மன்னை முத்துக்குமார்
சாய்பாபாவும் ----------மேஜிக் ஷோவும்
-
மன்னை முத்துக்குமார்
-
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
-
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
வர்ணம்--சிறப்பு குரும்படம்-1

பார்ப்பனீயத்துக்கு முன் சாதி இந்துவும் பஞசமனும் ஒண்னுதான்,
அந்த ஆரிய பிழைப்பு வாதிகளின் பிரித்தாளும் தந்திரத்தை புரிந்துகொள்ளடா சகோதரா..என்ற இந்த குரும்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று

மன்னை முத்துக்குமார்
வர்ணம்----------சிறப்பு குரும்படம்.-2

பார்ப்பனீயத்துக்கு முன் சாதி இந்துவும் பஞசமனும் ஒண்னுதான்,
அந்த ஆரிய பிழைப்பு வாதிகளின் பிரித்தாளும் தந்திரத்தை புரிந்துகொள்ளடா சகோதரா..என்ற இந்த குரும்படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று
-
மன்னை முத்துக்குமார்
அவர்தான் பெரியார்....
-
Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்

தொழில் துறையில் நம்பர் ஒன், கல்வியில் நம்பர் ஒன், தகவல் தொழிநுட்ப பூங்கா, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இப்படி எதை வேண்டுமானாலும் பெருமை பேசிக்கொள்ளுங்கள், ஆனால் அதுக்கு முன் இதுக்கு வழி சொல்லுங்க,

இந்த இரட்டை குவளை முறை தமிழ்நாட்டில் இருப்பது ஆளும் ஆட்சியாளர்களுக்கு தெரியுமா? தெரியாதா? தெரியாது என்று சொன்னால் அதை ஒப்புக்கொள்ள எந்த சுப்பனும் இங்கே தயார் இல்லை, காரணம் மன்னர் ஆட்சி காலத்தில் இருந்த ஒற்றர் படையை காட்டிலும் இப்போது இருக்கும் உளவு படை சிறப்பானது. திறம்பட செயல்படவும் செய்கிறது , அப்படியானால் தமிழ் நாட்டில் நடக்கும் எந்த ஒரு குற்ற செயலையும் தடயவியல் கொண்டு கண்டுபிடிக்கும் இந்த அரசுக்கு இரட்டை குவளை முறை மட்டும் கண்ணுக்கு புலப்படவில்லை என்றால் எவனய்யா ஏற்றுக்கொள்வான், எது எப்படியோ நாங்க இங்கே ஊர் பெயர் , டீ கடை பெயர் , என்ற அரசுக்கு இது வரை தெரியாத அனைத்தையும் கொடுத்து உள்ளோம் இனியாவது என்ன முடிவு எடுக்கிறீகள் என்று பார்க்கலாம்.

தலித் மக்களுக்கு விபூதிக்கு பதிலாக மண்: ஒட்டன்சத்திரம் பகுதியில் தீண்டாமை - பட்டியல்

ஒட்டன் சத்திரம் பகுதியில் தீண்டாமையை பின்பற்றி இரட்டைக் குவளைகளை வைத்துள்ள தேனீர்க் கடைகள் தீண்டாமை பின்பற்றும் கோயில்கள், சுடுகாடுகளின் முதல் பட்டியலை ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜூலை 15 இதழில் வெளியிடப்பட்டது. ஒட்டன்சத்திரம் பகுதியில் தீண்டாமையை பின்பற்றும் வணிக நிறுவனங்களின் இரண்டாவது பட்டியல் இங்கு வெளியிடப்படுகிறது.

ஒட்டன் சத்திரம் ஒன்றியம்: ஆமாங்க நம்ம சட்டமன்ற கொறடா வின் சொந்த தொகுதிதான்

பெருமாள் கோவில் வலசு, கள்ளி மந்தயம்

1. மல்லீசுவரன் தேனீர் கடை
2. காளியப்பன் தேனீர் கடை.
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

அப்பியம்பட்டி நால்ரோடு, கள்ளி மந்தயம்
1. திருமலைச்சாமி தேனீர் கடை
இரட்டைக் குவளை, முருகன் சலூனில் முடிவெட்டத் தடை, சுடுகாடு இரண்டு.
2. தியாகராசன் தேனீர் கடை
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

பிச்சைக்கல்பட்டி - மார்க்கம் பட்டி
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.
சிந்தலப்பட்டி
1. சின்னத்தாயி தேனீர் கடை
2. மயில்சாமி தேனீர் கடை
இரட்டைக் குவளை, காளி யம்மன், முத்தாலம்மன் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைய அனுமதி இல்லை.

சின்னக்கரட்டுப்பட்டி
ராமர் கோவிலில் அனுமதி இல்லை, சுடுகாடு இரண்டு.
பெரியகரட்டுப்பட்டி
நாயக்கர் தெருவில் செருப்புடன் நடக்க அனுமதி இல்லை. காளியம்மன் கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு.

அரசப்ப பிள்ளைபட்டி
1. பெரியசாமி தேனீர் கடை
2. மல்லிகா தேனீர் கடை
3. இரவி தேனீர் கடை
காளியம்மன் கோவில் விநாயகர் கோவில்களில் அனுமதி இல்லை. இங்குள்ள கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சல்காரர் தலித் என் பதால் அரசு வழங்கியுள்ள மேசை நாற்காலியை அப்புறப்படுத்திவிட் டார்கள். சாதி இந்துவான அஞ்சல கரும், தலித் ஊழியர் நாற்காலியில் அமரக் கூடாது என்பதற்காக தானும் தரையில் உட்கார்ந்து பணிபுரிகிறார்.

சாமியார்புதூர்
1. இராமசாமி தேனீர் கடை
2. முருகேசன் தேனீர் கடை
3. சின்னதம்பி தேனீர் கடை
4. நல்லதம்பி தேனீர் கடை
5. கருப்பையா தேனீர் கடை
6. கருப்புச்சாமி தேனீர் கடை
ஆகிய கடைகளில் இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு மூன்று.
குத்திலிப்பை
1. சின்னச்சாமி தேனீர் கடை
2. சுப்பிரமணி தேனீர் கடை
3. பெரியசாமி முதலியார் தேனீர் கடை
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு இரண்டு, தேநீர் கடையில் தண்ணீர் பானை இரண்டு. துர்க்கையம்மன் கோவிலில் அனுமதி இல்லை. (இது பழனி தேவஸ்தான கோவில்)

கலையரங்கில் அமர அனுமதி இல்லை. பேருந்து நிலையத்தில் அமர அனுமதி இல்லை. இங்குள்ள அஞ்சலகத்தில் அஞ்சல்காரர் தலித் (அருந்ததியர்) என்பதால் நாற்காலி யில் அமர அனுமதி இல்லை. தரையில்தான் கோணிப் பையில் அமரவேண்டும்.
சின்னக்காம்பட்டி

காளியம்மன்கோவிலில் நுழைய அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. இங்கும் கிளை அஞ்சலகததில் அஞ்சல்காரர் தலித் (அருந்ததியர்) என்பதால் நாற்காலியில் அமர அனுமதி இல்லை. தரையில் கோணிப் பையில்தான் அமரவேண்டும்.
எல்லப்பட்டி - மார்க்கம்பட்டி
காளியம்மன் கோவிலில் அனுமதி இல்லை.
மாம்பாறை - மார்க்கம்பட்டி
முனியப்பன் கோவில் (இதுதான் இந்தப் பகுதியிலுள்ள கொங்கு இனத்தைச் சார்ந்த கவுண்டர்கள் கந்து வட்டி தொழில் செய்வதற்கு அனுகூலமான கடவுளாகக் கருதப் படுகிறது. தமிழகம் முழுதுமுள்ள (கொங்கு வேளாளக் கவுண்டர்கள்), இந்தியா முழுதும் உள்ள கந்து வட்டிக் கடைக்காரர்கள் இங்கு கிடாய் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். நாத்திகர்களாக உள்ள கந்துவட்டி கவுண்டர்கள்கூட இங்கு நேர்த்திக் கடன் செலுத்து கிறார்கள்.)
இங்கு தலித்துகளுக்கு தனி மண்டபம். தலித்துகள் கவுண்டர் வெட்டும் கிடாய் விருந்தில் அனுமதி இல்லை. அப்படி வந்தாலும் அவர் களுக்கு உணவு வெறும் தரையில் தான். அதுவும் தனியாகத்தான். இங்கு தலித்துகளுக்கு விபூதி கொடுக்கப்படுவதில்லை. அதற்கு மாற்றாக மண்தான் வழங்கப்படு கிறது. இந்தக் கோவிலில் மட்டும் எந்தக் காலத்திலும் மதுவிலக்கு கிடையாது.
மார்க்கம்பட்டி
காளியம்மன், முத்தாலம்மன், விநாயகர்கோவில்களில் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. தலித்துகள் இங்குள்ள ஓடையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள். மழை காலங் களில் ஓடைகளில் தண்ணீர் வந்தா லும் அதில்தான் அடக்கம் செய்யப் படுகிறார்கள்.

ஓடைப்பட்டி - அம்பிளிக்கை
இங்குள்ள கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அஞ்சல்காரர் தலித் என்பதால் தரையில்தான் உட்கார்ந்து பணி புரிகிறார்.
1. பொன்னையன் முதலியார் டீ கடை
2. செங்கோடன் டீ கடை
3. செல்லமத்து டீ கடை
4. செல்வி டீ கடை
5. அத்திக்கோம்பைக்காரர் டீ கடை
இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், சுடுகாடு இரண்டு. காளி யம்மன், முத்தாலம்மன், பகவதி யம்மன், பெருமாள் கோவில், விநாயகர் கோவில்களில் அனுமதி இல்லை. இங்குள்ள கலைரயரங்கில் தலித்துகள் அமர அனுமதி இல்லை.
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தி எதிரொலி
தலித் அஞ்சலக ஊழியருக்கு நாற்காலி மேசை வந்தது

ஒட்டன்சத்திரம், சேலம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தேனீர்க் கடைகள், சுடுகாடுகள், முடிதிருத்தும் நிலையங்கள், கோயில்களில் நிலவும் தீண்டாமைகளை பட்டியலாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்ட பிறகு, உறங்கிய காவல்துறை விழித்துக் கொண்டு, செயல்படத் தொடங்கியுள்ளது.

ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள வெரியப்பூர் கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட அஞ்சல் ஊழியர், ஆதிக்கசாதி அதிகாரியுடன் சமமாக உட்காரக் கூடாது என்பதால் மேசை நாற்காலி வழங்காமல் தரையில் உட்கார வைத்து வேலை வாங்கி வருவதை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சுட்டிக்காட்டியது.

காவல்துறையின் சென்னை நகர இணை ஆணையாளரான இரவி, அய்.பி.எஸ். அவர்களின் சொந்த கிராமம் இது. செய்தியைப் படித்த அதிகாரி இரவி, வெரியப்பூரில் உள்ள தனது தந்தையார் முத்துச்சாமி அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு இது குறித்துப் பேசியுள்ளார். முத்துச்சாமி அவர்கள் தி.மு.க.வைச் சார்ந்தவர். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக பணியாற்றியவர். அவர் வெரியப்பூர் அஞ்சலகம் சென்று, நேரில் பார்வையிட்டு தரையில் தலித் அஞ்சல் ஊழியர் உட்கார வைக்கப்பட்டுள்ள அவலத்தை நிறுத்துமாறு கேட்டதாக தெரிகிறது.

இப்போது தலித் அஞ்சலக ஊழியருக்கு மேசை நாற்காலி வழங்கப்பட்டு, அதில் அமர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏடு வெளியிட்ட பட்டியலில் இடம் பெற்ற அனைத்து தேனீர்க்கடைகளுக்கும், காவல்துறையினர் நேரில் சென்று, இரட்டைக் குவளைகளை அகற்றுமாறு எச்சரிக்கை செய்து வருகிறார்கள். பார்ப்போம் என்ன நடக்குது என்று....

தொடரும் ...
நன்றி -பெரியார் திராவிடர் கழகம்
மன்னை முத்துக்குமார்
கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் வரும் கவிப்பேரரசு வைரமுத்துவின் உணர்வுப்பூர்வமான பாடல் வரிகள், கேட்டுப்பாருங்கள்

மன்னை முத்துக்குமார்
கண்சிவந்தால் மண்சிவக்கும் என்ற தமிழ் திரைப்படப் பாடல்-வைரமுத்துவின் இந்த உணர்வுப்பூர்வமான பாடல்வரிகளைக் கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்
பாசிசம் , நாசிசம் ஆகியவற்றைப் போன்ற ஒரு அரசியல் கொள்கையே இந்து மதம் ஆகும்.

பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதற்காக, இந்த நாட்டின் ஆட்சியை இந்துக்களிடம் ஒப்படைப்பதை, இந்திய நாட்டின் நிலைமைகளை நன்கறிந்த, நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரும் ஒப்புக் கொள்வர் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கக்கூடாது. இந்து மதம் பாசிச, நாசிச சித்தாந்தங்களைப் போன்ற ஓர் அரசியல் சித்தாந்தமாகும் என்பதையும், அது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதையும் காங்கிரஸ் மறந்து விடுகிறது. இந்து மதம் அதன் போக்கில் விடப்பட்டால் - அதைத்தான் இந்து பெரும்பான்மையினர் விரும்புகின்றனர் - இந்து மதத்திற்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் இந்து மத எதிர்ப்பாளர்கள் ஆகியோரின் வளர்ச்சிக்கு அது அச்சுறுத்தலாக அமையும். இது, முஸ்லிம்களின் கருத்து மட்டுமல்ல; தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதவர்களின் கருத்துமாகும்.

கீழ்க்காணும் வழிமுறைகளில் ஆங்கில அரசு பிரகடனம் செய்ய முடியும் என்று நினைக்கிறேன் :

1. அமைதிப் பிரகடனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டுகளுக்குள் இந்தியாவை டொமினியன் (குடியேற்ற நாட்டு) அந்தஸ்துக்கு உயர்த்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

2. அந்த இலக்கை நோக்கி விரைவாகச் செயல்படுவதற்காக, போர் நிறுத்தம் கையெழுத்தான நாளிலிருந்து ஓராண்டிற்குள் இந்திய தேசியவாதிகள், அரசமைப்பு குறித்து தங்களிடையிலான வேறுபாடுகளுக்கு ஒருமித்த தீர்வு காண வேண்டும்.

3. அவ்வாறு தீர்வு காணவில்லையென்றால், அந்தப் பிரச்சினையை உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆங்கில அரசு அளித்துவிடும்.

4. அவ்வாறு அந்தத் தீர்வு கிடைத்தவுடன், இந்திய டொமினியன் அரசமைப்பின் ஒரு பகுதியாக அதை நடைமுறைப்படுத்த ஆங்கில அரசு உறுதியேற்கிறது.

...இந்தப் பிரகடனத்தோடு தேசிய அரசு அமைய வேண்டுமா? அது அமைந்தால் நல்லதுதான். திரு. ஜின்னா இரண்டு கோரிக்கைகளை முன் வைப்பதால் சிக்கல் இருக்கிறது. (1) ஒன்று இறுதியானது. அதுதான் பாகிஸ்தான். (2) இரண்டாவது உடனடியானது. அதõவது, அமைச்சரவையில் 50 சதவிகித பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது. முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்று திரு. ஜின்னா இந்துக்களிடம் கூறுகிறபோது, பாகிஸ்தான் கோரிக்கையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதில் சர்ச்சைக்கு இடமே இல்லை. முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்குப் பாகிஸ்தான் வேண்டும் என்று திரு. ஜின்னா கூறும்போது, இந்துக்கள் நிறைந்த பெரும் எல்லைப் பகுதிகளை எடுத்துச் செல்லாதவரை, தாராளமாக (பாகிஸ்தானை) எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவேன். ஏனென்றால் உங்கள் கொள்கைப்படி, இந்துக்களும் பிறிதொரு தேசிய இனத்தவர்கள்தானே.

வடமேற்கு எல்லைப் பகுதியானது, பாகிஸ்தானுடன் முற்றிணைந்த ஒரு பகுதியாகும். வடமேற்கு எல்லைப் பகுதிக்குத் தான் உரியவரல்ல என்பதை திரு. ஜின்னா ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கு உரியவர் கான் அப்துல் கபார் கான் ஆவார். அவருடைய ஒப்புதல் இல்லாமல், பாகிஸ்தான் என்பது இல்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவுப் பிரச்சாரம் செய்ய சூறாவளிப் பயணம் செல்வதைக் காட்டிலும், கான் அப்துல் கபார் கானை மனம் மாறச் செய்ய திரு. ஜின்னா தனது நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டும். இருப்பினும், இது திரு. ஜின்னா முடிவு செய்ய வேண்டிய விஷயம். நான் ஏற்கனவே சொன்னதுபோல், பாகிஸ்தானை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், முஸ்லிம்களுக்கான 50 சதவிகித பிரதிநிதித்துவக் கோரிக்கையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. மேலும், 50 சதவிகிதத்திற்கான உடனடிக் கோரிக்கை, இறுதி லட்சியமான பாகிஸ்தானோடு எவ்வாறு தொடர்புடையது என்றும் புரியவில்லை. முஸ்லிம் லீக்கின் இந்தக் கோரிக்கை நேர்மையற்றது என்று நிச்சயமாக நம்புகிறேன். இதனை நிராகரித்ததன் மூலம் லின்லித்கோ பிரபு, இந்தியாவிற்கு மிகப் பெரும் நன்மை செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

திரு. ஜின்னாவின் கோரிக்கையான 50 சதவிகிதத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், இந்தியாவில் இடைக்கால நடவடிக்கையாக தேசிய அரசாங்கம் எதுவும் அமைய முடியாது என்று உறுதியாக நினைக்கிறேன். போர் முயற்சியைப் பொருத்தவரையில், இப்போது செய்யப்படுவதைவிட தேசிய அரசு அதிகமாக எதையும் செய்து விட முடியாது. இதைக் காட்டிலும் அதிகமாக இந்தியா செய்ய முடியாது. இந் தியாவின் ஆற்றல் அதிகரிக்கப்படவில்லை. அதற்கான முழு பொறுப்பும் ஆங்கில அரசினுடையதுதான். அமைதிக் காலத்தில் இந்தியாவின் வளத்தை மேம்படுத்தாமல் இருந்து விட்டார்கள். அதனால் இந்த அரசு அல்லது தேசிய அரசு, இப்போது செய்வதைவிட அதிகம் செய்ய முடியாத நிலையிலிருக்கிறது.

நாடு நன்றாக, முழுமையாக வளர்ச்சியடைய செய்யப்பட்டிருந்தால் அதனால் பேரரசைக் காத்திருக்க முடியும். இப்போது அது தன்னையே காத்துக் கொள்ள முடியவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ இருக்கும் ஜப்பானிய ஆக்கிரமிப்பிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள, அது இங்கிலாந்தை எதிர்பார்க்கும் கட்டாயத்திலிருக்கிறது. நாட்டின் அவலநிலை இவ்வாறு இருக்கிறது. ஓர் இந்தியரை பாதுகாப்பு உறுப்பினராக நியமிப்பது நன்றாக இருக்கும். ஆனால் அது போதுமா? பாதுகாப்பு அவருடைய பொறுப்பில் இல்லாமல், ஓர் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் என்ன செய்ய முடியும்? புரிந்து கொள்ளவே கடினமாக இருக்கிறது

மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் ஆக்கமான இப்பாடலை கேளுஙகள் ...

தேசப்பிதா என்றால் இருந்துட்டு போ, எங்களுக்கு அரியின் குழந்தை என்று பேரு வைக்க நீ யாரடா நாயே? உள்ளக்குமுறலை கேளுங்கள்...

Get this widget Track details eSnips Social DNA
மன்னை முத்துக்குமார்

இந்நாட்டு தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடன் போராட வேண்டும்..


நண்பர்களே! தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.மனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான்.

அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.புதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை.

சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன்.

இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை.


அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)
மன்னை முத்துக்குமார்

சடங்கு முறைகளைக் கைவிட வேண்டும் ..

மனிதனின் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும், அவனுடைய சொந்த தீய நடத்தையே காரணமாகும். துன்பத்துக்கான காரணத்தைப் போக்குவதற்காக புத்தர் பஞ்சசீலத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.


பஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள் உள்ளன:
.
1. எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும் தவிர்த்தல்
2. களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றுவதின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல்
3. பொய் சொல்லாமல் தவிர்த்தல்
4. காமம் தவிர்த்தல்
5. மது தவிர்த்தல்
.
உலகில் நிலவும் துன்பத்திற்கும் மகிழ்ச்சியற்ற தன்மைக்கும் மனிதனுக்கு மனிதன் இழைக்கும் அநியாயமே காரணம் என்பது புத்தரின் கருத்து. இந்த அநியாயத்தை எப்படி நீக்குவது? இதற்கு அவர் கூறிய வழி, உயரிய எண்வகைப் பாதை. இந்த எண்வகைப் பாதையின் அம்சங்கள்:
-
1. நல்ல கருத்துகள் அதாவது மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை
2. நல்ல நோக்கங்கள், அறிவு மற்றும் நேர்மையுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான உயர்ந்த நோக்கங்கள்
3. நல்ல பேச்சு; அதாவது பணிவு, திறந்த உள்ளம், உண்மை
4. நல்ல நடத்தை, அதாவது, அமைதியான நேர்மையான, தூய்மையான நடத்தை 5. நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது
6. விடா முயற்சி, அதாவது, மற்ற ஏழு அம்சங்களிலும்
7. விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருந்தல்
8. நல்ல சிந்தனை, அதாவது, வாழ்க்கையின் அதிசயங்கள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தல். உன்னத எண்வகைப் பாதையின் நோக்கம்,
.
உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து மகிழ்ச்சியற்ற தன்மையையும் துன்பத்தையும் ஒழிப்பதாகும். நற்செய்தியின் மூன்றாவது பகுதி ‘நிப்பான' கோட்பாடு ஆகும். ‘நிப்பான கோட்பாடு' உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நிப்பானம் இல்லாமல் எண்வகைப் பாதை நிறைவு பெறாது. எண்வகைப் பாதை கைகூடுவதற்கு என்னென்ன இடையூறுகள் உள்ளன என்பதை ‘நிப்பான கோட்பாடு' கூறுகிறது. இந்த இடையூறுகளில் முக்கியமானவை பத்து. புத்தர் இவற்றைப் பத்து ஆசவங்கள், தளைகள் அல்லது இடையூறுகள் என்று குறிப்பிடுகிறார்.முதலாவது இடையூறு, தான் என்ற மாயை.
-
ஒரு மனிதன் முற்றிலும் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து, தன்னுடைய மனதின் ஆசைகளை நிறைவு செய்யும் என்று, தான் நினைக்கிற ஒவ்வொரு அற்ப விஷயத்தையும் துரத்திச் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்கு மேன்மையான பாதை கிடைக்காது. அளவிடற்கரிய முழுமையில், தான் ஒரு நுண்ணிய பகுதி என்ற உண்மையைக் காண்பதற்கு அவனுடைய கண்கள் திறந்தால்தான் தன்னுடைய தற்காலிகத் தனித்தன்மை எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் உணர்ந்தால்தான், இந்தக் குறுகிய பாதையில் நுழைவதே கூட அவனுக்குச் சாத்தியமாகும்.
-
இரண்டாவது இடையூறு, சந்தேகமும் தீர்மானம் இன்மையும் ஆகும். வாழ்க்கையின் பெரும் புதிரை விடுவிப்பதற்கு ஒருவனுடைய கண்கள் திறக்கும் போதும், ஒவ்வொரு தனித்தன்மையின் நிலையாமையை அவன் உணரும்போதும் அவனுக்குத் தனது செயல்கள் பற்றி சந்தேகமும் தீர்மானம் இன்மையும் எழுகின்றன. செய்வதா? செய்ய வேண்டாமா? என்கிற தடுமாற்றமும், தன்னுடைய தனித்தன்மையே நிலையற்றதாயிருக்கும்போது,
-
எதையும் ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து அவனைத் தீர்மானமற்றவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன. ஆனால், வாழ்க்கைக்கு இது சரிப்பட்டு வராது. அவன் தனது ஆசிரியரைப் பின்பற்றுவதென்றும், உண்மையை ஏற்பதென்றும், அதற்கான முயற்சியில் இறங்குவதென்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவன் முன்னேற முடியாது.மூன்றாவது இடையூறு, சடங்குகளின் சக்தியை நம்பியிருப்பதாகும். ஒருவன் எவ்வளவு நல்ல முடிவுகள் செய்து கொண்டாலும்,
-
அவை எவ்வளவு உறுதியாக இருந்தாலும், அவன் சடங்கு முறைகளைக் கைவிட்டாலன்றி, புறத்தே செய்யும் செய்கைகளும், புனிதச் சடங்குகளும், புரோகிதர்களின் சக்திகளும் தனக்கு எந்த வகையிலேனும் உதவும் என்ற நம்பிக்கையை விட்டாலன்றி, எந்தப் பயனும் ஏற்படாது. இந்த இடையூறுகளை ஒருவன் கடந்தால்தான் நீரோட்டத்தில் அவன் இறங்கியிருப்பதாகவும், விரைவிலோ, தாமதமாகவோ அவன் வெற்றிபெற முடியும் என்று கூற முடியும்.
-
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 447
மன்னை முத்துக்குமார்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்?

அரசமைப்புச் சட்டத்தின் 15வது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம், நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது, சென்னை உயர்நீதிமன்றம். 1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென்னை அரசு. இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில்
.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகியுள்ளது.பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு நீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, சாதி ரீதியான அரசாணை (Communal G.O.) உருவானது.
-
இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுனர்களும், நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலிடுகின்றனர்.அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது. இந்த 16(4) பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின் 29ம் பிரிவுடன் முரண்படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது.மேலும், ‘சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பாரபட்சத்தைத் தோற்றுவித்துவிடும்' என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
-
நான், உச்ச நீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப்தியைத் தருகிறது.இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப் போகவில்லை. இது, என்னுடைய வாதம். உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளுக்காக நான் வருந்துகிறேன்.
.
(நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம். சபாநாயகர் இடைமறித்து, அம்பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட்படுத்தவில்லை)
.
அரசியல் சட்டப் பிரிவு 29(2)இல், ‘மட்டும்' என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் பேதம் ஆகியவற்றை ‘மட்டும்' அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2)இன் பொருள். இங்கு "மட்டும்' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம்.‘சாதியற்ற இந்துக்கள்' என்று இந்நாட்டில் எவரும் இல்லை.
-
ஒவ்வொரு இந்துவுக்கும் சாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் சாதியை விட்டு வாழும் இந்துவாக இல்லை.இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட சாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத்தீர்வாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது, நமது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும்.நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்தமான முடிவாகும்.மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46வது பிரிவு, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது.இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது.
.
நாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15 போதிய விளக்க இணைப்பு (சட்டத் திருத்தம்) சேர்க்கப்பட வேண்டும். இது, ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.
-
'பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15 பக்கம் : 331
மன்னை முத்துக்குமார்

உலகம் 123வது மே தினத்தை சிறப்போடு கொண்டாடி கொண்டு இருக்கிறது. மே தினம் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாள். எட்டு மணி நேரத்தை பெற்றெடுத்த வீரத் திருநாள். 1886-இல் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரத்தில் உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தால் பெற்றெடுத்ததே இந்த எட்டு மணி நேர வேலை உரிமை. உழைக்கும் வர்க்கம் தனது உயிர் வாழ்தலுக்காக முதலாளித்துவத்துடன் போராட வேண்டியிருக்கிறது. அன்று மட்டுமல்ல; இன்றும்தான்.

1899ல் நடைபெற்ற பன்னாட்டு சோசலிசப் பேரவையில் இந்நாளை தொழிலார் நாளாகக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அன்றுதொட்டு இன்று வரை, உலக நாடுகள் அனைத்திலும் உழைப்போர் மகிழ்வுடன் கொண்டாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.


இது உலகாளாவிய ஒரு ஒப்பற்ற தினம், அதோடு தமிழகத்தில் இன்றும் தஞ்சை, நாகை , திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்களிடம் நடைமுறையில் உள்ள அமாவாசை விடுமுறை மற்ற பகுதியில் இருப்பதாக தெரியவில்லை. இந்த பகுதியில் சமீப காலங்களில் சற்றேறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஜமீன் அதிகாரம் கோல்லோச்சி தான் இருந்தது, குறிப்பாக திருவாரூர் மாவட்டம் களப்பால் பகுதியில் ஆண்டான் அடிமை முறை இருந்து இருக்கிறது. காலையில் 7 மணிக்கே வயலுக்கு போக வேண்டும் , தோளில் துண்டு போடக்கூடாது, வேலைக்கு வராதவர்களுக்கு சாட்டை அடி ,சாணிப்பால் என்ற கொடுமையும் நடந்து இருக்கிறது, கம்யூனிச பேரியக்கங்கள் தோழர் ஸ்ரீனிவாசராவ் அவர்கள் முயற்சியில் தென்பரை கிராமத்தில் தனது முதல் செங்கொடியை ஏற்றி போராடி இந்த ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள் ,விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வில் ஒளியேற்றி வைத்த அவ்வியக்கங்களுக்கு தொழிலாளர்கள் என்றும் நன்றி கடன் பட்டவர்களாவர், அதோடு அமாவசை தினத்தையும் விடுமுறை நாளாக அமைத்து கொடுத்தனர், அந்த விடுமுறை இன்றும் இந்த பகுதிகளில் நடைமுறையில் உள்ளது..

வாழ்க தொழிலாளர் தினம், வெல்வோம் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை..
மன்னை முத்துக்குமார்
புரட்சிக்கவிஞருக்கு இன்று (29-04-2010) 120 வது பிறந்த நாள்..அவரது பாக்கள் என்றும் அறியாமையை அகற்றும் ஒளிச்சுடர், பகுத்தறிவு போர்வாள்..அவரது புகழ் தமிழுலகம் என்றும் போற்றும்..பார்ப்பனிய அறிவு சூழ்ச்சியை தனது பாடல்களால் தமிழனுக்கு எடுத்து உரைத்த அவரது தொண்டு என்பது ஒவ்வொறு தமிழனும் மறக்க கூடாதது நன்றிக் கடனுக்குரியது, பின்பற்ற வேண்டியது...
-
கொலைவாளினை எடடா!
--------------------------------------
---------------------------------------------------------
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?

உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!

நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!


அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!

கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே.......

குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!


தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!

இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!


---
மன்னை முத்துக்குமார்
குஷ்பு மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி..
-
புதுதில்லி, ஏப். 28: கற்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்ததாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
-
கடந்த 2005-ம் ஆண்டில் தமிழ்ப் பெண்களின் கற்பு மற்றும் திருமணத்துக்கு முந்தைய பாலுறவு தொடர்பாக பத்திரிகை பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தக் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
-
இதையடுத்து, இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மேல் முறையீடு செய்தார். நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், குஷ்பு மீதான 22 வழக்குகளை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.
-
கீழே உள்ள சுட்டியில் - பெரியார் சொன்னதையும் படிங்க , விபச்சாரமே ஒழுக்கத்திற்கு எதிரானது இல்லை எனும் போது சினிமா நடிகை குஷ்பூ சொன்ன திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளுதல் தவறில்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது..அங்கீகரித்துள்ளது என்பதை விட குஷ்பூவின் கருத்து சுதந்திரம் காக்கப்பட்டுள்ளது..
-
குஷ்பூவின் கருத்தால் தமிழ் கலாச்சாரம் கெட்டு போய்விட்டது என்று கூக்குரலிடும் பழைமை வாதிகளே எது கலாச்சாரம்? என்று உற்று நோக்கினீர்கள் எனில் பார்ப்பானின் சாணக்கியத்தனம் புலப்படும் ..
-
மன்னை முத்துக்குமார்
நமக்கு பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பன பத்திரிக்கைகளே...
நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கென்று வெகுகாலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம், வேதம், கடவுள், மோட்சம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங்களையும் ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் தாங்களே உயர்ந்தோர்களாயிருந்து கொண்டு நம்மை ஏய்த்துத் தாழ்த்தி வயிறு வளர்ப்பதல்லாமல், அரசியல், சுயராஜ்யம், தேசியம், தேசியப்பத்திரிகை, தேச சேவை என்கிற பெயர்களாலும் பலவித இயக்கங்களையும் பத்திரிக்கைகளையும் உண்டாக்கிக் கொண்டு அதன் மூலமும் நாங்களே தேச பக்தி உள்ளவர்கள் என்றும், தங்களுடைய பத்திரிகைகளே தேசியப் பத்திரிக்கைகள் என்றும் நமது பணத்திலேயே விளம்பரப்படுத்திக் கொண்டு,

நம்மைத் தாழ்த்தி மிதித்து மேலேறிப் பல வழிகளிலும் வயிறு வளர்க்க ஆதிக்கம் தேடி வைத்துக் கொண்டு விட்டார்கள்.
இவைகளில் எல்லாவற்றையும் விட நமக்குப் பெரிய ஆபத்தாயிருப்பது பார்ப்பனப் பத்திரிகைகளே. அப்பத்திரிகைகளின் செல்வாக்கு நம் நாட்டை அடியோடு முற்றுகை போட்டுக் கொண்டிருக்கிறது.

பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தங்களைப் போதிய அறிவுள்ள மக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலரும் அப்பத்திரிக்கைகளின் மூலம் ஏமாறுவதும் அப்பத்திரிகைகளின் மூலம் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாவதும் வளர்ந்து கொண்டே வருகிறது. தமிழ் நாட்டு மக்கள் இப்பார்ப்பனக் கொடுமை முற்றுகையிலிருந்தும், அன்னிய ஆட்சிக் கொடுமை முறைகளிலிருந்தும் தப்ப வேண்டுமானால் இப் பார்ப்பனப் பத்திரிக்கைகளைப் பார்த்து ஏமாறுவதையும் அவைகளுக்கு அடிமைகளாவதையும் ஒழித்தாலல்லது கண்டிப்பாய் முடியவே முடியாத நிலைமையில் இருக்கிறோம்.


அவைகள் செய்யும் அக்கிரமங்களை நினைக்கும் போது நமது மக்கள் மனிதர்கள் தானா? மனிதப்பிறவிதானா? இப்பிறப்புக்கு மானம் வெட்கம் என்கிற தன்மைகள் இருக்கின்றனவா என்று சந்தேகப்படவேண்டியிருக்கிறது. நமது கெடுதிக்காகவே இப்பார்ப்பனப் பத்திரிக்கைகள் நடந்து வருவதையும், பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரமே அதன் கொள்கைகளாக இருப்பதையும் நாம் சந்தேகமற -மனப்பூரணமாய்த் தெரிந்திருந்தும், இப்பிரச்சாரங்களுக்குப் பணம் கொடுத்து நாம் நாசமாய்ப்போவதற்காக அப்பத்திரிகைகளையே வாங்கிப் படிப்பதென்றால், யாராவது நம்மை அறிவு புத்தி, ஒழுக்கம், மானம், வெட்கம், சுயமரியாதை உள்ள சமூகம் என்று சொல்லக் கூடுமா? என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.


பிறரைக் குற்றம் சொல்லும்போதுமாத்திரம், கள்ளு சாராயம் குடிப்பது கெடுதி என்று தெரிந்திருந்தும் மறுபடியும் அதைக் குடிக்கிறார்களே என்ன புத்தி கெட்ட ஜனங்கள், மானங்கெட்ட ஜனங்கள் என்கிறோம், ஆனால் அந்தப்புத்தியும் மானமும் நமக்கு இருக்கிறதா என்பதைப் பார்ப்பவர்கள் நம்மில் 1,000க்கு ஒருவரைக் கூடக்காணோம். பார்ப்பனப்பத்திரிக்கைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு மாத்திரமில்லாமல். நம்முடைய இழிவுக்கும் தாழ்மைக்கும் அழிவுக்கும் நடத்தப்படுகிறது என்பதை அறிந்திருந்தும், அதைப் பணம் கொடுத்து வாங்கிப் படிப்பவர்களுக்குப் புத்தியும் மானமும் இருக்கிறதா என்பதைக் கவனிப்பதில்லை. உதாரணத்திற்காக ஒரு பத்திரிகையை எடுத்துக் கொள்வோம்.


சாதாரணமாக சுதேசமித்திரன் என்னும் பத்திரிகை பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாருடைய பணத்தையே மூலதனமாகக் கொண்டது. அதன் பத்திராதிபர்கள், உப பத்திராதிபர்கள் மானேஜர்கள் முதலியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அவர்கள் சம்பளமோ மாதம் 1500, 1000, 800, 600 இப்படி அனுபவிக்கிறார்கள். இப்பத்திராதிபர் பார்ப்பனரல்லாதாரை ஒழித்துப் பார்ப்பன ஆதிக்கம் தேடுகிற பிரச்சாரம் தவிர, வேறு வேலை ஏதாவது செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா?


நம்மை நாமே கெடுத்துக்கொள்ள நமது பணமே உதவவேண்டுமா? அதற்கு விளம்பரம் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்களே! அதை வாங்கிப் படித்துக் கெடுகிறவர்கள் பார்ப்பனரல்லாதார்களே! இதில் ஏதாவது ரகசியம் இருக்கிறதா அல்லது இப்பார்ப்பனர்கள் எதையாவது இரகசியமாய்ச் செய்கிறார்களா? நேருக்கு நேராக நம்மைப் பார்த்து நீங்கள் முட்டாள்கள், உங்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை புத்தி அறிவு இவைகள் கிடையாது.

ஆதலால் நாங்கள் உங்களை ஏமாற்றுகிறோம். உங்களால் என்ன செய்ய முடியும்? உங்களில் யாரோ சிலர் கத்தினால் கத்தட்டும் எங்களுக்குக் கவலை இல்லை. இதற்காக நாங்கள் கொஞ்சமும் பயப்பட்டு எங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. உங்களிலேயே சில அயோக்கியர்களையும் முட்டாள்களையும் நாங்கள் சுவாதீனம் செய்து கொண்டு உங்கள் கத்தல்களை ஒழிக்க எங்களுக்குத் தெரியும் ஒரு கை பார்க்கலாம் வாருங்கள் என்று தைரியமாகச் சொல்லுகிறார்கள். இதற்கொன்றும் மார்க்கமில்லையாவென்றுதான் கேட்கிறோம்.


குடிஅரசு தோன்றிய பிறகு, மித்திரன் சுமார் 2000 சந்தாதாரர்களுக்கு மேலாகவே இழக்க நேரிட்டும் இன்னமும் பார்ப்பனரல்லாதாரிலேயே பல பங்குக்காரர்களை இரகசியமாகச் சேர்த்து பணம் சம்பாதிக்கப்பட்டு வருகிறது.
நம்மவர்கள் முன்னேற்றத்திற்கென்றே நடத்தப்பட்டு வருகிற பத்திரிகைகளைக் கையில் தொடுவதற்கும் நமது மக்கள் அஞ்சுகிறார்கள் என்றால், நமது யோக்கியதையை என்னவென்று சொல்லுவது? சாதாரணமாக திராவிடன் பத்திரிகை எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்டு வருகிறது என்பதை யாராவது உணருகிறார்களா?

அது யாருடைய நன்மைக்கு நடத்தப்படுகிறது என்பதை யாராவது அறிகிறார்களா? யாரையாவது போய் ஐயா, திராவிடன் பத்திரிகை தங்களுக்கு வருகிறதா? இல்லையானால் ஒன்று வரவழையுங்கள் அதைப் படித்துப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் அதனால் நம்மவர்களுக்கு ஏற்படும் கஷ்டத்தையும் உணர்ந்து அதிலிருந்து தப்புவதற்கு வேண்டியது செய்யுங்கள் என்றால், திராவிடனா? அதிலென்ன இருக்கிறது? அதைப் பார்த்தாலே என்னமோ போல இருக்கிறதே?அந்தப் பெயரே நமக்குப் பிடிக்கவில்லையே என்று சொல்லிவிடுகிறார்கள். இதை தங்களுக்குத் தோன்றுகிறபடி. வாஸ்தவமாகத் தானே சொல்லுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். கட்டின பெண்ஜாதியை விட தாசி வீட்டுக்குப்போய் சொத்தைப் பாழாக்கி வியாதி கொள்ளுகிறவர்களைப் பார்த்து, என்னப்பா கட்டின பெண்ஜாதியை வீட்டில் வைத்து விட்டுத் தாசி வீட்டிற்குப்போய் சொத்தையும் பாழாக்கி வியாதியும் கொள்ளுகிறாய் என்றால், மேல் கண்ட மாதிரி பதில் சொல்லுகிறான். அதாவது வீட்டில் என்ன இருக்கிறது?


அவளைப் பார்த்தாலே எனக்குப் பிடிப்பதில்லை அவள் நடந்துகொள்ளுகிற மாதிரியே மனதிற்கு அசிங்கமாகப் படுகிறது. ஒரு கட்டிலுண்டா? மெத்தையுண்டா? வாசனையுண்டா? அடிப்பதுண்டா, கிள்ளுவதுண்டா, சட்டி பானை கழுவுகிறவள் தானே என்று ஆரம் பித்து விடுகிறானேயல்லாமல், இதெல்லாம் எதற்காகச் செய்யப்படுகிறது பின்னால் நம்முடைய கதி என்னாகும் என்கிற கவலையே இல்லாமல் அறிவீனமாய் நடந்து கொள்ளுகிறான். அப்படிப்போல் நம்மை மயக்கி ஏய்த்து, நம்மைப் பாழாக்கி, கொள்ளை கொள்ள நடக்கும் பத்திரிகைகள் ஏமாற்றத்தகுந்த மாதிரியாகத்தான் நடத்தப்படும்.

ஒருநாள் பூரா படிப்பதற்கும் விஷயமிருக்கலாம் ஆனால் அது பெரும்பாலும் என்ன விஷயம். நம்மைக் கழுத்தறுக்கும் விஷயமும், பொழுது போக்கு விஷயமுமாகத்தானே இருக்கும். ஆதலால் மானமுள்ள மக்கள் தமது சொந்தப் பெண்டை அன்னியன் குற்றம் சொல்லும்படியாகவும், கஞ்சிக்குத் திண்டாடும் படியாகவும் விடாமல், காப்பதை எப்படி தமது கடமையாய் நினைப்பார்களோ அதுபோல் திராவிடன் பத்திரிகையை ஆதரிப்பதோடு, கட்டின பெண்டைத் தெருவில் அலையவிட்டுத் தாசி வீடு காத்துத் திரிவதுபோல் திராவிடனை விட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளைக் கட்டி அலைவதை மறந்து, நமது மானத்தைக் காப்பாற்ற உதவி செய்யவேண்டும் என்பதாகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்ளுகிறோம். இந்த மார்க்கம்தான் பாமர மக்களைக் காப்பாற்றவும், நமது மக்கள் எல்லோருக்கும் சுயமரியாதை ஏற்படவும் சரியான மார்க்கமாகும்.
-------------
தந்தை பெரியார் -"குடிஅரசு" தலையங்கம் - 30-01-1927

மன்னை முத்துக்குமார்
விபச்சாரம் என்பது உண்மையான ஒழுக்கத்திற்கு எதிரானது அல்ல..

மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம். அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவ கோடிகளின் திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும்.
குடி அரசு - 17.08.1930


மக்களின் அன்பும் காதலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்னவிதமாக இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில் காதல் என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமேயாகும். அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும் அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடையதாயும் இருக்க வேண்டுமென்றும் அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக் கொள்ளுகின்ற மக்கள் அன்பு ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்;


காதல் ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முன் வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம். ஆனால் அநுபவத்தில் உள்ள சில சவுகரிய அசவுகரியங்களை உத்தேசித்து அன்பும் காதலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க வேண்டியதாக ஏற்படலாம் என்பதை நாம் மறுக்க வரவில்லை. அன்றியும் ஒப்பந்தங்களினால் கட்டுப்பட வேண்டியதாகவும் காதல் பெருக்கால் தானாகவே கட்டுப்பட்டு விட்டதாகவும் போனாலும் போகலாம். அம்மாதிரி நிலைமைகளில் இம்மாதிரிக் கேள்விக்கே இடமில்லை. ஆதலால் அப்படிப்பட்ட காரியங்களை அவரவர்கள் இஷ்டத்திற்கே விட்டு விட வேண்டியது அவசியமாகும். ---குடி அரசு - 12.10.1930

சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும்.. ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாகயிருக்கலாம். ஆன போதிலுங்கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்னவென்றால் மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப்படாமையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும.

மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்னவென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எதுவென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும். மற்றும் விபசாரம் என்பது ஒருவனுடைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல


பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்துக்கும் பாதக மேற்பட்டதாகவும் அதுவும் பிரயோகத்தில் சிறிதும் பாரபக்ஷம் உயர்வு தாழ்வு தத்துவம் கொண்டதல்லாததாகவும் இருக்கவேண்டுமென்பதோடு எல்லாவற்றையும் விட அவை முக்கியமாக இயற்கையோடியைந்ததாகவுமிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகமுண்டு பண்ணாததாகவுமிருக்க வேண்டும். நியாயமான என்றதினாலேயே எது நியாயம்? என்பதற்காக “தர்மசாஸ்திரங்களை”த் தேட வேண்டும் என்பது கருத்தல்ல. (மற்றெப்படி கண்டுபிடிப்பதென்றால் ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லப்படுவதானது பிறத்தியானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால் அவன் முதலில் சொன்னவன் ஒப்புக்கொள்ளுகின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதேயாகும். அதாவது இருவருக்கும் ஒன்று போன்றது) அன்றியும் அறிவுக்கும் சாத்தியத்திற்கும், அநுபவத்திற்கும் ஏற்றதாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.


இப்படிக்கெல்லாம் இல்லாமல் வெறும் நிர்ப்பந்தத்திற்கு நாணயமற்றதும் அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒவ்வாததானது மான விஷயங்களுக்காக வலுத்தவர்கள் தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றின படிக்கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்து கொண்டு போவதானது எவ்விதப் பயனையும் தராததோடு மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத்தனத்தையும், அறிவுத் தடையையும் தான் உண்டாக்கும்.

-
மனிதனின் ஜீவசுபாவம் என்னவென்றால் உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய் பசி, நித்திரை, புணர்ச்சி மூன்றும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம். இந்திரியங்களின் காரணமாய்ப் பஞ்சேந்திரியங்களும் அதாவது சரீரம், வாய், கண், மூக்கு, காது ஆகியவைகளின் செயல்களையும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.


ஆகவே பொது உணர்ச்சியும் இந்திரிய செயலும் மனிதனுக்கு ஆசையை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆசையின் காரணமாய் எதையும் ஆசைப்படுவதும் அதுவும் அனேகமாய் அளவுக்கடங்காமல் மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும் சுபாவமாகவே இருக்கின்றதைப் பார்க்கின்றோம். ஆகவே உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையும் மனிதனால் சாமான்யத்தில் கட்டுப்படுத்தக் கூடியதல்ல. யாராலாவது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றால் அப்படிப்பட்டவரைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. நாம் சொல்லுவதும் அவருக்குச் சம்பந்தப்பட்டதல்ல. (அவர்கள் பல லட்சத்திற்கு ஒருவர் இருப்பார்களோ என்னமோ) அந்தப்படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும் இந்திரிய செயலையும் ஆசையையும் கட்டுப்படுத்தும்படியானதாகக் கொள்கைகளை ஒழுக்கங்களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவாணியாகுமா? செலாவாணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டாமாவென்று தான் கேட்கின்றோம்.
----குடி அரசு - 26.10.1930


ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்க வேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும்போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம் முறையை இஷ்டப்படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத்தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.


புருஷன் பெண்சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண் சாதி என்பவர்களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத்தில் நமது அபிப்பிராயமாகும்.
ஆகவே, எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவ குண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமூகவிடுதலை என்றும் சொல்லுகின்றோம். --குடி அரசு - 13.09.1931

மன்னை முத்துக்குமார்
பிப்ரவரி மாதம் 7 ம் தேதி 2010 -- கோவையில் புதிய தமிழகம் கட்சி நடத்திய உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கட்சி நிறுவனர டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஆற்றிய உரை....

மன்னை முத்துக்குமார்
தீண்டாமை நீடித்திருக்கும் வரை இடஒதுக்கீடும் இருக்க வேண்டும்
-டாக்டர் அம்பேத்கர்.

முதல் தேர்தல் நடைபெறத் தொடங்கியதிலிருந்தே நாம் காங்கிரசுக்கு எதிராகப் போராடி வருகிறோம். ஏனெனில், அது தேவையின்றி நம்முடைய உரிமைகளில் தலையிடுகிறது. காங்கிரஸ் தலைவர் பண்டித நேருவைப் பாருங்கள். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக இரண்டாயிரம் கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட பட்டியல் சாதியினரின் நலன்களுக்காக அவர் பேசியதில்லை. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி, நம் மக்கள் மீது என்ன அக்கறை கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

பண்டித நேரு எப்பொழுதும் முஸ்லிம்களுக்காகவே இருக்கிறார். முஸ்லிம்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. ஆனால், அதிக பாதுகாப்பு தேவைப்படும் பிற சமூகங்களின் நிழலில், முஸ்லிம்கள் அதிக சலுகைகளைப் பெற்றுவிடக்கூடாது.பண்டித நேருவிடம் பட்டியல் சாதியினருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிலர் வேண்டுகோள் விடுத்ததாக நான் அறிகிறேன். அதற்கு நேரு, அந்த மக்களுக்கு எல்லாமே செய்தாகிவிட்டது. அவர்களுக்கென சிறப்பாக எதையும் செய்யத் தேவையில்லை என்று சொன்னாராம். பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் அதிகாரிகள், நம் மக்களை இழிவான வேலைகளை செய்வதற்காக பாகிஸ்தானிலேயே இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர்.

நான் பட்டியல் சாதியினரை அங்கிருந்து வெளியேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நேருவிடம் கேட்டேன். ஆனால், அவர் எதையும் செய்ய முன்வரவில்லை. நான் இருவரை பாகிஸ்தானுக்கு அனுப்பி, நம் மக்களை அழைத்து வரச் செய்தேன். நம்முடைய "மகர்' படையும் அங்கு சென்று பட்டியல் சாதியினருக்குப் பாதுகாப்பு அளித்தது. காங்கிரஸ் தலைவர் நம் மக்கள் மீது இவ்வளவு "இரக்கமுடன்' நடந்து கொண்டால், காங்கிரஸ் கட்சி மட்டும் நமக்கு என்ன செய்துவிடும்?தற்பொழுது இந்தியாவின் அரசியல் வரைபடம் மாறிவிட்டது...

முதலில் காங்கிரஸ் சுயராச்சியத்திற்காகப் போராடியதால், அனைத்து மக்களும் அதில் இணைந்தனர். காங்கிரசை எதிர்த்தவர்கள் தேச விரோதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால், தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் கட்சியினரைப் பாருங்கள். ஒரு காலத்தில் "பார்கவா' மற்றும் "சச்சார்' ஆகியோர் சகோதரர்களாக இருந்தனர். ஆனால், தற்பொழுது அவர்கள் எதிரிகளாக மாறிவிட்டனர். இவ்விரு பிரிவினருமே பிரதமர்களாக விரும்புகிறார்கள்.

பீகாரிலும் இதேநிலைதான் நீடிக்கிறது. பிரிவினையின்போது வலுவாக விளங்கிய காங்கிரஸ் கட்சி, குறுகிய காலத்திலேயே பலவீனமடைந்து விட்டது.இன்று காந்தி தொப்பி அணியும் ஒருவர் நாகரிகமானவராகக் கருதப்படுவதில்லை. மக்கள், "காங்கிரஸ்காரர்' அல்லது "நாகரிக மனிதர்' என்றே அழைக்கிறார்கள். இருவரும் ஒரே மனிதராகக் கருதப்படுவதில்லை. இதுதான் காங்கிரசின் தற்போதைய நிலை. காங்கிரசுக்கு வயதாகிவிட்டதால் அதனால் போராட முடியவில்லை. அது விரைவில் இயற்கை மரணத்தை அடைய நேரிடும். எனவே, நீங்கள் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் நம்முடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று உறுதியளிக்கிறேன்.பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு பத்தாண்டுகளுக்கு மட்டுமே உள்ளது.

ஆனால், தீண்டாமை நீடித்திருக்கும் வரை, இடஒதுக்கீடும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், காங்கிரஸ் தலைவர் மறைந்த சர்தார் வல்லபாய் படேல் என்னை எதிர்த்தார். எனவே, நம்முடைய உண்மையான பிரதிநிதிகளை சட்டப் பேரவைகளுக்கு அனுப்பினால்தான், அவர்கள் நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பார்கள். அப்பொழுதுதான் இடஒதுக்கீட்டு உரிமைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் பாதுகாக்கப்படும். ஆனால், பிற கட்சிகள் நம்முடைய வாக்குகளையும் நம்முடைய தொகுதிகளையும் கைப்பற்றவே விரும்புகின்றனர்; அவர்கள் நமக்கு ஆதரவு அளிப்பதில்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் சின்னங்களை ஒதுக்கும் போது, நம்முடைய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் ஓர் அகில இந்தியக் கட்சியாகக் கருதப்பட்டது. பிற கட்சிகள் பசு, குதிரை, கழுதை போன்ற சின்னங்களை கேட்டனர். ஆனால், நம்மக்களின் வசதிக்காக நான் யானைச் சின்னத்தைத் தேர்வு செய்தேன். இதன் மூலம் நம்முடைய வேட்பாளர்களை கண்டுபிடிப்பதில் நம் மக்களுக்கு சிக்கல் இருக்காது. பிற விலங்குகளிலிருந்து யானையை எளிதில் அடையாளப்படுத்திவிட முடியும்.தேர்தலில் இம்முறை தனித் தொகுதிகளில் வாக்காளர்கள் இரு வாக்குகளை அளிக்க வேண்டும். ஒன்று, தனித் தொகுதி வேட்பாளருக்கும் மற்றொன்று பொதுத் தொகுதி வேட்பாளருக்கும். நாம் ஒரு வேட்பாளருக்கு இருவாக்குகளை அளிக்க முடியாது. எனவே,


நாம் சில கட்சியினருடன் கூட்டணி வைத்தாக வேண்டும்.நம்முடைய கூட்டணிக் கட்சி எது என்பது ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். அவர்களுக்கு நீங்கள் வாக்களித்தால், அதற்குப் பதிலாக அவர்கள் நமது வேட்பாளர்களை ஆதரிப்பார்கள். இவ்வகையில் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

(27.10.1951ல் ஜலந்தரில் ஆற்றிய உரை)
மன்னை முத்துக்குமார்
அண்ணல் அம்பேத்கருக்கு (14-04-2010) 120 வது பிறந்த நாள் :

ஆமாம் அப்படி என்ன விசேசம் எலோருக்கும் தான் பிறந்த நாள் வருகிறது எனலாம், உண்மைதான் பலருக்கு இறந்த பின் ஒரு சில ஆண்டுகள் நினைவில் கொள்வார்கள் , ஆனால் அம்பேத்தர் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் இறப்பு என்பதே இல்லை என்பதாகவே தோன்றும் ..காரணம் அவர் தனக்காக என்று வாழாமல் தன் சமூகத்துக்கு வாழந்தவர் , சமூக முன்னேறத்துக்கு என்றே தன் வாழ்நாளை செலவிட்டவர் --


’நீங்கள் என்னுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள ஒன்று இருக்கிறது என்றால் அது நான் என் சமூகத்தை ஒரு போதும் கைவிட்டது இல்லை , என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.''


என்று சொல்லும் அவர் அப்படியே வாழ்ந்து இன்றும் பலக்கோடி மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இன்று பலர் அப்படிப் பட்ட உன்னத தலைவனுக்கு அவர் இட்டுச் சென்ற பணியை தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்துவதை விட்டு அவரை ஒரு வியாபார சின்னமாக மட்டும் பயன் படுத்தும் அவலமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.. சமூக விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும் என்று மிக தெளிவாகவே அவர் வழிமுறைகளை சொல்லி சென்று இருக்கிறார், அவர் பவுத்தத்துக்கு சென்றார் என்றால் அது அவருடைய பரிசோதனை முயற்சி அதை அப்படியே நாமும் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை , அவரது பல செயல்கள் ஒரு பரிசோதனை முயற்சியகாவே இருந்து இருக்கிறது..நாம் தான் காலத்துக்கு ஏற்றது எது என்பதை அடையாளம் காண வேண்டும்.

இன்று நாட்டின் ஒவ்வொறு கிராமத்திலும், நகரத்திலும் மாநகரங்களிலும் அண்ணலின் சிலையை காண முடியும் , உலகில் அதிக சிலை உள்ள ஒரு புரட்சியாளர் இருக்கிறார் என்றால் அது டாக்டர் அம்பேத்கர் மட்டுமே..இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விசயம் என்னவெனில் சிலை வைத்து கொண்டாடப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது , ஆனால் அதை அண்ணலே உயிரோடு இருந்தால் விரும்ப தகாத செயல் என்று தான் சொல்லுவார்..சமூக மாற்றத்துக்கு செய்ய வேண்டியதை செய், அது போதும் என்பார் . சிலைகள் மாற்றத்தை உண்டு பண்ணூமா? என்றால் குறைந்த பட்சம் வாய்ப்பு கூட இல்லை என்றே பதில் வரும்.. அவர் மீது கொண்டுள்ள அன்பை நாம் நம் சமூக மக்களுக்கு தொண்டு செய்து காண்பித்தால் போதும்..ஒவ்வொறு தாழ்த்தப்பட்ட சகோதரனும் இட ஒதுக்கீடில் பயன் பெற்று அரசு வேலை வாய்ப்பில் தன்னுடைய நிலையை உயர்த்தி கொண்ட பிறகு எனது சந்ததியினருக்கு இனி இட ஒதுக்கீடு வேண்டாம் என் சமூகத்துக்கு கொடுங்க கஷ்டப்படும் ஒரு ஒடுக்கப்பட்ட என் சகோதரன் மேலே வரட்டும் என்பதில் அவருக்கு நன்றி காட்டலாம் இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு கிராமத்தில் மிகவும் கஷ்டப்படும் ஒரு தன் சமூக இளைஞனை தத்து எடுத்து படிக்க வைப்பதில் அண்ணலுக்கு நன்றியை செலுத்தலாம் இன்னும் பல வழிமுறைகளில் அதை செய்யலாம்

மன்னை முத்துக்குமார்
"ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’


"தீண்டத்தகாதோர் யார்?' என்ற நூலை டாக்டர் அம்பேத்கர் குரு ரவிதாசுக்கு அர்ப்பணித்துள்ளார். :

“தீண்டத்தகாதவர்களிடையே பிறந்து தங்களுடைய மேன்மைமிகு நடத்தையாலும், நற்பண்புகளாலும் அனைவரது நன்மதிப்பையும் பெற்ற துறவிகளான நந்தனார், ரவிதாஸ், சொக்கமேளா ஆகியோரின் நினைவிற்கு...''

குரு ரவிதாஸ், உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் உள்ள சீர்கோவர்தன்பூரில் 1433 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் சன்தோக் தாஸ். தாய் கல்சாதேவி. மாதா லூனா என்ற பெண்ணை அவர் மணந்தார். மாதா லூனா, குரு ரவிதாசின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு முழு ஆதரவாக நின்ற மிக எளிமையான பெண்.

ரவிதாஸ் காலத்தின் சமூகத்தில் கொடுமையாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட சாதி அமைப்பின் காரணமாகவும், தீண்டாமை வழக்கங்களாலும் பெரும்பான்மை மக்கள் பெரிதும் வேதனைகளை அனுபவித்து வந்தனர். அதிலும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்களே. சமூக அளவில் தனிமைப்படுத்தப்பட்டு, சாதி அடிப்படையிலான கடும் கட்டுப்பாடுகளால் அவர்கள் மிருகங்களை விட மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

இந்த சூழலில், செருப்பு தைக்கும் தீண்டத்தகாதவரான குரு ரவிதாஸ், பார்ப்பனிய ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாக எழுந்து, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பார்ப்பனிய நூல்களான வேதங்கள், புராணங்கள், ஸ்மிரிதிகள், உபநிடதங்கள் போன்றவை அனைத்தும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு துணை போவதாகவும், சமூக சமத்துவமின்மையை நியாயப்படுத்துவதாகவும், பெரும்பான்மை மக்களை சுரண்டுவதாகவும் இருப்பதால் அவை அனைத்தையும் எதிர்த்தார் : “ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்.''

வேதங்கள் மற்றும் பிற பார்ப்பனிய எழுத்தாக்கங்கள், குற்றமற்றவை என்றும், உண்மை மற்றும் அறிவின் ஊற்றுக்கண் என்றும் கூறுவதன் மூலம் பார்ப்பனர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை, நேரடியாக எதிர்த்து தாக்குதல் நடத்தினார். பார்ப்பனியப் பிரச்சாரத்தின் உள்நோக்கங்களையும் குற்றங்களை யும் வெளிப்படுத்தியதோடு, உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அனைத்து மனிதர்களுக்குமிடையே சமத்துவத்தை நாடுவதாகவும், எவ்வித மத சடங்குகளும் இல்லாததுமாகிய ஒரு சமூக மதமாற்றினை அளிக்க பெரும் முயற்சிகளை குரு ரவிதாஸ் மேற்கொண்டார்.

குரு ரவிதாஸ்இந்த நாட்டின் சமூக மத சமத்துவமின்மையை எதிர்ப்பதோடு நில்லாமல் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்காகப் பரப்புரையை மேற்கொண்டார். அவர் மிகச் சிறந்த கவிஞராக இருந்தார். அவருடைய கவிதைகள் இன்றளவிலும் நாட்டின் உழைக்கும் மக்களிடையே பாடப்பட்டு வருகின்றன.

பார்ப்பனர்களின் ஒட்டுமொத்த ஆதிக்கத்தில் இருந்த சமஸ்கிருதத்திற்கு எதிராக "குருமுகி' என்ற மொழியை உருவாக்கியவராகவும் அவர் அறியப்படுகிறார். பிற சாதி இந்துக்களுக்கான கருவியாகவும் அந்த மொழியை அறிவித்தார். சீக்கிய அறிவுரை ஆக்கங்கள் அனைத்தும் "குருமுகி' மொழியிலேயே அமைந்திருந்தன என்ற உண்மையின் மூலம், இந்திய சமூகத்தில் குரு ரவிதாசின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்பது விளங்கும்.

கல்வியறிவு பெறுவதன் அவசியத்தை பாபாசாகேப் அம்பேத்கர் எந்த அளவுக்கு வலியுறுத்தினார் என்பதை நாம் அறிவோம். அவரைப் போலவே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குரு ரவிதாஸ் கூறினார் : “அறியாமை, கல்வியறிவின்மை பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. நமது பகுத்தறிவினை அது தேய வைத்திருக்கிறது.''

“ஒரு சமூகத்தை அழிக்க வேண்டும் என்றால், அதன் வரலாற்றை அழித்தால் போதுமானது. அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும்'' என்றார்அம்பேத்கர்.

தலித் பெரும்பான்மை மக்களின் வரலாற்றை அழிப்பதன் மூலம், அவர்களை உளவியல் ரீதியாக இயலாதவர்களாகவே இருக்க வைக்க இந்து அடிப்படைவாதிகள் எப்போதுமே தனி அக்கறை செலுத்தி வந்துள்ளனர். வரலாற்றாய்வாளர்களும் வழக்கம் போல உண்மையோடு விளையாடி, பல நூற்றாண்டுகளாக மக்களை தவறாக வழி நடத்தி வந்தனர். புத்தரை விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக முன்னிறுத்துவதைப் போலவே, குரு ரவிதாசையும் தங்களின் 33 கோடி போலி கடவுள்களுள் ஒருவராக முன்னிறுத்த, பார்ப்பனிய சக்திகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தன. சுவாமி ராமாநந்த் என்பவர் தான் ரவிதாசின் குரு என காட்ட பல அறிஞர்கள் முயன்றனர். சுவாமி ராமாநந்த் குரு ரவிதாசை தனது சீடர்களில் ஒருவராக எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.
சூத்திர முனிவரான சம்பூகன் தவம் அதாவது கடவுளை வணங்கியதற்காக அரசனான ராமனால் கொல்லப்பட்டார். துரோணாச்சாரியார் ஏகலைவனை வற்புறுத்தி, தனது வலது கை கட்டை விரலை வெட்டிக் (குருதட்சிணையாக) கொடுக்க வைத்தார். சாதியும், பாகுபாடுகளும் உச்சத்தில் இருந்த காலத்தில், தலித்துகள் கொல்லப்பட்ட காலத்தில், கடவுளைப் போற்றும் சொற்களை கேட்டாலோ அல்லது கடவுளை வணங்க முற்பட்டாலோ அவர்கள் காதுகள் வெட்டப்பட்ட காலத்தில் ஒரு தொடுதலோ, ஏன் ஒரு நிழலோகூட சாதி இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் புனிதத்தைக் கெடுத்துவிடும் என்று நம்பப்பட்ட காலத்தில், அரசனான ராமனின் வழியை பின்பற்றிய வரான சுவாமி ராமநந்த், குரு ரவிதாசை தனது சீடராக எவ்வாறு ஏற்றுக் கொண்டிருக்க முடியும்?

குரு ரவிதாஸ் சாதி அமைப்பிற்கு எதிராக நேரடியாக ஏற்படுத்திய சவாலால் அவமானத்தை சகிக்க முடியாமல் குரு ரவிதாசை ஒரு பார்ப்பனராகவோ, முற்பிறவியில் அவர் ஒரு பார்ப்பனர் என்றோ காட்ட வேறு சிலர் முனைந்தனர். சர்வக் போன்று யாரேனும் ஒரு பார்ப்பனர் சாதி அமைப்பிற்கு எதிராகக் குரல் எழுப்பி இருந்தாலோ, தங்களது மேலாதிக்கத்தை கேள்வி எழுப்பி இருந்தாலோ அவர்கள் சகித்துக் கொண்டிருப்பார்கள். அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்ட பலர் குரு ரவிதாஸ் முற்பிறவியில் ஒரு பார்ப்பனராக இருந்தார் என்றும், அவர் அப்போது இறைச்சி உண்டதால் அவரால் கடவுளை அடைய முடியவில்லை என்றும் அதனால்தான் மறு பிறவியில் கீழ் சாதியில் பிறந்தார் என்றும் கூறினர்.

பசுக்கள், குதிரைகள் மற்றும் ஆடுகள் கொல்லப்பட்டு, அவற்றைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் மட்டுமில்லாது பார்ப்பனர்களும் உண்டனர் என ரிக் வேதம் குறிப்பிடுகிறது.

“... வால்மீகியின் கூற்றுப்படி உணவில் அனைத்து விதமான சுவையான பதார்த்தங்களும் கலந்திருந்தன. இறைச்சி, பழங்கள் மற்றும் மதுவும் அதில் இருந்தன. ராமன் மது பழக்கம் அற்றவன் அல்ல. அவன் மதுவை விரும்பி உண்டான். தான் மது அருந்தும் நேரங்களில் சீதாவும் தன்னுடன் இணைந்து பருகுவதை ராமன் உறுதி செய்ததை வால்மீகி பதிவு செய்கிறார்...'' (உத்தர காண்ட சர்கம் 42 சுலோகம் 8) "இந்து மதத்தின் புதிர்கள்' டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

இந்து கடவுளர்களில் எத்தனை பேர் இறைச்சியை சாப்பிட்டு கடவுளை அடைய முடியாததால் கீழ் சாதியில் பிறந்தனர்

என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்! இந்துக்களின் எந்த மத நூலிலும் ஒரு மனிதன் இறைச்சி உண்டதால் கீழ் சாதியில் பிறந்ததாக எந்தவொரு நிகழ்வும் குறிப்பிடப்படவில்லை. பின் ஏன் குரு ரவிதாஸ் மட்டும்? (குரு ரவிதாஸ் ஒருபோதும் இறைச்சி உண்டதில்லை என்பதையும், சொல்லப்போனால், பக்ரீத் மற்றும் பிற இந்து மத விழாக்களில் ஆடு மாடுகள் கொல்லப்படுவதை அவர் எதிர்த்தார் என்பதையும் நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும்)

ஒவ்வொரு முறையும் மநுவாதிகள் மோசமாக தோல்வியடைந்தனர். ஏனெனில், குரு ரவிதாஸ் தனது கவிதைகள் மற்றும் பாடல்கள் பலவற்றிலும் தன்னை "சமார்' என்றே அழைத்துக் கொண்டார்.
ரவிதாஸ், ஒரு விடுதலை பெற்ற செருப்பு தைப்பவன், கூறுகிறான்'' என்றொரு பாடலிலும் மற்றொரு பாடலில் குரு ரவிதாஸ் எழுதுகிறார் :

“என்னுடைய சாதி குத்பந்த்லா; தோல் வேலை செய்கிறேன்; காசிக்கு அருகே வாழ்கிறேன்.''

(குத்பந்த்லா உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு உட்சாதிப் பிரிவு)
மற்றொரு பாடலில் ரவிதாஸ் எழுதுகிறார் :

“எனது கூட்டாளிகள் தாழ்வானவர்கள் என்பது என்னை தவிப்பில் ஆழ்த்துகிறது/ என்னுடைய நடவடிக்கைகள் தீதானவையாகக் கருதப்படுகின்றன/ என்னுடைய பிறப்பு தாழ்வானது.''

இவை எல்லாம் குரு ரவிதாசின் சிந்தனைகளிலிருந்து தலித் பெரும்பான்மை மக்களை விலக்கி வைக்க முயன்ற பார்ப்பனர்களின் மற்றொரு சதித் திட்டமே. தலித் பெரும்பான்மை மக்கள் சாதி எனும் தடையை உடைத்து விடுதலை பெற குரு ரவிதாசின் சிந்தனைகள் வழிநடத்தும். ஏனெனில் சமத்துவம், சுயாட்சி, "பேகம்புரா' எனப்படும் துயரற்ற நகரம் ஆகியவற்றைப் பற்றி பேசியவர்களில் குரு ரவிதாஸ் முதன்மையானவர் (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பேகம்புராவை மனதில் வைத்தே இந்தியாவின் அரசியல் சட்டத்தை எழுதினார் என தோன்றுகிறது).

குரு ரவிதாசின் குரு யாரெனக் கேட்டால், குரு ரவிதாஸ் ஒருபோதும் 33 கோடி போலி கடவுள்கள் எதையும் வணங்கியதில்லை. அவர் தியானம் செய்ததும் வணங்கியதும் ஒரே கடவுளை நோக்கியே. அவர் சொல்கிறார் : “(கடவுளாகிய) உனக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தங்கத்திற்கும் நகைகளுக்கும் இடையிலும், நீருக்கும் அதன் அலைகளுக்கும் இடையிலும் எந்த வேறுபாடும் இல்லாதது போல.''

கடந்த ஆண்டு குரு ரவிதாசின் பிறந்த நாளின்போது "ரோசனா ஸ்போக்ஸ்மேன்' செய்தித்தாள், குரு ரவிதாஸ் (அந்நாளிதழ் "பகத்' என்றே குறிப்பிட்டது) சீக்கிய குருக்களின் அறிவுரைகளை அறியாதவராக இருந்தார் என்று கூறிய ஒரு கட்டுரையை வெளியிட்டது. குரு ரவிதாசை பற்றிய கதைகள் தவறான வகையில் கட்டுரையாசிரியரால் எடுத்தாளப்பட்டிருந்தன. குரு ரவிதாசின் வாழ்க்கை குறித்த எந்த வரலாறும் இல்லையென்று அக்கட்டுரை தவறாகக் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறு குறிப்பிடுவது மடத்தனமானது மட்டுமல்ல, சூழ்ச்சியானதும்கூட. ஏனெனில் குரு ரவிதாசின் பாடல்கள், சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந்த்தில் இருக்கிறது. சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் தனக்குப் பிறகு குரு கிராந்த் சாகேபையே குருவாகக் கருதி பின்பற்றுமாறு கூறியிருந்தார்.

ஆகவே, குரு கிராந்த் சாகேபில் உள்ள அனைத்து குருக்களின் (குரு ரவிதாஸ் உட்பட) "பானி'க்களும் சமமாகவே கருதப்பட வேண்டும். ஏன் சிலரை "பகத்' என்றும் வேறு சிலரை "குரு' என்றும் குறிப்பிட வேண்டும்? இந்த முறை இத்தகைய வேலையை செய்தவர்கள் பார்ப்பனிய சக்திகளின் பிடியில் உள்ள சீக்கிய அறிஞர்களே. இவர்கள், இந்து மதத்தின் சாதியத்திற்கு எதிராக சமத்துவத்திற்காக உருவான தனித்த மதமே சீக்கிய மதம் என்பதை மறந்து விட்டனர்.

யார் பகத்? யார் குரு?

ஒருவர் வாழ்வின் உண்மையை அறிய தியானம், வணங்குதல் போன்ற வழிகளின் மூலம் நிறைவான நிலையை அடைய முயலும் வரையில், அந்த மனிதர் ஞானத்தை அடையாத நிலை வரையில் அவரை "பகத்' என்று அழைக்கலாம்.
ஆனால் அந்த மனிதன் வாழ்வின் உண்மையை அடைந்துவிட்டால், ஞானத்தைப் பெற்றுவிட்டால், கற்றுக் கொடுக்கத் தொடங்கிவிட்டால் அவர் குரு ஆகிறார்.
அந்த நிலையில் அவர் "பகத்'தாகவே இருப்பதில்லை.

ஏராளமான அரசர்களும் அரசிகளும் குரு ரவிதாசின் சீடர்களாக ஆகியுள்ளனர். அவரை குருவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். குருவாக மட்டுமல்ல, ராஜகுருவாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் ராஜா பிபா, ராஜா நாகர் மால், ரேவா நரேஷ், ராணி ஜலன் பாய் மற்றும் மீரா பாய். மீரா பாய் அரசன் கிருஷ்ணனின் ரசிகையாக முன்னிறுத்தப்படுகிறார். உண்மையில் அவர் குரு ரவிதாசை பின்பற்றுகின்றவராகவே இருந்தார்.

மீரா நே கோபிந்த் மில்யா ஜிகுரு மல்யா ரவிதாஸ் (மீரா பாடாவளி 4)
குரு ரவிதாசிற்கு அர்ப்பணித்து பல கோயில்களை அவருடைய சீடர்களான மன்னர்கள் கட்டினர். ஆனால் பிற்காலத்தில் அவை இடிக்கப்பட்டன அல்லது இந்து கோயில்களாக மாற்றப்பட்டன.

"சிறீ குரு ரவிதாஸ் வாழ்வும் எழுத்துகளும்' என்ற நூலின் 116117 பக்கங்களில் அதன் ஆசிரியர் டாக்டர் லேக் ராஜ் பர்வானா பதிவு செய்துள்ளதன்படி, குரு ரவிதாஸ் வட இந்தியாவிற்கு இரண்டு முறை சென்றுள்ளார். முதல் முறை செல்லும் போது அவருடன் கபீர் ஜி, தர்லோசன் ஜி, சாயின் ஜி மற்றும் தன்னா ஜி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்பொழுது "நான்கானா சாகேப்' என்று அழைக்கப்படும் "சுர்கானா'வில் குரு நானக் தேவை சந்தித்துள்ளனர். அங்கு குரு நானக் தேவ் அவர்களுக்கு உணவளித்ததோடு, அவரது மதிப்பிற்குரிய தந்தை மேத்தா காலு ஒரு லாபகரமான வியாபாரத்தை நடத்த தனக்கு அளித்த 20 ரூபாயை இவர்களிடம் அளித்துள்ளார்.

இரண்டாவது முறை பஞ்சாபிற்கு சென்ற போது, சுல்தான்பூர் லோதியில் உள்ள காலி பெயினின் சந்த் கந்தில் குரு நானக் தேவை அவர் சந்தித்தார். மூன்றாவது முறை அவர் குரு நானக் தேவை காசியில் உள்ள "குரு காபாக்' எனும் இடத்தில் சந்தித்தார். அவர்கள் மதம், சமூக அமைப்பு, மனிதர்களின் விடுதலை ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். குரு நானக் தேவின் விருப்பத்திற்கு இணங்க, குரு ரவிதாஸ் 40 பாடல்களும் ஒரு குறளும் கொண்ட ஒரு பானியை அவருக்கு பரிசளித்தார். குரு நானக் தேவுடன் வசித்து வந்த மர்தானா, பல நேரங்களில் குரு நானக் தேவின் விருப்பத்திற்கிணங்க அவர் முன் குரு ரவிதாசின் பாடல்களைப் பாடுவார். குரு நானக் தேவின் வாழ்க்கைக்கும் அவருடைய அறிவுரைகளுக்கும் ஒரு சரியான திசையை அமைத்தவர் குரு ரவிதாசே. அதனால் இன்றைய சீக்கிய அறிஞர்கள் யார் உண்மையான குருவாக இருந்தார்கள், யாரை அவர்கள் குரு அல்லது பகத் என்று அழைக்க விரும்புகிறார்கள் என்பதை குறித்து கேள்வி எழுப்ப அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

1920 வரை சீக்கியர்களின் புனித தலமான தங்கக் கோயிலில்தீண்டத்தகாதவர்களின் நைவேத்தியங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதோடு அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்யப்படுவதும் இல்லை ("அமிர்தசரசின் பழம்பெருமை' எஸ் எஸ். ஜோகர்). இவை எல்லாம் சீக்கிய அறிஞர்கள் எந்த அளவு சீக்கிய மத கோட்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. டாக்டர் அம்பேத்கரால் மதமாற்றத்திற்கு கவனத்தில் கொள்ளப்பட்ட ஒரு மதம் சீக்கிய மதம். ஆனால் சீக்கிய தலைவர்கள், தலித்துகளுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களாகவும் அவர்கள் மீது வெறுப்பு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

"ஜதேதார்'கள் என்று அழைக்கப்படும் சீக்கியத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் மநுவாதி மக்களின் கைப்பாவைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இது, சீக்கிய மதத்தின் முடிவுக்குதான் இட்டுச் செல்லும். இது தொடர்ந்தால், இந்து மதக் கடவுள்களின் சிலைகள் "தர்பார் சாகேப்' என்று அழைக்கப்படும் தங்கக் கோயிலில் காணும் நாள் அதிக தொலைவில் இல்லை. ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சொந்தப் பெயரில் சீக்கிய தலைவர்களை சந்திப்பதும் அவர்களை தவறாக வழி நடத்துவதும் கடினம் என்பதால் "பிரேரனா', ராஷ்டிரிய சீக்கிய சங்கத்', "குரு கிரந்த் சாகேப் விசார் சன்ஸ்தா' என்ற பெயர்களில் துணை அமைப்புகளை உருவாக்கி உள்ளது. தற்பொழுது சீக்கிய அறிஞர்கள் இந்த அமைப்புகளின் நடவடிக்கைகளில் பங்கெடுப்பதும் முழுமையாக ஆதரிப்பதும் நாம் அனைவரும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜதேதார்களும் மற்றும் பலரும் மறந்தது என்னவெனில் :

1. சீக்கிய குருக்கள் ஒற்றைக் கடவுளை மட்டுமே நம்பினர். மாறாக, இந்துக்கள் பல ஆண், பெண் கடவுளர்களை வணங்குகின்றனர்.

2. இந்து முப்பெரும் கடவுளர்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனை சீக்கிய குருக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்தனர்.

3. வடிக்கப்பட்ட சிலைகளையோ, உருவங்களையோ வணங்குவது சீக்கிய மதத்தில் முற்றிலுமாக தடை செய்யப்

பட்டுள்ளது. மாறாக, இந்து மதத்தில் அவை ஏற்கப்பட்டுள்ளன.

4. சீக்கியர்களால் பசு ஒரு புனித மிருகமாகக் கருதப்படுவதில்லை. அதனால் அது வணங்கப்படுவதுமில்லை.

5. வேதங்கள், கீதை மற்றும் பிற இந்து எழுத்தாக்கங்களின் மேலாதிக்கத்தை சீக்கிய மதம் அங்கீகரிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை.

6. சீக்கிய குருக்களும் குரு ரவிதாசும் சாதி அமைப்பை முற்றிலுமாக நிராகரித்தனர். அனைத்து ஆண்களும் பெண்களும் அவர்களின் சாதி, நிறம், இனத்திற்கு அப்பாற்பட்டு சமமாக நடத்தப்பட வேண்டும் என்றே கூறினர். இந்து மதம் இவற்றை எல்லாம் செய்கிறதா?

7. மரணம் மற்றும் திருமணத்தை ஒட்டிய சீக்கிய மத சடங்குகளும் மரபுகளும் இந்து மதத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.

குரு கிராந்த் சாகேபில் "பகதா தி பானி' பகத்தின் பாடல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதாக பல சீக்கிய அறிஞர்கள் கோருகின்றனர். அப்படியெனில், குரு நானக் தேவ் தொடங்கி குரு கோவிந்த் சிங் வரை எங்கும் குரு என்ற சொல் அவர்களை குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. மகளா1, மகளா2 போன்றவற்றில் "குரு நானக் தேவின் பானி', "குரு கோபிந்த் சிங்கின் பானி' என்று போடவில்லை. (மகளா என்றால் பொது மனிதன்) குரு நானக் தேவை, ஒரு பொது மனிதராக சீக்கிய அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்களா? குரு நானக் தேவின் பிறப்பு கதைகளில் பல இடங்களில் அவரைக் குறிப்பிடும்போது பாபா, தபா, பிர் என்று பல பெயர்களில் குறிப்பிடுகின்றனர். குரு நானக் தேவ் தானே பல இடங்களில் தம்மை பொது மனிதன், ஷாயார், நீய்ச் என்று குறிப்பிடுகிறார். சீக்கிய அறிஞர்கள் குரு நானக் தேவை ஷாயார், நீய்ச் அல்லது பாபா என்று ஏற்றுக் கொள்கிறார்களா?

குரு ரவிதாசை குரு என்று ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்கள் அவர் பெயருக்கு முன் "குரு' என்று எழுத விரும்பாதவர்கள்; குரு ரவிதாசின் அறிவுரைகளிலிருந்து எதையும் கற்க விரும்பாதவர்களே ஆவர். அவர்கள் வெறுப்பு நிரம்பியவர்களாக இருக்கிறார்கள். சமத்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்காதவர்கள். பாகுபாட்டைப் பின்பற்றுபவர்கள்.

தலித் பெரும்பான்மை மக்கள் மீதான வன்கொடுமைகள் புதியவை அல்ல. மநுவாதிகள் எப்போதுமே தலித் பெரும்பான்மை மக்களை அடக்கி, ஒடுக்கி, கொடுமைக்குள்ளாக்கி, கொல்ல முயன்று, கொலையும் செய்து, கொள்ளை அடித்து என அனைத்துவித வன்கொடுமைகள் செய்யவும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். இந்த கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்க யார் முனைந்தாலும் அவர்கள் இந்து மதத்தால் கொல்லப்படுகின்றனர் அல்லது உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். குரு நாம்தேவ் கொடுமைப்படுத்தப்பட்டு மகாராட்டிரத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார். குரு (சந்த்) துகாராம், சந்த் சோக்கா மால் கொல்லப்பட்டனர். சந்த் நாத் நார் உயிருடன் எரிக்கப்பட்டார். அதைப் போலவே குரு ரவிதாஸ், அவரை எப்போதும் எதிர்த்த மக்களால் சிட்டார்காரில் கொல்லப்பட்டார்.

தனது வாழ்க்கை முழுவதும் குரு ரவிதாஸ், சமத்துவத்திற்காகவும்சமூக, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வந்தார். பல பாடல்களையும் "ஷலோ'க்களையும் இயற்றினார். அவை இந்து மக்களால் அன்றைய காலத்தில் எரித்து அழிக்கப்பட்டன. குரு கிராந்த் சாகேபில் குரு ரவிதாஸ் இயற்றிய 40 பாடல்களும் 1 குறளும் இணைக்கப்பட்டுள்ளன. "ஒருவனே தேவன்' என்ற சொற்றொடரை முதன் முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர் குரு ரவிதாஸ். 15 ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்குப் பொருந்தியதோ அதே அளவுக்கு இன்றைக்கும் அவருடைய அறிவுரைகள் பொருந்துகின்றன. அனைவரும் அவருடைய அறிவுரைகளிலிருந்து ஒளி பெற்று, அறியாமை இருளிலிருந்து வெளிவரட்டும்.

மன்னை முத்துக்குமார்
"காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது என் உறுதியான கருத்து "..-------டாக்டர் அம்பேத்கர்.


அசாத்தியமானதைச் செய்ய முனையும் இந்த கொள்கை (வெளியுறவுக் கொள்கை) மிகவும் ஆபத்தானது. இதனால் ராணுவத்துக்கு கோடி கோடியாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. இதன் விபரீத விளைவு என்ன? பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்க முடியவில்லை; நமது நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு உதவி செய்ய முடியவில்லை. ஆண்டுதோறும் நாம் பெறும் 350 கோடி ரூபாய் வருமானத்திலிருந்து கிட்டத்தட்ட 180 கோடி ரூபாயை ராணுவத்திற்காகச் செலவழிக்கிறோம். இது மிகப் பெரிய செலவாகும். இந்த அபரிமிதமான செலவீனம், நமது வெளியுறவுத் துறைக் கொள்கையின் நேரடி விளைவாகும். அவசரத் தேவையின் போது நம் உதவிக்காக நாம் நம்பியிருக்கக்கூடிய நண்பர்கள் எவரும் நமக்கு இல்லை என்பதால், நமது பாதுகாப்புக்கான செலவு முழுவதையும் நாமே ஏற்க வேண்டியுள்ளது. இத்தகைய வெளியுறவுக் கொள்கை சரியானதுதானா என நான் வியப்படைகிறேன்.

பாகிஸ்தானுடனான நமது மோதல், நமது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது குறித்து நான் பெரிதும் அதிருப்தியடைந்துள்ளேன். பாகிஸ்தானுடனான நமது உறவுகள் பாதிக்கப்பட்டதற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன: ஒன்று காஷ்மீர், மற்றொன்று கிழக்கு வங்காளத்திலுள்ள நமது மக்களின் நிலைமை.

கிழக்கு வங்காளத்தில் நமது மக்களின் நிலைமை காஷ்மீரில் இருப்பதைவிட சகிக்க முடியாததாக இருக்கிறது. அனைத்து செய்தி ஏடுகளும் இதனை உறுதி செய்துள்ளன. எனவே, நாம் கிழக்கு வங்காள விஷயத்தில் ஆழ்ந்த அக்கறை காட்டியிருக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், காஷ்மீர் பிரச்சினையில் நம் ஆற்றல் முழுவதையும் வீண்விரயம் செய்து வருகிறோம்.

ஒரு போலியான பிரச்சினைக்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. யார் செய்வது சரி, யார் செய்வது தவறு என்ற பிரச்சினைக்காகவே நாம் பெரும்பாலும் போராடிக் கொண்டிருக்கிறோம். உண்மையான பிரச்சினை, யார் செய்வது சரி என்பது அல்ல; எது சரி என்பதே. இதையே முக்கியப் பிரச்சினையாக வைத்துப் பார்க்கும்போது, காஷ்மீரைப் பிரித்து விடுவதே சரியான தீர்வு என்பது எப்போதுமே என் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. இந்திய வரைபடத்தில் செய்தது போல, இந்து மற்றும் பவுத்தர்கள் வாழும் பகுதியை இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் வாழும் பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுங்கள்.

காஷ்மீரில் உள்ள முஸ்லிம் பகுதிகளைப் பற்றி உண்மையில் நாம் எந்த அக்கறையும் கொண்டிருக்கவில்லை. காஷ்மீர் முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை அது. இப்பிரச்சினை குறித்து அவர்கள் விரும்புவதுபோல முடிவு செய்யட்டும்; அல்லது நீங்கள் விரும்பினால் அதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: அதாவது போர் நிறுத்தப் பகுதி, பள்ளத்தாக்குப் பகுதி மற்றும் ஜம்மு - லடாக் பகுதி என்று பிரிக்கலாம். பள்ளத்தாக்கில் மட்டும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தலாம். இது தொடர்பாக எனக்கு ஓர் அச்சம் உள்ளது. அதாவது ஒட்டுமொத்த வாக்கெடுப்பாக இருக்கக்கூடிய உத்தேச பொதுமக்கள் வாக்கெடுப்பில், காஷ்மீரைச் சேர்ந்த இந்துக்களும் பவுத்தர்களும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் பிணைக்கப்படும் ஆபத்து உள்ளது.

இந்நிலைமையில் கிழக்கு வங்கத்தில் இன்று சந்திக்கும் அதே பிரச்சினைகளையே நாம் சந்திக்க நேரிடும். எனது பதவி விலகலுடன் பெரிதும் தொடர்புடைய நான்காவது விஷயத்துக்கு இப்போது வருகிறேன். அமைச்சரவை என்பது ஏற்கனவே பல்வேறு குழுக்களால் எட்டப்பட்ட முடிவுகளைப் பதிவு செய்யும் வெறும் பதிவு அலுவலகமாக மாறியுள்ளது. ஏற்கனவே நான் சொல்லியது போல, அமைச்சரவை இப்போது குழுக்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறைக்கு குழு உள்ளது. வெளியுறவுத் துறை தொடர்புடைய அனைத்து முக்கிய விஷயங்களையும் அக்குழுவே கையாண்டு வருகிறது. பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து விஷயங்களும் பாதுகாப்புக் குழுவினரால் சரி செய்யப்படுகின்றன.

அமைச்சரவையின் உறுப்பினர்கள் இக்குழுக்களால்தான் நியமிக்கப்படுகின்றனர். இதில் எந்தக் குழுவிலும் நான் இல்லை. இரும்புத் திரைக்குப்பின்னால் அவர்கள் செயல்படுகின்றனர். இங்கு முக்கிய உறுப்பினர்கள் அல்லாத மற்றவர்கள் கொள்கையை உருவாக்குவதில் பங்கு கொள்ளும் எந்த வாய்ப்புமின்றி, கூட்டுப் பொறுப்பை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஓர் முரண்பாடான நிலையாகும்.

பதவி விலக வேண்டும் என்ற முடிவுக்கு நான் வர என்னை இறுதியாக இட்டுச்சென்ற ஒரு விஷயம் குறித்து இப்போது கூறுகிறேன். இந்து சட்டத் தொகுப்பிற்கு நேர்ந்த கதிதான் அது. 1947 ஏப்ரல் 11 அன்றுதான் இந்த சட்டத்தொகுப்பு வரைவு அவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது நான்காண்டு காலம் உயிரோடிருந்தது. அதன் நான்கு சட்டக் கூறுகள் ஏற்கப்பட்ட பின்னர் அது கேட்பாரின்றி செத்து மடிந்தது.

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 14(2), பக்கம் : 1322
(நன்றி : தலித் முரசு ஜுன் 2008)

மன்னை முத்துக்குமார்
கும்பகோணத்தில் நடந்த சமூக இழிவு நீக்க போராட்டத்தில்
தந்தை பெரியார் அவர்கள் உரை ....

Get this widget Track details eSnips Social DNA