மன்னை முத்துக்குமார்

 அவர் தான் பெரியார் - பாவேந்தர் பாரதி தாசன்
-
-
இன்று ( 17/09/2013 ) தந்தை பெரியாரின் 135 வது பிறந்த நாள்…

என்னை என் நண்பர் ஒருவர் கேட்டார் ,
என்ன எப்பவும் பெரியார் பெரியார் என்று பெரிசா பேசுறீங்க அப்படி என்ன பெரிசா பன்னிட்டாரு அவர்’’ என்று.

அவருக்கு பெரியாரை தெரியும். அனால் ஆத்திகம் அவரை அப்படி கேட்க சொல்லுது .

பதில் சொல்வது பெரியாரின் பேரனாகிய என் கடமையல்லவா? 
நான் அவரிடம் கேட்டேன்.
 கொஞ்ச நாளைக்கு முன்பு விமான விபத்தில் இறந்த ஆந்திர முதல்வர் பேரு என்ன என்றேன். அவர் உடனே இது என்ன கேள்வி சிறு பிள்ளைக்கு கூட தெரியுமே ராஜசேகர ரெட்டி என்று என்றார்.

சரி ஆந்திராவின் அவருக்கு முன்னால் முதல்வரய் இருந்தவர் பேரு என்ன என்றேன். உடனே அவர் சந்திரபாபு நாயுடு என்றார்.

சரி நம் தமிழ்நாட்டு முதல்வர் பேரு என்ன என்றேன் , நண்பருக்கு சற்று எரிச்சல் என்றாலும் பதில் சொன்னார் ஜெயலலிதா என்றார், சரி முன்னால் முதல்வர் பேரு என்ன என்றேன் ,அவர் கருணாநிதி என்றார்.

கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஜாதி உண்டு தான் என்றாலும் சாதி பின்னொட்டு இங்கு இல்லை. ஆனால் ஆந்திராவில் இருக்கு .
சாதி பின்னொட்டை பேருக்கு பின்னால் இருந்து எடுத்தவர் எங்கள் பெரியார் .அந்த அளவில் அவர் பெரியார் தானே என்றேன்.அவரால் மறுப்பு ஏதும் சொல்ல முடியவில்லை.

தமிழ்நாட்டில் இன்றும் முனுசாமி முனுசாமி ரெட்டியாக இல்லாமல் முனுசாமியாகவும், முத்துபாண்டி முத்து பாண்டி தேவராக இல்லாமல் முதுபாண்டியாகவும் இருக்க பெரியார் தான் காரணம் என்றால் அது மிகை அல்ல ..

அந்த சமூக புரட்சியாளருக்கு நாளை பிறந்த நாள் .

இன்று காலையில் கூட முகநூலில் யாரோ ஒருவர் எழுதி இருந்தார் மதத்தின் பெயரால் கலவரம் வடக்கே நடக்க காரணம் பெரியாரின் கொள்கைகள் அங்கே போய் சேராதது தான் என்று எத்தனை உண்மையான வாக்கியம் அது.

17-09-1879 இது தமிழனுக்கு மானத்தையும் அறிவையும் புகட்ட பகலவன் அவதரித்த நாள்...

தமிழனுக்கு மானத்தையும் அறிவையும் போதித்து சாதி மத சாக்கடையிலிருந்து மீட்டு எங்களை மனிதனாக இந்த மண்ணில் வாழ வைத்த ஐயா பெரியாரை வணங்கி மகிழ்கிறோம். 
.
300
மன்னை முத்துக்குமார்