மன்னை முத்துக்குமார்
மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவர் தனது குடும்ப வக்கீலை அழைத்தார்.

“உயில் எழுத வேண்டும். என்னுடைய சொத்துக்களை என் மகன்களுக்கு பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்.”

“அந்த கவலையை விடுங்க! என்னிடம் கொடுங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“அது எனக்கும் தெரியும். உங்களுக்குப் போக கொஞ்சமாவது என் பிள்ளைகளுக்குத் தர விரும்புகிறேன்!”
மன்னை முத்துக்குமார்

பெர்னாட்ஷாவைப் பார்த்து அவருடைய நண்பர் ஒருவர், "பெர்னாட்ஷா, திடீரென்று உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்.

அதற்குப் பெர்னாட்ஷா, "கடவுளுக்கு நன்றி சொல்வேன்" என்றார்.

குழப்பமடைந்த நண்பர், "கடவுளுக்கு நன்றியா? ஏன்?" என்று கேட்டார்.

"பைத்தியக்காரத்தனமான கேள்விகளைக் கேட்கும் உங்களைப் போன்றவர்கள் என்னை நெருங்கப் பயப்படுவார்கள் அல்லவா? அதனால்தான்" என்றார் ஷா அமைதியாக.

அந்த நண்பர் அசடு வழிந்து ஓடியே போய்விட்டாராம்.
மன்னை முத்துக்குமார்
வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது,

வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிகளுக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.

நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வண்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்

”பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூலில்
- தந்தை பெரியார்

மன்னை முத்துக்குமார்

ஹைக்கூ கவிதைகளுக்கென விதிமுறைகள் இருக்கு. அவை
-
ஒரே வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள்.

மூன்று வரியில் 17 சொற்கள் 5 – 7 – 5 என்ற வரிசையில்.
சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் – நடு வரி மட்டும் சற்று நீளம்.
மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.

மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.

வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.

எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.
தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.

உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).

எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.
மன்னை முத்துக்குமார்
இரு துறவிகள்… ஒரு ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.

அப்போது ஆற்றைக் கடக்க முடியாமல் ஒரு இளம்பெண் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார்.

ஆனால் மற்றவர் தயங்கவில்லை. அந்தப் பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்று விட்டாள்.

துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

சிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு உதவ மறுத்த துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா? நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர்? இது தவறுதானே?” என்றார்.

பெண்ணுக்கு உதவிய துறவி சொன்னார்… “நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்!” என்றார் புன்முறுவலுடன்.

# எண்ணங்களையும் துறப்பதே துறவு.

மன்னை முத்துக்குமார்
துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே நண்பர்கள்.

முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது.

''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

முதல் நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த நபரை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் இரண்டாவது நபர். அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது நபர் வந்தார். அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

மூன்றாவது நபர் சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''
-

மன்னை முத்துக்குமார்
 நண்பர் முரளி மனோகர் இயக்கிய இந்த கர்ண மோட்சம் குறும்படம் சிறந்த குறும்படங்களுக்கான தேசிய விருதை பெற்றுள்ளது .


 -
மன்னை முத்துக்குமார்
குப்பைத் தொட்டி
குறைகளையும்
போடத் தான்.

-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்
பசித்தால் சாப்பிடு
தூக்கம் வந்தால் தூங்கு.
ஆனால் இவை பற்றிய எண்ணங்களிலேயே
மூழ்கி விடாதே.

மனது மட்டும்
இவற்றிலிருந்து விலகி இருக்கட்டும் 
-ஜென்.

மன்னை முத்துக்குமார்பகுத்தறிவு பகலவன் அய்யா பெரியாரின் நினைவு தினம் இன்று.

ராஜசேகர ரெட்டியோ , சந்திரபாபு நாயுடுவோ, தேவே கவுடாவோ மன்மோகன் சிங்கோ , ஈ கே நாயனாரோ-போன்று சாதி பெயர்களை தாங்கிய தர்குரிகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்க காரணமானவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களே. இன்றும் தமிழகத்தை ஆள்வது அவரது வழித்தோன்றல்களான திராவிட இயக்கங்களே .

அய்யாவின் சிந்தனைகளில் சில..

மானமும் அறிவும் மனிதற்கு அழகு .
கடவுளை மற , மனிதனை நினை.
--
கடவுள் துணை யாருக்கு..?
கையாலாகாதவனுக்கு கடவுள் துணை;
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன்;
செயல் தவற்றை உணர முடியாதவனுக்கு தலைவிதி.
(13-12-1937 "குடி அரசு" பக்கம் 14)
--
எனக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ,சாத்திரத்தைப் பற்றியோ, அக்கறையில்லை. ஆனால், கெடுதிகளை போக்க முயற்சிக்கிற போது,

"கடவுள்தான் சாதிகளை ஏற்படுத்தினார் - அதன்படிதான் நடக்க வேண்டும்"என்றால், அந்த கடவுள் எத்துணை பெரிய கடவுளாயிருந்தாலும் அதைசுட்டுபொசுக்கவேண்டாமா - அதைப்புதைக்கவேண்டாமா என்றே உங்களை கேட்கிறேன்.
(15 - 6 - 1930"குடி அரசு" பக்கம் 12)
--

"முட்டாள்தனம்"
பத்து மாதத்து குழந்தையைக் கக்கத்தில் வைத்துச் சாமியைக்காட்டி
அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட இருபது வருஷத்து
மனிதனைப்பார்த்து, நீ கடவுளை கும்பிடுவது
முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
(13 ‍ 4 - 1930 "குடி அரசு" பக்கம் 9)
-
பெரியாரின் பொது வாழ்க்கை - ஒரு காலக் கணக்கு
.
பெரியாரின் பொது வாழ்க்கை - ஒரு காலக் கணக்கு1. வாழ்நாள்:
------------
ஆண்டுகள்: 94 (3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள்: 1131
வாரங்கள்: 4919
நாள்கள்: 34,433
மணிகள்: 8,26,375
நிமிடங்கள்: 4,95,82,540
விநாடிகள்: 297,49,52,400

2. சுற்றுப்பயணம்:
-----------------
நாள்கள்: 8200
வெளிநாடுகளில்: 392
தொலைவு: 8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப் போல் 3 மடங்கு.

3. கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
----------------------------
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700

கருத்துரை ஆற்றிய காலம்:
-------------------------
மணிகள் : 21,400
நாள்கணக்கில்: 891
நிமிடங்களில்: 12,84,000
வினாடிகளில்: 77,04,000

சிறப்புக் குறிப்பு:
-------------
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- தஞ்சை மருதவாணன், பெரியார்-பகுத்தறிவாளர் நாட்குறிப்பிலிருந்து (1984)
மன்னை முத்துக்குமார்
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.
ஒரே தவறைத் திரும்ப செய்கிறவன் மூடன்
ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை

தன்னையறியாமல் தவறு செய்து,
தன்னையறிந்து திருந்தி கொள்கிறவனே மனிதன்.

# திருந்தி நடந்துகிட்டா சரி

மன்னை முத்துக்குமார்
புரட்சியாவது வெங்காயமாவது என்கிறாய்,
தெரிந்து பேசு.
காயப்படுத்தியவனின்
கண்ணீரை வாங்கும் வெங்காயம்
சென்னீரை வாங்கும் புரட்சி !
-
-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

மன்னை முத்துக்குமார்

எழுப்பப் படுகின்ற எந்த சுவரும் யாரும் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதை மட்டுமல்ல, நாமும் ( விசால மனதுடன் ) பரந்துப்பட்ட உலகுடன் மனிதர்களோடு மனிதர்களாக கலப்பதை தடுக்கின்றன என்பதை எப்போது உணரப் போகிறோம் ?

மன்னை முத்துக்குமார்
ஒவ்வொறு விதையும்
விருட்சமாகும் கனவுகளைத்
தன்னகத்தே
தேக்கி வைத்திருக்கின்றன.

மன்னை முத்துக்குமார்


பொய்கள் தான்  பல சமயங்களில்
உறவையும் , நட்பையும்  தொடரச் செய்கிறது.


நேற்று தான் உங்களைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தேன்.

       உங்களுக்கு நூறு ஆயுசு.

  புரையேறுது- உங்களை  யாரோ நினைக்கிறாங்க.

இப்படியாக..
மன்னை முத்துக்குமார்
சொர்க்கம் நரகம் என்று எங்கும் இல்லை.
நற்பண்புகள் நரகத்தையே சொர்க்கமாக்கி விடும்.

சொர்க்கம்/ நரகம் என்பது செயல்களை பாகுபடுத்தி பார்க்க உதவும் ஒரு தராசு அவ்வளவு தான்.

# ஒரு பொய்யினால் பல உயிர்கள் காக்கப்படுகிறதென்றால் அந்த பொய் உண்மையை விட உயர்ந்ததாகிவிடும். அந்த பொய்க்கு நரகம் கிடைக்குமானால் அது சொர்க்கத்தை விட மேலானது.

மன்னை முத்துக்குமார்
ஒழுகாத கூரையும் 
பசிக்காத வயிறும் 
வாய்த்தால்
எங்களுக்கும் 
எல்லா மழையும் 
அழகு தான்.

-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்

மனிதனின் வாழ்க்கை எவ்வளவு காலம் என்று புத்தர் தனது சீடர்களிடம் கேட்டார்.

ஒரு சீடர் 65 ஆண்டுகள் என்றார்.-பதிலில் திருப்தியில்லை.

மற்றொருவர் 50 ஆண்டுகள் என்றார்--அந்த பதிலிலும் புத்தருக்கு திருப்தியில்லை.

மூன்றாமவர் 40 ஆண்டுகள் என்றார். -ம்ஹும்.

சீடர்கள் நீங்கள் சொல்லுங்க என்று கேட்டனர். 

வாழ்க்கை என்பது மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடும் கண பொழுது தான். உள்ளே போகும் காற்று வெளியே வரவில்லையென்றாலோ, வெளியில் இருக்கும் காற்றை உள்ளே இழுக்க முடியவில்லை என்றாலோ வாழ்க்கை முடிந்து விடும்.

ஆகவே வாழ்க்கை என்பது கண பொழுது தான். எனவே ஒவ்வொறு கணமும் வாழ பழகிக்க வேண்டும் என்றார்.

பதிலில் திருப்தி அடைந்த சீடர்கள் அமைதியாய் இருந்தனர்.

# மாயன் காலண்டரில் சொன்னபடி 2012 ம் வருடம், டிசம்பர் மாதம்  21ம் தேதி உலகம் அழியும் என்று பயந்து கிடக்கும் நம்ம நண்பர்களுக்கு இந்த கதை.
மன்னை முத்துக்குமார்
மன்னை முத்துக்குமார்
குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர்.

அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார்.

சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு.

மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார்.

கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார்.

முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை, இப்படியா எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை.

எங்களால் முடியவில்லை என்றனர்.

குரு சொன்னார்-பிரச்சினைகளும் இந்த செடியை போல தான் என்று.

புரியாத சீடர் ஒருவர் , அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார்.

சிரித்தபடியே , சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது . ஆனால் சற்றே பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை. அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம் , வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது என்றார்.

# சரி தானே ?

மன்னை முத்துக்குமார்
மெளனம்  :

இது வார்த்தைகளை கடந்தது,
மொழிகளைக் கடந்தது மட்டுமல்ல,
எண்ணங்களையும் கடந்தது.

மன்னை முத்துக்குமார்
கற்களை நேசிக்காதவன் கையில் இருக்கும் உளி உள்ளிருக்கும் சிற்பத்தை சிதைக்கும் !

# உழைப்பை நேசி.

மன்னை முத்துக்குமார்
வாங்க ஊர் சுற்றிப் பார்க்கலாம்.  சீனப் பெருஞ்சுவர்.
 
மன்னை முத்துக்குமார்
எங்களின் அறியாமையே
உங்களின் முதலீடாய் இருப்பதால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனசு .
நீயும் ”சாதனையாளன்” என்று சொல்லப்படுவதை !

-மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்

 
-
நம்மை நமக்கு அடையாளம் காட்டுவது 
அவமானங்களும் நிராகரிப்புகளும் தான்.

மன்னை முத்துக்குமார்
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.

-  பாவலர் அறிவுமதி.

(புகைப்படம். அண்ணன் கே.கார்த்திகேயன்.-விகடன் குழுமம்)

மன்னை முத்துக்குமார்

பத்து வயதுவரை சுதந்திரமாகவும் அதற்கு பிறகு கட்டாயப்படுத்துதல் இன்றி விருப்பப் பாடமாக கல்வியும் பயின்று

அதன் பின் தத்துவ ஞானம் பெற சுற்றுப்பயணம் செய்து மக்களின் வாழ்வை நேரிடையாக அறிந்து,

திருமணம் முடிக்காமல் , தாழ்ப்போட்டு தூங்கமல் ,அவனுக்காக மற்றவர் உழைத்தும் , மற்றவர்களுக்காக இவன் உழைத்தும் , சுயநலம் ஏதுமின்றி இப்படியாக ஐம்பது வயதை கடந்தவனே அரசியலில்
தலைமைக்கு தகுதியானவன்.

–பிளேட்டோ
மன்னை முத்துக்குமார்
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் புரிந்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில

வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

-சுப்ரமணிய பாரதி.

மன்னை முத்துக்குமார்
ஆளும் வர்க்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட வர்க்கம் தொடுக்கும் போர்கள்,
எஜமானர்களுக்கு எதிராக அடிமைகள் நடத்தும் போர்கள்,
நில உடமையாளர்களுக்கு எதிராக பண்ணையாட்கள் நடத்தும் போர்கள்,
அதிகார வர்க்கத்திற்கு எதிராக ஊழியர்கள் நடத்தும் போர்கள்
என
அனைத்து உள்நாட்டுப் போர்களுமே அவசியமானது.
முறையானது. முற்போக்கானது என்றே கருதுகிறோம்.

வர்க்கங்களை ஒழிக்காத வரை, சோசலிசத்தை உருவாக்காத வரை இந்த உள்நாட்டுப் போர்களையும் ஒழிக்க முடியாது

- ருஷ்ய புரட்சியாளர் லெனின்
மன்னை முத்துக்குமார்
 எழுத்தாளர் திருமிகு ஜெயகாந்தனின் தீவிர வாசகன் என்ற முறையில் அவரது சிறுகதைகளை எனது வலைப்பூவில் பதிவதற்கு முன் அவரைப் பற்றியும் அவரது படைப்புக்களின் விவரமும் இங்கே..
ஜெயகாந்தன் (பிறப்பு: ஏப்ரல் 24, 1934) சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.

வாழ்க்கைக் குறிப்பு;

ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூரில், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லாமையால், தனது ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். வீட்டில் இவர் நடத்தப் பட்ட விதம் பிடிக்காமல், வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார்.அங்கு, அவரது மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர், ஜெயகாந்தனை கம்யூனிச வேதாந்தத்திற்க்கும், பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப் படுத்தினார்.ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்கு குடிப்பெயர்ந்தார். அங்கு பெரும்பாளான நேரத்தை சி.பி.ஐ -யின் ஜனசக்தி அலுவலகத்தில் - அச்சகத்தில் பணிப்புரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கைகள் விற்றும் கழித்தார். ஆனால் 1949-ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப் பட்டது.ஆதலால், அவர் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிப் புரிந்தார். இந்த எதிர்ப்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையில் முக்கிய கால கட்டமாக அமைந்தது - அவர் சிந்திக்கவும் எழுதவும் நேரம் கிடைத்தது.இக்கால கட்டத்தில், தமிழ் நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன.தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், 
ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார்.பின்னர் காமராசருடைய தீவிர தொண்டனாக மாறி, தமிழக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் துவங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாயின. இவரது படைப்புகளுக்கு புகழும் அங்கிகாரமும் கிடைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த தமிழ் எழுதாளர்களில் ஒருவராகப் போற்றப் பட்டார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" படமாக்கப் பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதில் மூன்றாம் பரிசைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலாக உருப் பெற்றது...

படைப்புகள்;
* ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 )
* ஒர் இலக்கியவாதியின் கலையுலகஅனுபவங்கள் (செப்டம்பர் 1980 )

வாழ்க்கை வரலாறு;
* வாழவைக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )
* ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு)

நாவல்கள்  மற்றும் குறுநாவல்கள :
.* வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
* கைவிலங்கு (ஜனவரி 1961)

* யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
* பிரம்ம உபதேசம் (மே 1963)

* பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
* கருணையினால் அல்ல (நவம்பர் 1965)

* பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
* கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)

* சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
* ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)

* ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
* ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)

* கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
*ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)

* பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
* எங்கெங்கு காணினும்... (மே 1979)

* ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
* கரிக்கோடுகள் (ஜூலை 1979)

* மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
* ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்(டிசம்பர் 1979)

* ஒவ்வொரு கூரைக்கும் கீழே...(ஜனவரி 1980)
* பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)

* அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
* இந்த நேரத்தில் இவள்... (1980)

* காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
* காரு (ஏப்ரல் 1981)

* ஆயுத பூசை (மார்ச் 1982)
* சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)

* ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
* ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)

* இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
* இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)

* காற்று வெளியினிலே...(ஏப்ரல் 1984)
* கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)

* அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர்1985)
* இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)

* ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
* சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
.
சிறுகதைகள்;
-

* ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
* இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)

* தேவன் வருவாரா (1961)
* மாலை மயக்கம் (ஜனவரி 1962)

* யுகசந்தி (அக்டோபர் 1963)
* உண்மை சுடும் (செப்டம்பர் 1964)

* புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
* சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
* இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
* குருபீடம் (அக்டோபர் 1971)
* சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)

* புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
-
கட்டுரை;
-
* பாரதி பாடம்
* இமயத்துக்கு அப்பால்
-
திரைப்படமாக்கப்பட்டஇவர் கதைகள்;
-
* சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்)
* ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்)

* ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்)
* உன்னைப் போல் ஒருவன்

* யாருக்காக அழுதான்*
-
ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம்;
-
* உன்னைப் போல் ஒருவன்
* யாருக்காக அழுதான்
-விருதுகள்;
-
* சாகித்யஅகாதெமிவிருது*
* 2002-ம் ஆண்டுக்கான ஞான பீடவிருது*
* 2009-ம் ஆண்டின் இலக்கியத் துறைக்கான பத்மபூஷன் விருது.
                                                                                                             
மன்னை முத்துக்குமார்


 தயக்கம் அனைத்தும்
இங்கே ஓயட்டும்
கோழைத்தனம் அனைத்தும்
இங்கே சாகட்டும்
போற்றுபவர் போற்றட்டும்
புழுதி வாரித் தூற்றுபவர்
தூற்றட்டும்

தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை
எனதுள்ளம் ஏற்றால்
தொடர்ந்து சொல்லுவேன்

எவர் வரினும்
நில்லேன் அஞ்சேன்
என்பது போல...
பேசுவோர் பேசட்டும்
என்னைத் தொடர்ந்து... 
உனது வழி செல், பேசுவோர் பேசட்டும்"

- கார்ல் மார்க்ஸ்