மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்
*

*
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க.
முனிவர்கிட்ட அந்த 4 பேரும்"சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே , அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. 

அதுக்கு அந்த முனிவர்"தெரியலயேப்பா’ன்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு.

ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க.
அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன்.அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு.

சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.
கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது.

அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி.

மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதைக் கொன்னு தானும் சாப்பிட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்பிட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம்.

இந்தப் பக்கமா தன் அம்மாவ பறிகொடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்ன’ன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. உடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு.

அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?
ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு இவன்," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு.

ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு.
இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி.

கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

நீதி: நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம்,

அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.
*
நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்
மன்னை முத்துக்குமார்

பெரியாரின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும்.

அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும்.

குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி

டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.
இது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.

ஆனால் ஐயா இறந்த அன்று ஒரு உருக்கமான நிகழ்வும் நடந்தது.

அது ஐயாவால் மனிதனான தோழர் ஒருவர் , ஒரு பத்து ரூபாய் நோட்டை ஐயாவின் நெஞ்சில் வைத்து ஐயா பத்து ரூபாய் கொடுத்தா தான் கையெழுத்து ( ஆட்டோக்ராப் ) போட்டு தருவேன்னு சொல்லிட்டீங்க , அதோடு நான் கையெழுத்து போடனும்னா அதை நீ படிக்க தெரிஞ்சிருக்கனும் னு சொல்லிட்டீங்க, ஐயா, நான் இப்போ எழுத படிக்க செய்வேன் , நான் மட்டும் இல்ல என் போன்றவர்களையெல்லாம் படிக்க வச்சிட்டீங்க. ஆனால் எனக்கு கையெழுத்து மட்டும் போடாம , அதை நான் படிச்சி காட்டாம மறைஞ்சிட்டீங்களே,...

ஐயா எழுந்து கையெழுத்து போடுங்கய்யா..ஐயா..ஐயா..என்று கதறியழுத காட்சியை நேரில் கண்ட பெரியவர் ஒருவர் சொல்ல இன்று கேட்டேன். ஐயாவின் எத்தனையோ சாதனைகளில் இதை இன்று கேள்வி பட்டதிலிருந்து மிகவும் நெகிழ்ச்சியாயிருந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.

இன்று சில பேர் அவரின் வரலாற்றை அரைகுறையாக தெரிந்து வைத்துக் கொண்டு சிறுபிள்ளைத் தனமாக அரசியல் பேச்சு பேசுகின்றனர். அவர்கள் ஐயாவை முழுவதும் படித்து விட்டு விவாதிப்பது நல்லது
மன்னை முத்துக்குமார்
வெற்றியும் தோல்வியும் எப்படி ஏற்படுகிறது என்பதற்கு பெர்னாட்ஷா அளித்த விளக்கம்.
“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன்.

என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிப் பெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன்.
எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது.

தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன்.
முயற்சிகளை அதிகப்படுத்திக் கொண்டேன். 
இப்போது வெற்றியாளனாய் உங்கள் முன் நிற்கிறேன்.
*
மன்னை முத்துக்குமார்


கொலம்பசைப் பாராட்டி நடைபெற்ற விருந்து ஒன்றில் அவர்மீது பொறாமை கொண்ட சிலரும் கலந்து கொண்டனர்.

அவர்களுள் ஒருவர், கொலம்பஸ் மட்டுமல்ல, வேறு யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திருந்தாலும் புதிய நாடுகளைக் கண்டுபிடித்திருப்பார்கள் என்று கூறினார்.

இதனைக் கேட்ட கொலம்பஸ், விருந்தில் வைக்கப்பட்டிருந்த முட்டை ஒன்றினை எடுத்தார். சொன்னவரிடம் கொடுத்து, இதைச் செங்குத்தாக மேசையின்மேல் நிறுத்தி வையுங்கள் பார்க்கலாம் என்றார்.
நிறுத்தி வைத்துப் பார்த்து முடியாமல், உங்களால் செங்குத்தாக நிறுத்தி வைக்க முடியுமா? என்று கொலம்பசைக் கேட்டார்.

முட்டையை வாங்கிய கொலம்பஸ் குறுகலான பகுதியை மேசையின்மீது மெதுவாகத் தட்டினார். முட்டையில் சிறிய பள்ளம் விழ, முட்டை மேசையின்மீது செங்குத்தாக நின்றது.

எதிரில் இருந்தவர், இப்படிச் செய்வது என்றால் நானும் செய்திருப்பேனே என்றதும்,

  “எந்தக் காரியத்தையும் ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். முதல்முறையாக அதைச் செய்வதற்குத்தான் மூளை வேண்டும் ”

என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் கொலம்பஸ்.( Christopher Columbus )
மன்னை முத்துக்குமார்
“நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை,
அடிமைத்தனத்தை தவிர !
ஆனால், வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது.!”

- தோழர் கார்ல் மார்க்ஸ்
மன்னை முத்துக்குமார்


 முதல் தளத்தில் இழவு
மூன்றாம் தளத்தில் முகூர்த்தம்
அடுக்குமாடி குடியிருப்பு !
*
இந்திய நதிகள்
இணைக்கப்படுகிறது.
ஒவ்வொறு தேர்தலின் போதும் !
*
சாதி சங்க மாநாடு
உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான்.
அந்த சே குவேரா டீ சர்ட் போட்ட இளைஞன்.
*
தெரிந்தே அடைகாத்தது
குயிலின் முட்டையை காகம்.
*
பசியால் மரித்துப்போன கவிஞரின் பெயரில்
“வளர்முகக் கவிஞர் விருது !”
*
தீ வைத்தும்
சிரிக்கிறது மெழுகுவர்த்தி !
*
புல்லாங்குழல் விற்பவன் ஊதினான்
தன் பசியையும் சேர்த்து !
*

     
மன்னை முத்துக்குமார்

பெருநகரங்களில் மிதிவண்டியை மிதிக்கையில் காரோட்டிகளின் வசவுகளையும் சேர்த்தே மிதிக்க வேண்டி இருக்கு !

*
மன்னை முத்துக்குமார்
கதை , திரைக்கதை நேர்த்தி, கச்சிதமான பாத்திரபடைப்பு , உயிரோட்டமுள்ள வசனம் அருமையான முடிவு என என்னை ஆட்கொண்ட திரைப்படம் மெளனகுரு.

நான் அடுத்த தலைமுறை இயக்குநர்களில் முதலில் வைத்து பார்ப்பது இந்த சாந்தகுமாரை தான் 



ஹேட்ஸ்- ஆப் சாந்தகுமார்.

யூ டியூப் லின்க் : http://www.youtube.com/watch?v=gSCNS1Tf9ec
மன்னை முத்துக்குமார்
என்னடா இவன் எப்ப பார்த்தாலும் பெரியார் புராணம் பாடுறான் என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ...

‘நாங்கள் சேர்ந்திருக்கும் போது நான் அவரின் சீடனைப் போலவே இருந்தேன். ஆனால் அவரோ என்னை தன் தலைவரை போல நடத்தினார் . அவர் எனக்கு மிகவும் கெளரவமான இடத்தை தந்தபோதும் நான் அவரின் உதவியாளனை போல தான் செயல்பட்டேன். ஒரு கட்டத்தில் நாங்கள் கொள்கை அளவில் முரண்பட்டு பிரிந்தாலும் தனிப்பட்ட முறையில் எங்களிடம் பேதமில்லை .”

இது காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து திராவிடர் கழகம் தொடங்கியபின் ராஜாஜியை பற்றி அடிக்கடி பெரியார் நினைவு கூர்ந்து நண்பர்களிடம் சொன்னது .

இப்ப அப்படியா ? பெரியாரிடம் இந்த சமூகம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் இருக்கு...

ஒவ்வொன்னா சொல்வேன்.
மன்னை முத்துக்குமார்

வேட்டி கட்டும் நாட்டில்
வேட்டி கட்டவென்று ஒரு நாள் .
கலாச்சாரம் !

;-(
மன்னை முத்துக்குமார்

ஊர்ந்து செல்லும் பல்லிக்கு தெரியுமந்த
சிலந்தி வலை தனக்கு இரை தரும்
அட்சய பாத்திரமென்று !
;-(
மன்னை முத்துக்குமார்


கண்களை  மூடி
காற்றில் மிதக்கச் செய்யும்
வித்தைக்கு பெயர்
முத்தம் !
*
மன்னை முத்துக்குமார்

ஆயிரம் ஆடுகள்
இருக்குமந்த ஆட்டுமந்தை
கிடாவுக்கு எங்கிருந்து வந்தது
இத்தனை மிடுக்கு?
*
மன்னை முத்துக்குமார்

எத்தனை ஆண்டுகளாயினும்
போகியில் பொசுக்க முடிவதில்லை.
அரும்பு மீசை காலத்திய
அவளின் பொங்கல் வாழ்த்து அட்டையை !
*
மன்னை முத்துக்குமார்

 பொய் எனத் தெரிந்தும்
போதையூட்டத்தான் செய்கிறது
காதலன் சொல்லும் கவிதைகள் !
*
நொடி நொடியாய்
 என் பொழுதை திருடும் 
உன் அழகை  ரசிக்க விடாமல் செய்யும் 
அந்த கொஞ்சநேர தூக்கத்தை 
 என்ன செய்ய ?
*

உண்மை தான்.
ஒரு போதும் என்னைப் புகழ்ந்து கவிபாட விடாமல்
உன்னை மட்டுமே புகழ்ந்து கவி படைக்கும் நான்
ஒரு ஆணாதிக்கவாதி தான்.
*
என்னை
நாளொரு வண்ணம்
பொழுதொரு கவிதையென
சொல்லச் சொல்லி ரசிக்கும்
உன் பெண்ணாதிக்கம் வாழ்க !
*
 
மன்னை முத்துக்குமார்

பள்ளியில் சேர்க்கையில்
பெயர் ஊர் முகவரிக்கு பின்
என்ன சாதி என்ற தலைமை ஆசிரியரின் கேள்விக்கு
சாதியை மறுத்த
அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொள்வதை
விழி உயர்த்திப் பார்க்கும்
குழந்தை என்ன சாதி நீங்களாவது சொல்லுங்க ?

மன்னை முத்துக்குமார்

எத்தனை அழகு ஆபரணமிருந்தாலும்
மரியாதை மிகு ஆபரணமாய்
நகைக்கடையில் மெட்டி !
*
மன்னை முத்துக்குமார்

அவங்க உங்களை போலவே இருப்பாங்க
எனும் போது ஓடி ஓடி எடுத்துவருமந்த
துணிக்கடை பெண்ணுக்கு கிடைக்கும்
அந்த நிமிட மகிழ்ச்சி அலாதியானது !
*
மன்னை முத்துக்குமார்

எத்தனை முறை 
எத்தனை பேர் கேட்டாலும் சலிக்காமலும்
தெரியாது போகும் போது பக்கத்து கடையில் கேட்டும் 

வழிச்சொல்லும் அந்த மூலைக்கடை பெரியம்மாவுக்கு 
வணக்கத்தை பதிலாக தரும் மனிதர்கள் இருக்கும்வரை 
அலுத்துபோகாது முகவரிச் சொல்ல !