மன்னை முத்துக்குமார்

கஷ்டப்பட்டு சிரிப்பு பயிற்சி செய்பவர்கள்
எல்லோரையும் எளிதாய் சிரிக்க வைத்து விடுகின்றனர்
மெரினாவில் ...
*
 தனியே சிரிப்பவன்
இதயத்திலிருந்து சிரிக்கிறான் !
*
 தென்றலின் வாசத்தை
செங்கல்பட்டை தாண்டியதும் உணர்கிறார்
கூவம் வாசி !
*
 அடித்து சாத்தினால்
அமைதியாகிறார்..
ஷேர் ஆட்டோ ட்ரைவர் !
*
 பொருள் இருக்கும்
எடைத் தட்டை தாழ்த்தி
விலையில் சரி செய்துவிடுகிறார்
வியாபாரி !
*
 வாடாமல்லி பூப்பது இல்லை
அதனாலோ என்னவோ மனப்பதும் இல்லை !
*

மன்னை முத்துக்குமார்
இந்திய நதிகள்
 இணைக்கப்படுகிறது
ஒவ்வொறு தேர்தல் அறிக்கையிலும் !
*
இந்த வார  ( 19/01/2015) குங்குமம் இதழில் பதிவாகியுள்ளது.