மன்னை முத்துக்குமார்

பெரியாரின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும்.

அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும்.

குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி

டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
இது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் ஐயா இறந்த அன்று ஒரு உருக்கமான நிகழ்வும் நடந்தது.

அது ஐயாவால் மனிதனான தோழர் ஒருவர் , ஒரு பத்து ரூபாய் நோட்டை ஐயாவின் நெஞ்சில் வைத்து ஐயா பத்து ரூபாய் கொடுத்தா தான் கையெழுத்து ( ஆட்டோக்ராப் ) போட்டு தருவேன்னு சொல்லிட்டீங்க , அதோடு நான் கையெழுத்து போடனும்னா அதை நீ படிக்க தெரிஞ்சிருக்கனும் னு சொல்லிட்டீங்க, ஐயா, நான் இப்போ எழுத படிக்க செய்வேன் , நான் மட்டும் இல்ல என் போன்றவர்களையெல்லாம் படிக்க வச்சிட்டீங்க. ஆனால் எனக்கு கையெழுத்து மட்டும் போடாம , அதை நான் படிச்சி காட்டாம மறைஞ்சிட்டீங்களே,...

ஐயா எழுந்து கையெழுத்து போடுங்கய்யா..ஐயா..ஐயா..என்று கதறியழுத காட்சியை நேரில் கண்ட பெரியவர் ஒருவர் சொல்ல இன்று கேட்டேன். ஐயாவின் எத்தனையோ சாதனைகளில் இதை இன்று கேள்வி பட்டதிலிருந்து மிகவும் நெகிழ்ச்சியாயிருந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

இன்று சில பேர் அவரின் வரலாற்றை அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு சிறுபிள்ளைத் தனமாக அரசியல் பேச்சு பேசுகின்றனர். அவர்கள் ஐயாவை முழுவதும் படித்து விட்டு விவாதிப்பது நல்லது
மன்னை முத்துக்குமார்
வெற்றியும் தோல்வியும் எப்படி ஏற்படுகிறது என்பதற்கு பெர்னாட்ஷா அளித்த விளக்கம்.
“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன்.

என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிப் பெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன்.
எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது.

தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன்.
முயற்சிகளை அதிகப்படுத்திக் கொண்டேன். 
இப்போது வெற்றியாளனாய் உங்கள் முன் நிற்கிறேன்.
*
மன்னை முத்துக்குமார்


கொலம்பசைப் பாராட்டி நடைபெற்ற விருந்து ஒன்றில் அவர்மீது பொறாமை கொண்ட சிலரும் கலந்து கொண்டனர்.

அவர்களுள் ஒருவர், கொலம்பஸ் மட்டுமல்ல, வேறு யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திருந்தாலும் புதிய நாடுகளைக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று கூறினார்.

இதனைக் கேட்ட கொலம்பஸ், விருந்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றினை எடுத்தார். சொன்னவரிடம் கொடுத்து, இதைச் செங்குத்தாக மேசையின்மேல் நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம் என்றார்.
நிறுத்தி வைத்துப் பார்த்து முடியாமல், உங்களால் செங்குத்தாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று கொலம்பசைக் கேட்டார்.

முட்டையை வாங்கிய கொலம்பஸ் குறுகலான பகுதியை மேசையின்மீது மெதுவாகத் தட்டினார். முட்டையில் சிறிய பள்ளம் விழ, முட்டை மேசையின்மீது செங்குத்தாக நின்றது.

எதிரில் இருந்தவர், இப்படிச் செய்வது என்றால் நானும் செய்திருப்பேனே என்றதும்,

  “எந்தக் காரியத்தையும் ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். முதல்முறையாக அதைச் செய்வதற்குத்தான் மூளை வேண்டும் ”

என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் கொலம்பஸ்.( Christopher Columbus )
மன்னை முத்துக்குமார்
“நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை,
அடிமைத்தனத்தை தவிர !
ஆனால், வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது.!”

- தோழர் கார்ல் மார்க்ஸ்