றவர்களால் தமிழ்த் திரைவுலகின் எதிர்காலத்திற்கு மிகுந்த நம்பிக்கை கிடைத்து வருகிறது. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் விட, நமது எதிர்காலம் மிகுந்த வலிமை கொண்டதாக இருக்கும் என்பதற்கு இவர்களே ஆதாரங்கள்.

கூட்டமாக நின்று தங்கள் உயிரை மண்ணுக்காக, ஈகம் செய்த முள்ளிவாய்க்கால் வரலாற்றுக்குப் பின், நாம் வேர் பரப்பி நிற்கும் மண் மீதான வேட்கை கூடுதலாகிறது. வாகை சூட வா திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம். அது ஒரு அழகிய கிராமம். அந்த மண்ணின் வரலாறு அறிந்த மூத்த மனிதர். மண்வாசணை நுகர்ந்து, வாயில் போட்டு ருசித்து இதை விடவும், சிறந்த மண் எங்கும் இல்லை என்ற போது மெய் சிலிர்த்துப் போகிறது. அந்த மண் தான் காளவாய்க்குள் சென்று திரும்பிய பின் யாராலும் உடைக்க முடியாத செங்கல்லாக மாறுகிறது.

இந்த செங்கல்லின் வாழ்க்கை தான் திரைக்கதை. செங்கல் சூளையில் வெந்து மடியும் மக்கள் வாழ்க்கைப் பற்றிய ஆழமான பதிவுகள் தமிழில் இல்லை. அந்தக் குறைபாட்டை சற்குணம் இப்பொழுது போக்கியிருக்கிறார். செங்கல் சூளைகள் கொத்தடிமைகள் மிகுந்த உலகம். சென்னை பெரு வளர்ச்சியில் செங்கல்லுக்கு முக்கியமான பங்கு உண்டு. சென்னையைச் சுற்றியிருக்கும் வற்றாத நீர்நிலைகள், வளம் மிகுந்த மண் ஆகியவற்றால் செங்கல் சூளைகள் வளர்ந்தன என்றால், அந்த சூளைகளால் தான் சென்னை நகரம் வளர்ந்தது. இன்று நாகரிகம் பேசி சொகுசாக வாழ்ந்து வரும் சென்னைவாசிகள் இந்த உண்மையை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

சென்னையைச் சுற்றி, செங்கல் சூளைக்கு விறகுகளை லாரிகளில் ஏற்றி வருவதைப் போல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் கொத்தடிமைகள் ஏற்றிவரப்படுவார்கள். இவர்கள் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வந்துள்ளது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி. ஒரு தருணத்தில், வாங்கிய கடனுக்கு வேலை செய்யவில்லை என்று மனைவியையும் பெற்ற பிள்ளைகளையும் சிறை பிடித்து விட்டான் ஒரு செங்கல் சூளை முதலாளி என்று, கணவன் மட்டும், கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கதறிக் கதறி அழுததை என் ஆழ்மனம் அப்படியே பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். வாகை சூட வா படத்தை என்னால் நாற்காலியில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. நான் மிகவும் கொந்தளித்துப் போனேன்.

கொத்தடிமைகளை போர்க்குணம் கொண்டு எழ வைக்கிறது கதை. எதார்த்தமற்ற சண்டைக் காட்சிகள் தான் தமிழ் சினிமாவின் அருவெறுப்பு. விமானம், கப்பல், ஆயிரக்கணக்கான மனிதத் தலைகள் என்று அனைத்தையும் தூள் தூளாக்கிக் காட்டும் கதாநாயகனின் வெற்று கைகளைப் பார்த்து, மக்கள் ஆரவாரம் செய்கிறார்கள்; கைத்தட்டுகிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது? தன்னுடைய கன்னத்தில் எவனோ ஒருவன் அறைந்தாலும், காப்பாற்றுவதற்கு கதாநாயகனை எதிர்பார்க்கும் நிலைதான். எங்கே சென்றது அவர்களின் மண் சார்ந்த போர்க்குணம்?

உலகப் புகழ் மிக்க வங்கத்தின் இயக்குநர் சத்தியஜித் ரே, அறுபதுகளில் போர்க்குணம் மிகுந்த திரைப்படங்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார். வெகு மக்களின் கோபம் எவ்வாறு கரு கொண்டு இடி, மின்னலாக வெளிப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார். வெகு மக்களின் கோபம் எத்தகைய விளைவுகளை உருவாக்குகிறது என்பதை உலகில் பல நாடுகளும் இந்த வரிசையில் வெளியிட்டுள்ளன. இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் ஒரு கூட்டத்தைப் புரட்டி எடுக்கும் வீரனாகக் காட்டப்படவில்லை. அடியாட்கள் கூட்டமாக நின்று தாக்குதல் நடத்தும்போது, ஏன் என்று மட்டும் கேட்கிறான். ஊரைவிட்டுப் போ என்றபோது, கொத்தடிமையாய் மாறிவிட்ட குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தருவதை நிறுத்திவிட்டுப் போக முடியாது என்று கூறிவிடுகிறான். கழுத்து நெறிபடுகிறது. மூச்சுத் திணகிறது. உயிர் போய்விடுமோ என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிறது. முடியாது என்று சொல் உறுதியுடன் இவனிடமிருந்து பிறக்கிறது. இந்த வைராக்கியத்திலிருந்துதான் மக்கள் உள்ளங்களில் நெருப்பு பற்றிக் கொள்வதற்கான முதல் தீப்பொறி கிடைக்கிறது.

இந்தத் தீப்பொறியை, கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவன் ஒரு செங்கல்லை எடுத்து வீசுவதன் மூலம் வீசி எறிகிறான். போர்க்குணம் மிக்க இந்த காட்சித் தூண்டல் தான், போராட்டங்களில் மக்கள் தன்னம்பிக்கையைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைகிறது. இதில் தான் இயக்குநரின் அசாத்திய துணிச்சல் வெளிப்படுகிறது. நம்பமுடியாத கற்பனை சாகசங்கள் நிறைந்த பொய்யான கதாநாயக சித்தரிப்புகளிலிருந்து சினிமாவை திசை மாற்றம் செய்து வெகுமக்களின் வீரத்தில் இதனை கௌரவப்படுத்தியிருக்கிறார். முற்றிலும் வியாபாரமயமாகிப் போன தமிழ் சினிமாவில் இயக்குநரின் முடிவை அசாத்திய துணிச்சல் என்ற வார்த்தைகளில் தான் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது.

குருவிக்காரரின் பாத்திரப் படைப்புதான் கதை பிரதிபலிக்கும் காலத்தின் குரலாகத் தெரிகிறது. 'குருவி எல்லாம் என் காதுலே கத்து' என்கிறார். மரங்களையும் கூடுகளையும் இழந்த குருவிகள் அவருடைய காதில் மட்டும் கத்தவில்லை, நம் காதிலும் கத்திக் கொண்டிருக்கின்றன. பசுமரங்களின் அழிவும், வாழ்வின் தார்மீக வீழ்ச்சியும் இந்தப் பாத்திரத்தின் மூலம் வேதனையை நம்முடன் திரைப்படம் பகிர்ந்துகொள்கிறது. குழந்தைத் தொழிலாளிகள் பற்றிய பொறுப்புணர்ச்சி, கல்வி அறிவில்லாதவர்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், சாதிதான் மனஅடிமைத்தனத்திற்குக் காரணம் போன்ற நிகழ்வுகளை உணர்வுப்பூர்வமாக விளக்க கதை முயற்சிக்கிறது. இது ஒவ்வொன்றிலும் இயக்குநரின் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுவது நமது கடமையாகும். இந்த சமூகக் கருத்துக்கள் எதிலும் ஒரு சிதைவு கூடாது என்பதில் கதை கவனமாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊர்கள் ஒவ்வொன்றின் வரலாறும், மிகவும் தொன்மையானது. காலப் பெருவெள்ளத்தில் இவை தேக்கி வைத்துள்ள, நுட்பம் மிகுந்த பண்பாட்டுக் கூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக இன்று அழியத் தொடங்கி விட்டன. உலகில் பல நாடுகள் தங்கள் பண்பாட்டுத் தொன்மையை ஆவணப்படுத்தும் கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆவணப்படுத்துவதில் பொறுப்புணர்வற்றத் தமிழர்கள், பண்பாட்டு சேமிப்புகளை இழந்து, மண் தந்த வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியப்பட்டு, அந்நியமயமாகி வருகிறார்கள். இதற்கான மீட்பு நடவடிக்கைகளில் சற்குணத்தின் படைப்புலகு தனிக்கவனம் கொண்டுள்ளது. இன்னமும் சொல்லப்போனால், இவரது திரைக்கான இயக்கும் ஆற்றலே பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தான். காணாமல் போய்விட்ட பண்பாட்டுக் கூறுகளை திரைப்படத்தில் காணும்போது, வெகு காலத்திற்கு முன்னரே காணாமல் போய்விட்ட உறவுகளில் ஒன்று திடீரென்று கிடைத்துவிட்டால் எந்த வகையான மகிழ்ச்சி கிடைக்குமோ, அந்த மகிழ்ச்சி எனக்குக் கிடைக்கிறது.

ஊரே ஒன்று திரண்டு, இரவு நேரத்தில் பந்தம் பிடித்து, மலையேறி, காடுகரம்பைகளைக் கடந்து, திருவிழாவில் அனைவருமாக சங்கமிப்பது எத்தகைய மகிழ்ச்சியானது. இன்றைய தலைமுறையை, இந்த மகிழ்ச்சியை ஏக்கம் கொண்டு திரைப்படத்தில் பார்க்க வைத்துள்ளார் சற்குணம். மரண நிகழ்வு, 30 ஆம் நாள் நினைவுப்படையல் ஆகியவை இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பாரி சினிமாவுக்காகத் தயாரிக்கப்படவில்லை. ஆம்பலாபட்டின் மூத்த தாய், லெட்சுமி அம்மாள் அவர்களின் நூற்றாண்டு கால சோகத்தை சுமந்த ஒப்பாரிப்பாடலுக்கு எது இணை என்று யோசிக்க வைத்துவிடுகிறது. மாப்பிள்ளைக்கு அணிவிக்க வேண்டிய தங்க மோதிரத்தை இட்லியில் வைத்து, சாப்பிடும்போது அதிர்ச்சியுறச் செய்தல், மணமகனுக்கு இலை விருந்து செய்து, அவன் உணவு சாப்பிடும் நேரத்தில், வாழை இலையில் முன்னரே கட்டி வைத்திருந்த நூலால் இழுப்பது -இப்படி திரை முழுவதும் பண்பாட்டுக் கூறுகள் நிரம்பி வழிந்து தனி கலகலப்பை உருவாக்குகிறது.

கதையின் மையம் காதல் இல்லை; வாழ்க்கை தான். கதாநாயகன் விமல் நடிப்பு மிகவும் இயல்பாகவே இருக்கிறது. களவாணி திரைப்படத்திலிருந்து மாறுபட்ட பாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மிகவும் பொருத்தமுற நடிப்பு அமைந்துள்ளது. கதாநாயகி இனியாவின் கெட்டிக்காரத்தனத்தோடு கூடிய குறும்பு தனித்த வசீகரத்தைத் தந்துள்ளது. கணக்கு போடும் கதாபாத்திரமான தம்பி ராமையாவின் படைப்பு ரசிக்கத்தக்கதாகவே இருக்கின்றது. இசை, ஒளிப்பதிவு இயக்குநர்கள் பாராட்டுக்குரியவர்கள். கவிஞர்கள் வைரமுத்து, வே.இராமசாமி, கார்த்திக் மேத்தா ஆகியோரின் பாடல்கள் சிறப்புக்குரியவை என்றாலும், என் தோழன் அறிவுமதியின் பாடலை நிமிர்ந்து கேட்டு, எழுச்சி பெற்றேன்.

வலுவான கதை அமைப்பு, எந்த மொதலாளியையும் நம்பாதீங்க என்ற வசனத்தின் மூலம் கூலித் தொழிலாளிகளுக்கான பாதை எது என்பதை திரைப்படம் காட்டுகிறது. ஆதிக்க எதிர்ப்பும், பண்பாட்டுப் பார்வையையும் கொண்டுள்ள ‘வாகை சூட வா’ சற்குணத்தின் தனித்துவத்தைக் காட்டுகிறது. சற்குணம் பிறந்த பூமியான ஆம்பலாப்பட்டை நான் அறிவேன். அந்த செந்நிற ஆம்பல், தன் மடல் அவிழ்த்து, சற்குணம் என்னும் கலைப் போர்க்குணத்தை பெற்றெடுத்துக் கொடுத்துள்ளது. ஆம்பல் மண்ணுக்கு மீண்டும் என் வணக்கம்.

நன்றி -தோழர் சி.மகேந்திரன், கீற்று வழியாக்....