மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்

உரிமையில் கட்டளையிடும் போது அதை ஆதிக்கம் என்று எடுத்துக்கொள்ளாதவரை தான் அது “ அன்பு ” என்று பொருள்படும் .!
*
-மன்னை முத்துக்குமமார்
மன்னை முத்துக்குமார்
எல்லாவற்றிலும்
எனக்குப் பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய்
உனக்குப் பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன்.
அதனால்தான்
நட்பு
நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறது !

*
-பாவலர் அறிவுமதி.
மன்னை முத்துக்குமார்
 

பேருந்து நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள் .

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள் !
*
-பாவலர் அறிவுமதி
மன்னை முத்துக்குமார்

பெண் : சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்ப லில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளைஞ்சிருக்கு _ வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு _ அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்? 

ஆண் : இப்போ _ காடு வெளையட்டும் பொண்ணே _ நமக்குக்
காலமிருக்குது பின்னே (காடு
மண்ணைப் பொளந்து சொரங்கம் வச்சுப்
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலுவச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தையெடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் _ ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம்

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலுந்தானே மிச்சம்?

பெண் : மாடா ஒழைச்சவன் வாழ்க்கையிலே _ பசி
வந்திடக்காரணம் என்ன மச்சான்?

ஆண் : அவன் _ தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே
சேர்வதனால் வரும் தொல்லையடி

பெண் : பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு _ இனிப்
பண்ணவேண்டியது என்ன மச்சான்?

ஆண் : தினம் _ கஞ்சிகஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்திச்சு முன்னேற வேணுமடி

பெண் : வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ?

ஆண் : இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி

பெண் : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் _ மீதம்
உள்ளவரின் நிலைமை என்ன மச்சான்?

ஆண் : நாளை வருவதை எண்ணி எண்ணி _ அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி

பெண் : அட _ காடு வெளைஞ்சென்ன மச்சான் _ நமக்குக்
கையுங் காலந்தானே மிச்சம்?

ஆண் : நானே போடப்போறேன் சட்டம் _ பொதுவில்
நன்மை புரந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம் (நன்மை…
***
மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்

 அவர் தான் பெரியார் - பாவேந்தர் பாரதி தாசன்
-
-
இன்று ( 17/09/2013 ) தந்தை பெரியாரின் 135 வது பிறந்த நாள்…

என்னை என் நண்பர் ஒருவர் கேட்டார் ,
என்ன எப்பவும் பெரியார் பெரியார் என்று பெரிசா பேசுறீங்க அப்படி என்ன பெரிசா பன்னிட்டாரு அவர்’’ என்று.

அவருக்கு பெரியாரை தெரியும். அனால் ஆத்திகம் அவரை அப்படி கேட்க சொல்லுது .

பதில் சொல்வது பெரியாரின் பேரனாகிய என் கடமையல்லவா? 
நான் அவரிடம் கேட்டேன்.
 கொஞ்ச நாளைக்கு முன்பு விமான விபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் பேரு என்ன என்றேன். அவர் உடனே இது என்ன கேள்வி சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே ராஜசேகர ரெட்டி என்று என்றார்.

சரி ஆந்திராவின் அவருக்கு முன்னால் முதல்வரய் இருந்தவர் பேரு என்ன என்றேன். உடனே அவர் சந்திரபாபு நாயுடு என்றார்.

சரி நம் தமிழ்நாட்டு முதல்வர் பேரு என்ன என்றேன் , நண்பருக்கு சற்று எரிச்சல் என்றாலும் பதில் சொன்னார் ஜெயலலிதா என்றார், சரி முன்னால் முதல்வர் பேரு என்ன என்றேன் ,அவர் கருணாநிதி என்றார்.

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஜாதி உண்டு தான் என்றாலும் சாதி பின்னொட்டு இங்கு இல்லை. ஆனால் ஆந்திராவில் இருக்கு .
சாதி பின்னொட்டை பேருக்கு பின்னால் இருந்து எடுத்தவர் எங்கள் பெரியார் .அந்த அளவில் அவர் பெரியார் தானே என்றேன்.அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.

தமிழ்நாட்டில் இன்றும் முனுசாமி முனுசாமி ரெட்டியாக இல்லாமல் முனுசாமியாகவும், முத்துபாண்டி முத்து பாண்டி தேவராக இல்லாமல் முதுபாண்டியாகவும் இருக்க பெரியார் தான் காரணம் என்றால் அது மிகை அல்ல ..

அந்த சமூக புரட்சியாளருக்கு நாளை பிறந்த நாள் .

இன்று காலையில் கூட முகநூலில் யாரோ ஒருவர் எழுதி இருந்தார் மதத்தின் பெயரால் கலவரம் வடக்கே நடக்க காரணம் பெரியாரின் கொள்கைகள் அங்கே போய் சேராதது தான் என்று எத்தனை உண்மையான வாக்கியம் அது.

17-09-1879 இது தமிழனுக்கு மானத்தையும் அறிவையும் புகட்ட பகலவன் அவதரித்த நாள்...

தமிழனுக்கு மானத்தையும் அறிவையும் போதித்து சாதி மத சாக்கடையிலிருந்து மீட்டு எங்களை மனிதனாக இந்த மண்ணில் வாழ வைத்த ஐயா பெரியாரை வணங்கி மகிழ்கிறோம். 
.
300
மன்னை முத்துக்குமார்

மன்னை முத்துக்குமார்

அவளை 
இப்போது 
பார்த்தாலும்
கேட்கத் தோணும்,

கணக்கு புத்தக 25 ம் பக்கத்தில்
அடை வைத்த 
மயிலிறகு
குட்டி போட்டதா ?
என்று !
*
- மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

பெரியார் தாசன் என்று முற்போக்கு சிந்தனையாளர்களால் பெரிதும் அறியப்பட்டவரும் , கருத்தம்மா என்ற படத்தில் அறிமுகமாகி அதே படத்திற்கு சிறந்த குணசித்திர நடிகர் என்று தேசிய விருதினை பெற்றவரும் , தத்துவவியல் பேராசிரியரும், தனது அறிவுக்கெட்டிய வகையில் கடவுளே இல்லையென்றவர், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவி, தன் பெரியார் தாசன் என்ற பெயரை அப்துல்லாஹ் என்று மாற்றியவருமான தோழர் பெரியார் தாசன் இன்று நம்மிடம் இல்லை. அவரது பகுத்தறிவு முழக்கத்தால் தெளிவு பெற்றவர்களில் நானும் ஒருவனாய் அவரை இழந்து வருந்துகிறேன்.

ஆழ்ந்த இரங்கல் ... ;-(
மன்னை முத்துக்குமார்



‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.

‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.

கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.

ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்..

அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னைப் பார்த்தேன்.
 - அப்துல் ரகுமான்.



மன்னை முத்துக்குமார்
பாரதியாரிடம் ஒருமுறை ஒருவர் கேட்டாராம்,

ஏன்டா சுப்பு, பிரம்மனோட வாயில் இருந்து பிறந்தவன் பிராமணன்,நெஞ்சில் இருந்து பிறந்தவன் சத்திரியன் (அரசர்கள்) வயிற்றில் இருந்து பிறந்தவன் வைஷ்யன், காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன் -ன்றானுங்களே,

இந்த பஞ்சமன் எங்கிருந்து -டா பிறந்தான் ? னு கேட்டாராம்.

அதுக்கு பாரதியார் –அதுவாய்யா… அவன் ஒருத்தன் தான் அவன் அம்மா அப்பா வுக்கு பிறந்தான் -ன்னாராம்.

கேட்டவர் ஓடியே விட்டாராம். 
***

மன்னை முத்துக்குமார்

போன
வேகத்தில்
திரும்பின
சொந்த தேசத்து
பறவைகள் ;

இன்னும்
துளிர்விட மறந்த
மரங்களும் , மனிதர்களும்
அங்கே !
*
- மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.

முதல் தெய்வம் அறிவு;
இரண்டாவது தெய்வம் சுயமரியாதை;
மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.

இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை .
*
- அண்ணல் அம்பேத்கர்.

மன்னை முத்துக்குமார்
*
இந்த அன்பும் சகோதரத்துவமும் என்றும் நிலைக்க இந்த ரமலான் நாளில் உறுதி பூணுவோமாக..!!!

***
 
மன்னை முத்துக்குமார்

சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது 
மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான். 
  -சாக்ரடிஸ் 

*** 
உன்னால் முடியும் என்பதை உலகுக்கு உணர்த்த உன்னையன்றி வேறு யாரால் முடியும்?
 -மன்னை

*** 
எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. வாழ்ந்த பொழுதில் எப்படி தனது சமூகத்திற்கு உண்மையாக வாழ்ந்தோம் என்பதிலேயே இருக்கிறது வாழ்ந்த வாழ்வின் பொருள் ! 
 --அண்ணல் அம்பேத்கர். 

*** 
நாங்கள் யதார்த்தவாதிகள் அதனால் தான் அசாத்தியங்களை கனவு காண்கிறோம். 
-தோழர் சே 

*** 
அனுதாபம் கொள்ளாதே அது நீதியை மழுங்க செய்யும் !
 -யாரோ 

*** 
வலிக்க தான் செய்கிறது பால்ய கால நண்பன் பார்த்தும் பார்க்காதது போல் செல்கையில்..
 -மன்னை 

***
மன்னை முத்துக்குமார்

தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தானா
தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா தந்தன்னானா 



புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே

வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லை தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? இதெக்
கேக்க யாரும் இல்லை தோழா 

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே 

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு 

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே 

ஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா? 

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க
பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லை தோழா - இது
நாடா இல்லே வெறும் காடா? - இதெக்
கேக்க யாரும் இல்லை தோழா

***
 புஞ்சை உண்டு நஞ்சை உண்டு/ புலமைப்பித்தன்/இளையராஜா/திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி.
மன்னை முத்துக்குமார்
.
 
உயிருக்கு போராடுபவனுக்கு
 ரத்த வங்கியில் இருக்கும் ரத்தம்
எந்த சாதிக்காரனுடையது 

என்ற கவலையெல்லாம் இருப்பதில்லை !
*
மன்னை முத்துக்குமார்

 

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே
மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

உன் வண்ணம்
உந்தன் எண்ணம்
நெஞ்சின்
இன்பம்

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

பொன்னின் தோற்றமும்
பூவின் வாசமும்
ஒன்றிணைந்து தேகமோ

பிள்ளை மொழி அமுதமோ
பிஞ்சு முகம் குமுதமோ

பூமுகம்
என் இதயம் முழுதும்
பூவென
என் நினைவைத்தழுவும்
நெஞ்சில் கொஞ்சும்

மஞ்சள் வெயில்
மாலையிட்ட பூவே

மேகம் நீர் தரும்
பூமி சீர் தரும்
தெய்வம் நல்ல பேர் தரும்
இன்பப் புனல் ஒடிடும்
இன்னிசைகள் பாடிடும்
வாழ்வெல்லாம் நம் உறவின்
நலங்கள்
நாள் எல்லாம் உன் நினைவின்
சுகங்கள்
வாழும்
நாளும்

( மஞ்சள் வெயில்)
திரைப்படம் : நண்டு
இயக்கம் : மகேந்திரன்.
இசை: இளையராஜா
பாடியவர் : உமா ரமணன்
***
மன்னை முத்துக்குமார்
 
-
அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...

ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...

நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...

என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்

எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...

(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)

வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)

சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)

அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்

வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)

வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்

படம் : தவமாய் தவமிருந்து(2005)
பாடல் : சா.பெருமாள்
இசை : சபேஷ் - முரளி
பாடியது : ஜெயமூர்த்தி

***
மன்னை முத்துக்குமார்
இன்று ( 15/07/2013) கர்ம வீரர் காமராஜரின் 111 வது பிறந்த தினம் . தன்னிகரில்லா தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..;- )

.
 நன்றி : தோழர் கமலக்கண்ணன்.
மன்னை முத்துக்குமார்

 அலைகளும்
உன் நினைவுகளைப்
போல தான் .

எத்தனை முறை
கடலுக்குள் போனாலும்
திரும்ப வந்து விடுகிறது
அதே வேகத்தில் ! 
***
மன்னை முத்துக்குமார்


 “புத்தம் சரணம் கச்சாமி , தம்மம் சரணம் கச்சாமி , சங்கம் சரணம் கச்சாமி ”

 என்று புத்த தொண்டர்கள்  உச்சரிப்பார்கள் அதன் பொருள் என்னவென்றால்  

புத்தம் சரணம் கச்சாமி - என்னை புத்தரிடத்தில் ஒப்படைத்துக் கொள்கிறேன். அதாவது பகுத்தறிவு சிந்தனைக்கு ஒப்படைத்துக் கொள்கிறேன் என்று பொருள்.

தம்மம் சரணம் கச்சாமி என்றால் அந்த பகுத்தறிவுக் கொள்கையில் என்றும் மாறாமலிருப்பேன் அல்லது அதில் என்னை ஒப்படைத்துக் கொள்கிறேன் என்று பொருள்

மூன்றாவதாக சங்கம் சரணம் கச்சாமி என்பது அந்த அமைப்புக்கு என்றும் துரோகம் செய்யாமல் அந்த கொள்கையை ( பகுத்தறிவு ) மக்களிடம் எடுத்துச் செல்வேன் என்று பொருள்.

***
மன்னை முத்துக்குமார்

.
எனக்கு பிடிக்காத  
விசயங்களை சொல்லும் போது  
ஏனென்று கேட்ட நீ
எனக்கு பிடித்து 
உனக்கு பிடிக்காத விசயங்களை 
சொல்லும் போது மட்டும் 
மெளனிக்கிறாய் !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீர்கள் ஒரு வேளை பார்க்காதவர்கள் 
கண்டிப்பா பார்க்கவும் .
 “அவள் அப்படித்தான்”   ருத்ரய்யா இயக்கிய ஒரே படம் .

படம் எப்படி இயக்குவது என்று மற்றவர்களுக்கு மாதிரி படமாய் தான் 

இந்த ”அவள் அப்படித்தான் “ படத்தை எடுத்து இருப்பார் என்று 
ஆணித்தரமாய் நான் நம்புகிறேன் .

வசனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் எனபதற்கு 

இது ஒரு முன் மாதிரி திரைப்படம் , 
இப்படத்தில் ரஜினி கமல் நடிப்பு அருமை ,
அதை விட ஸ்ரீபிரியா நடிப்பு அபாரம் .

என்னை மிகவும் கவர்ந்த 

தமிழ்த் திரைப்படங்களில் இது முக்கியமான ஒன்று .
.

**
மன்னை முத்துக்குமார்

-



-
பெண் : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஆண் : ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு (ஒன்று…)

இருவர் : உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல் (ஒன்று…)

பெண் : ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும்
தேதியில் தோன்றும் பெருமை

ஆண் : சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தாரணியில் அது புதுமை (ஜாதிகள்…)

இருவர் : உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை (ஒன்று…)

பெண் : நேசமும் அன்பும் நிலையாக வேண்டும்
நேர்வழி வேண்டும் உறவில்

ஆண் : பேசிடும் அன்பு செயல் முறையானால்
பேரின்பம் வேறெது உலகில்?

இருவர் : காணா வளமும் மாறா நலமும்
கண்டிடலாம் அன்பு நிலையில் (ஒன்று…)

-
 பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .
படம் :1960 ஆம் ஆண்டு வெளிவந்த "  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " 
***
மன்னை முத்துக்குமார்
.
.
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
(அழகிய கண்ணே )

சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
(அழகிய கண்ணே )

சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
(அழகிய கண்ணே )

மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
(அழகிய கண்ணே)

 **********
திரைப்படம் : உதிரிப்பூக்கள் (1979)
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
பாடல் : கண்ணதாசன்
மன்னை முத்துக்குமார்
 .
-
அக்னி குஞ்சொன்று கண்டேன்....
அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரதிற்குஞ்சென்று மூபென்றுமுண்டோ

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெட்டி அடிக்குது மின்னல் - கடல்
வீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது
கொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று
விண்ணைக் குடையுது காற்று

தத்தட திட தத்தட தட்ட ....
தத்தட திட தத்தட தட்ட ....
என்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
.
***
மன்னை முத்துக்குமார்


.
...........
..........
..ஆஆ............................

ஒரு பொன்மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்

சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு                (2)
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன்மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

தத்தத் தகதிமி தத்தத் தகதிமி
தத்தத் தகதிமி தோம்
தாகுத யுந்தரி தா
ததகுத யுந்தரி தை
தாகுத யுந்தரி ததகுத யுந்தரி தத்
ததீங்கிணதோம் ததீங்கிணதோம் ததீங்கிணதோம்
தா.

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறித்
தாமரைப் பூமீது வீழ்ந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில்
பரதம்தான் துளிர்விட்டு
பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன்
மனம் எங்கும் மணம் வீசுது
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

நாதிந்தின்னா நாதிந்தின்னா
நாதிந்தின்னா நாதிந்தின்னா
தித்தாதிகுதிகு தித்தாதிகுதிகு
தித்தாதிகுதிகு தித்தாதிகுதிகு
திக தானதான தா
திக தானதான தா
திக தானதான

சந்தனக்கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின் அழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்
கலைநிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்
அந்தக்
கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன்
மதி தன்னில் கவி சேர்க்குது


சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன்மானை நான் காண
தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட
தகதிமிதோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம்...... நீ பாடு

சலங்கை இட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு.....
 *
படம்: மைதிலி என்னைக் காதலி
பாடல் வரிகள் : டி. ராஜேந்தர்
இசை: டி. ராஜேந்தர்.
*