மன்னை முத்துக்குமார்

பெரியாரின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும்.

அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும்.

குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி

டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
இது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் ஐயா இறந்த அன்று ஒரு உருக்கமான நிகழ்வும் நடந்தது.

அது ஐயாவால் மனிதனான தோழர் ஒருவர் , ஒரு பத்து ரூபாய் நோட்டை ஐயாவின் நெஞ்சில் வைத்து ஐயா பத்து ரூபாய் கொடுத்தா தான் கையெழுத்து ( ஆட்டோக்ராப் ) போட்டு தருவேன்னு சொல்லிட்டீங்க , அதோடு நான் கையெழுத்து போடனும்னா அதை நீ படிக்க தெரிஞ்சிருக்கனும் னு சொல்லிட்டீங்க, ஐயா, நான் இப்போ எழுத படிக்க செய்வேன் , நான் மட்டும் இல்ல என் போன்றவர்களையெல்லாம் படிக்க வச்சிட்டீங்க. ஆனால் எனக்கு கையெழுத்து மட்டும் போடாம , அதை நான் படிச்சி காட்டாம மறைஞ்சிட்டீங்களே,...

ஐயா எழுந்து கையெழுத்து போடுங்கய்யா..ஐயா..ஐயா..என்று கதறியழுத காட்சியை நேரில் கண்ட பெரியவர் ஒருவர் சொல்ல இன்று கேட்டேன். ஐயாவின் எத்தனையோ சாதனைகளில் இதை இன்று கேள்வி பட்டதிலிருந்து மிகவும் நெகிழ்ச்சியாயிருந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

இன்று சில பேர் அவரின் வரலாற்றை அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு சிறுபிள்ளைத் தனமாக அரசியல் பேச்சு பேசுகின்றனர். அவர்கள் ஐயாவை முழுவதும் படித்து விட்டு விவாதிப்பது நல்லது