மன்னை முத்துக்குமார்



பகுத்தறிவு பகலவன் அய்யா பெரியாரின் நினைவு தினம் இன்று.

ராஜசேகர ரெட்டியோ , சந்திரபாபு நாயுடுவோ, தேவே கவுடாவோ மன்மோகன் சிங்கோ , ஈ கே நாயனாரோ-போன்று சாதி பெயர்களை தாங்கிய தர்குரிகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்க காரணமானவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களே. இன்றும் தமிழகத்தை ஆள்வது அவரது வழித்தோன்றல்களான திராவிட இயக்கங்களே .

அய்யாவின் சிந்தனைகளில் சில..

மானமும் அறிவும் மனிதற்கு அழகு .
கடவுளை மற , மனிதனை நினை.
--
கடவுள் துணை யாருக்கு..?
கையாலாகாதவனுக்கு கடவுள் துணை;
அறிவில்லாதவனுக்கு ஆண்டவன்;
செயல் தவற்றை உணர முடியாதவனுக்கு தலைவிதி.
(13-12-1937 "குடி அரசு" பக்கம் 14)
--
எனக்குக் கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ,சாத்திரத்தைப் பற்றியோ, அக்கறையில்லை. ஆனால், கெடுதிகளை போக்க முயற்சிக்கிற போது,

"கடவுள்தான் சாதிகளை ஏற்படுத்தினார் - அதன்படிதான் நடக்க வேண்டும்"என்றால், அந்த கடவுள் எத்துணை பெரிய கடவுளாயிருந்தாலும் அதைசுட்டுபொசுக்கவேண்டாமா - அதைப்புதைக்கவேண்டாமா என்றே உங்களை கேட்கிறேன்.
(15 - 6 - 1930"குடி அரசு" பக்கம் 12)
--

"முட்டாள்தனம்"
பத்து மாதத்து குழந்தையைக் கக்கத்தில் வைத்துச் சாமியைக்காட்டி
அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட இருபது வருஷத்து
மனிதனைப்பார்த்து, நீ கடவுளை கும்பிடுவது
முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.
(13 ‍ 4 - 1930 "குடி அரசு" பக்கம் 9)
-
பெரியாரின் பொது வாழ்க்கை - ஒரு காலக் கணக்கு
.
பெரியாரின் பொது வாழ்க்கை - ஒரு காலக் கணக்கு1. வாழ்நாள்:
------------
ஆண்டுகள்: 94 (3 மாதங்கள், 7 நாள்கள்)
மாதங்கள்: 1131
வாரங்கள்: 4919
நாள்கள்: 34,433
மணிகள்: 8,26,375
நிமிடங்கள்: 4,95,82,540
விநாடிகள்: 297,49,52,400

2. சுற்றுப்பயணம்:
-----------------
நாள்கள்: 8200
வெளிநாடுகளில்: 392
தொலைவு: 8,20,000 மைல்கள்
ஒப்பீடு: பூமியின் சுற்றளவைப்போல் 33மடங்கு. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப் போல் 3 மடங்கு.

3. கருத்துரையும் நிகழ்ச்சிகளும்:
----------------------------
கலந்துகொண்டநிகழ்ச்சிகள்:10,700

கருத்துரை ஆற்றிய காலம்:
-------------------------
மணிகள் : 21,400
நாள்கணக்கில்: 891
நிமிடங்களில்: 12,84,000
வினாடிகளில்: 77,04,000

சிறப்புக் குறிப்பு:
-------------
அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில் பதிவு செய்திருந்தால் அது 2 ஆண்டுகள், 5 மாதங்கள் 11 நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்.

- தஞ்சை மருதவாணன், பெரியார்-பகுத்தறிவாளர் நாட்குறிப்பிலிருந்து (1984)