மன்னை முத்துக்குமார்
இரவல் நகை
இருப்பு கொள்ளவில்லை
விஷேச வீட்டில் !
*
~~ மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
பெரிதாக வருத்தம் ஏதும் இல்லை போலும்
ஒற்றை சிலிர்ப்பில் இழப்பைச் சரி செய்து விடுகிறது
சிறகு உதிர்த்த அப்பறவை !
*
~~மன்னை முத்துக்குமார்.
#
 ஐ.நா-வில்
மரணத்தண்டனைக்கு
ஆதரவாய் வாக்களித்தது
அகிம்சையில்
சுதந்திரம் பெற்ற இந்தியா !
*
~~ மன்னை முத்துக்குமார்.
#

தன் வேலையை நிறுத்திவிட்டு புரியும்படி
வழிச் சொன்னவருக்கு பதிலாய் கிடைக்கும்
அந்தச் சிறு புன்னகை கோடிபெறும் !
*
~~ மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்