மன்னை முத்துக்குமார்

தனக்கு நிகழாத வரை எல்லாமே வேடிக்கை தான்.
--புத்தர்.
மன்னை முத்துக்குமார்
கடுமையான 
உழைப்பாளிக்கு 
கவலைப்பட நேரமேது ?
-
-மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.
.

ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள்.

கேட்டபோது சொன்னாள்

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்”.. அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்

“அன்பு என்றால் இதுதான்”.
----------
மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்
ஒரு ஜென் கதை
-

ஒரு சமயம் ஜென் குரு ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வழிநடையாய் சென்று கொண்டு இருந்தார். அப்போது சற்று ஓய்வு எடுக்க விரும்பி கண்ணில் தென்பட்ட அந்த ஊர் அரண்மனைக்கு சென்று மன்னனிடம்,

இந்த சத்திரத்தில் கொஞ்ச நாள் நான் தங்கலாம் என்று இருக்கிறேன் , என்றார்.

அதற்கு மன்னன் " இது சத்திரம் இல்லை ஐயா , இது அரண்மனை " என்றார்.

அப்படியா? உங்களுக்கு முன் இங்கு யார் இருந்தார் ? ஜென் குரு கேட்டார்.

என் தந்தை. இப்போது அவர் இல்லை, இறந்துவிட்டார். என்று மன்னன் சொன்னார்.

அதற்கு முன் ? என்று குரு மீண்டும் கேட்டார்.

அதற்கு முன் என் தாத்தா வாழ்ந்தார் அவரும் இப்போது இல்லை. என்றார்.

அதற்கு ஜென் குரு பொறுமையாக -
ஓ...அப்படி சிலர் சில காலம் இந்த இடத்தில் வாழ்ந்து செல்லும் போது இது எப்படி அரண்மமையாகும் ... சத்திரம் தானே ? 

-
மன்னர் விழித்தார்.
மன்னை முத்துக்குமார்
காரைக்கால்: காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோதினி என்ற இளம் பெண், தற்போது மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டு வருகிறார். சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் 

காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. 

பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, காரைக்காலில் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் அவரது தந்தை, வினோதியின் மருத்துவ செலவிற்காக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்.

 டாக்டர்கள் பல மாதங்கள் வினோதினி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என கூறியிருப்பதால், அவர் நல்ல மனம் படைத்தவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்

மன்னை முத்துக்குமார்
நீ இறக்கும் வரையில் உன் மதிப்பை எங்களால் புரிந்துகொள்ள முடியாது என்று

ஒரு கவிஞனிடம் கூறினேன்… அதற்கு அவன்,

“ஆம்…. மரணம் உண்மையை உரைக்கக் கூடியது. அப்போது, நான் சொன்னதைவிட செய்தது அதிகம் என்றும், செய்ததைவிட செய்யவிரும்பியது அதிகம் என்றும் தெரியவரும் , என்றான்.

-கலீல் ஜிப்ரான்.

மன்னை முத்துக்குமார்
 உங்களுக்கு கருப்பு மூக்கு புத்தரை தெரியுமா?

புத்தரின் திருவுருவச் சிலை முன்பு ஊதுவத்திகளை ஏற்றி வழிபடும் வழக்கம் கொண்ட பெண் ஒருத்தி இருந்தாள்.

அவள் எங்கே சென்றாலும் தன்னோடு தங்கத்தாலான ஒரு புத்தரின் சிலையைய் எடுத்துச் செல்வாள். போகும் இடமெல்லாம் புத்தரின் சிலைக்கு ஊதுவத்தி ஏற்றி வழிபடுவாள்.

அந்த ஊதுவத்தியின் நறுமணத்தை அடுத்தவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணம் கொண்டவள் அவள் .

அதனால், ஊதுவத்தியில் இருந்து ஒரு குழாயைய் புத்தரின் மூக்குக்குள் பொறுத்தி விட்டாள். இதனால் நாளாக நாளாக தங்க மூக்கு கறுத்துவிட்டது.

இது சுயநலம் பற்றி ஜென் மதத்தினர் சொல்லும் கறுப்பு மூக்கு புத்தர் கதை.

நாமும் சில சமயங்களில் இந்த பெண்மணியைய் போலத்தான் தாம் செய்வது தான் சரி என்றும் தான் செய்கின்ற செயல் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது அதனால் அவர்கள் பயனடையக்கூடாது என்ற சுயநலத்துடனும் வாழ்கிறோம்.

இது போன்ற செயல்களை செய்கையில் புத்தருக்கு மூக்கு கறுத்தது போல் சில சமயங்களில் நமக்கும் தீமையே விளைகின்றன.
மன்னை முத்துக்குமார்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்

இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
-
--புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.


மன்னை முத்துக்குமார்
நடு பகல்
சுடு  மணல்
பாவம், என் பாதச்சுவடுகள் .
.
-பாவலர் அறிவுமதி.

மன்னை முத்துக்குமார்
.
கண்கள் இரண்டு
பார்வை ஒன்று
காதல் !
-
-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
மகாகவி பாரதியின் இந்த பாடலே எனக்கு அவர் மீது மிகப்பெரிய மரியாதைக்கும்  பற்றுக்கும்  காரணம். நீங்களும் கேளுங்க ஏனென்று புரியும்.

பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமையற்றிடும் பாரீர்...
-
மன்னை முத்துக்குமார்
லெபனானிய கவிஞர் கவிஞர் கலீல் ஜிப்ரானின் பிறந்த நாள் இன்று
(06-01-2013 ) ஜிப்ரானின் இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்த /ரசித்த ஒன்று.


நான்கு கவிஞர்கள்-   :  கலீல் ஜிப்ரான்

கவிஞர் நால்வர்
மேசையொன்றினைச் சுற்றி
அமர்ந்திருந்தனர்.
மேசை மேலிருந்த
மதுக்கிண்ணம் ஒன்றின் மீது
கவனத்தைக் குவித்திருந்தனர்.

முதல் கவிஞன் சொன்னான்:
"என் ஞானக் கண் கொண்டு
பார்த்திடும் போது
இம்மதுவின் நறுமணம்
அடர்பெருங்காட்டின் மேல் குவியும்
பறவைக்கூட்டம் போல்
கோப்பையின் மேல்
சூழ்ந்து படர்ந்து சிறகடிக்கிறது."

இரண்டாம் கவிஞன் மொழிந்தான்:
"என் ஞானக் காதுக்கு
அப்பறவைகளின் கந்தர்வ தேவ கானம்
அளப்பரிய சுகமளிக்கிறது.
வண்டானது, அழகிய மலரின்
இதழ்களின் இடையே
சிறைப்படுவது போல்
என் இதயமும் பறிபோகிறது."

மூன்றாம் கவிஞன்
கண்களை மூடிக்
கைகளை உயர்த்தி உரைத்தான்:
"நான் அப்பறவைகளைத் தீண்டி மகிழ்கிறேன்.
தூங்குமொரு தேவதையின்
மூச்சுக் காற்றினைப் போல்
அவைகளின் சிறகுகள்
என் கைகளை உரசுகின்றன."

நான்காம் கவிஞன் எழுந்து
மதுக்கிண்ணத்தைக் கைகளில் எடுத்துக் கூறினான்:
"அந்தோ, நண்பர்காள்.
உம்போல் எனக்கு
பார்த்தலும் கேட்டலும் தொடுதலுமான
உணர்வுகள் எதுவும்
உயர்வாக இல்லை.
நானந்த நறுமணப் பறவையைப்
பார்த்திட இயலவில்லை,
அதன் கானங்களைக்
கேட்டிட இயலவில்லை,
அதன் சிறகுகளைத்
தொட்டுணர இயலவில்லை.
எனது ஊனக் கண்களுக்கு
முன்னிருக்கும் மது மட்டுமே தெரிகிறது.
அதனைக் குடித்து மட்டுமே
என்னால்
உம்போன்று அதன் ரசிப்பில்
அமிழ்ந்து திளைக்க இயலும்."

சொல்லியபடி
மதுவின் இறுதித் துளி வரைக்
குடித்து விட்டான்.
மற்ற கவிஞர் மூவரும்
வாய்பிளந்து நோக்கினர்.
அவர்களின்
பார்வைகளில் தாகம்,
விழிகளில் வெறுப்பு.

-கலீல் ஜிப்ரான்
மன்னை முத்துக்குமார்
தொலைப்பதிலும் 
தொலைத்ததை தேடுவதிலுமாக தொடர்கிறது வாழ்க்கை !
-
மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட முடியும் என்கிற சுதந்திரம் கட்டுப்பாட்டைவிட ஆபத்தானது ! 
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

ஒரு ஆசிரியை வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டி இருந்தார். அன்று முதலை பற்றிய பாடம்.
முதலை ஆபத்தானது, கிட்டே சென்றால் கையை பிடித்து கடித்து விடும். சின்ன சின்ன விலங்கினங்களை உயிரோடு முழுங்கிவிடும் என்றார்.
உடனே மனிதர்களையுமா? டீச்சர் என்றாள்.
மனிதர்களை முதலைகளால் முழுங்க முடியாது அது உருவத்தில் பெரியது தான் , ஆனால் அதுக்கு மனிதனை முழுங்கும் அளவுக்கு வாய் பெரியது இல்லை. என்றார் ஆசிரியை.
உடனே ஒரு மாணவி எழுந்து , இல்லை டீச்சர் எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு மகேசை போன வாரம் முதலை முழுங்கிடுச்சி டீச்சர் என்றாள்.
இருக்கவே இருக்காது மனிதர்களை முதலையால் முழுங்கவே முடியாது என்று ஆணித்தரமாய் டீச்சர் சொல்லியும் மாணவி சமாதானமடையவில்லை.
”சரி டீச்சர், நான் சொர்க்கத்துக்கு போனப்பிறகு மகேசுக்கிட்டேயே கேட்டுக்குறேன் ”என்றாளாம்.
அதுக்கு டீச்சர், ஒரு வேளை மகேசு நரகத்துக்கு போயிருந்தா ? என்று கேட்டாராம்.

உடனே , அப்படின்னா நீங்க கேளுங்க என்றாளாம்.

இது எப்படி இருக்கு?
மன்னை முத்துக்குமார்
ஒரு நாள் கண் சொன்னது
“நான் இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் எழில் கொஞ்சும் அழகிய மலையினைக் காண்கிறேன். அது அழகாக இருக்கிறது “
அதை கேட்ட காது
சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின் சொன்னது,
இங்கே எங்கே இருக்கிறது மலை?
ஒரு மலையுமே இல்லையே? என்றது.
பிறகு கை
”நான் அதை உணரவோ , தொடவோ முயற்சித்தும் என் முயற்சி வீணாகிவிட்டது.என்னால் எந்த மலையையும் காணமுடியவில்லையே? என்றது.
இப்போது மூக்கு சொன்னது,
இங்கே எந்த மலையும் இல்லை. நான் அதை உணரவோ,நுகரவோ மோப்பம் பிடிக்கவோ முடியவி்ல்லையே?
இப்போ , கண் மறு பக்கம் திரும்பிக் கொண்டது.
மற்ற புலன்கள் யாவும் தங்களுக்குள் கூடி கண்ணினுடைய தவறான நம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டன.
இந்தக் கண்ணுக்கு ஏதோ ஆகிவி்ட்டது என்று.
--
அவ்வளவு தான் கதை . இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது :


#1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
# 2. அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
# 3. நான்கு முட்டாள்களுக்கிடையே ஒரு புத்திசாலி வாழ முடியாது.


மன்னை முத்துக்குமார்

ஒரு நாள் அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார்.

என் மகனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தரவேண்டும்.
அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?
என்று கேட்டார்.

“ஐநூறு பவுண்டுகள்“ என்றார் பிளாட்டோ.
ஐநூறு பவுண்டுகளா?? இந்தப் பணத்தில் ஒரு அடிமையையே விலைக்கு வாங்கிவிடலாமே!! என்றார்.

அதற்கு பிளாட்டோ..

நீங்கள் சொல்வதும் சரிதான்.. இந்தத் தொகைக்கு ஒரு அடிமையையே வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் மகனோடு சேர்த்து  இரண்டு அடிமைகள் உங்கள் வீட்டில் இருப்பார்கள் என்றார்.
மன்னை முத்துக்குமார்

தன்னைப் பெரிய அறிவாளியாகக் கருதிய ஒருவன், ஞானி ஒருவரை சந்தித்தான்.

இந்த உலகத்தில் எந்தப் புத்தகத்திலும் காணப்படாத முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உபதேசத்தை அவனுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்திருந்தார் அந்த ஞானி. அதைப் பெறவே ஞானியைச் சந்தித்தான் அந்த ஆசாமி.

அவனிடம், ''மழையில் போய் நின்று கொண்டு தலையையும் கைகளையும் உயரத் தூக்கு. உனக்கு ஞானோதயம் அப்போது உண்டாகும்'' என்றார் ஞானி.

மறுநாள், ஞானியிடம் வந்தான் அந்த ஆசாமி. ''நீங்கள் சொன்னது போலவே செய்தேன். என் உடல் முழுவதும் நனைந்து போனது.

என்னை, ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!'' என்றான்.

சற்றும் தாமதிக் காமல் ஞானி கூறினார்: ''நல்லது”. முதல் நாளிலேயே உனக்கு இவ்வளவு ஞானோதயம் ஏற்பட்டு விட்டதே!!!
மன்னை முத்துக்குமார்

பற்ற வைக்கப்பட்ட வெடிபொருள்
பாய்வது பயந்து அல்ல,

நீ காட்டிய உக்கிரத்தை
என்னாலும் காட்ட முடியும் என்று
வெடித்துக் காட்ட தான்.

அடிபட்டவனின் அழுகுரல் அடங்காது
அடித்தவனை அச்சமூட்டிக்கொண்டே தான் இருக்கும்.

அடித்தவனே அடங்கு
அடித்ததற்காக வருந்து.

பசுவும் ஒரு நாள் திரும்பும்
பாய்ந்தவன் மனமும் ஒடுங்கும்.

-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
சோளக்காட்டு 
பொம்மை 
வயல் நடுவே.

உயிரற்று 
ஆனால்
எத்தனை 
உபயோகமாய் ! 
-
 -ஜென் கவிதை.

மன்னை முத்துக்குமார்

புல்லாங்குழல்
எப்போதும்
காலியாகவே
இருக்கிறது.

குப்பைத் தொட்டியோ
நிறைந்திருப்பதாய்
குதூகலிக்கிறது !

மன்னை முத்துக்குமார்

விழாமல் எழு !
விழுந்தாலும் எழு !!

விழுவதும் எழுவதற்கே
எழு !

எழுவது இருப்பை உணர்த்த 
 ஓடு அதுவே உன் ”உன்னை” வெளிபடுத்த !!
.
-மன்னை முத்துக்குமார்.