மன்னை முத்துக்குமார்

வகுப்பில் கணக்குஆசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு கணக்கை சொல்லி விடை கேட்டார்.

கணக்கு இது தான்.

ஒரு பட்டியில் பத்து ஆடுகள் இருக்கிறது , அதில் ஒன்னு வேலி தாண்டி ஓடி போயிட்டு , மீதம் பட்டியில் எத்தனை ஆடுகள் இருக்கும் ?

முதல் மாணவன் சொன்னார் , சார் ஒன்பது இருக்கும் என்று.

சரி நீ உட்காரு , என்று சொல்லி கடைசி பெஞ்சில் இருக்கும் நம்ம கோயிந்து கிட்ட கேட்டார், டேய் நீ சொல்லு அவன் சொல்றது சரியா ?

இல்லை சார்.

எப்படி டா? அவன் சரியா தானேடா சொன்னான்.
இல்ல சார் , பட்டியில் ஒரு ஆடும் இருக்காது.

டே... ஒரு ஆடுதானடா தாண்டி குதித்து ஓடி போச்சு.

ஆமா சார் , ஒரு ஆடு தான் தாண்டி ஓடிச்சி, ஆனா ஒரு ஆடும் இருக்காது.

சார் உங்களுக்கு கணக்கு தெரியும் , எனக்கு ஆடுகளைப் பத்தி நல்லா தெரியும்.

ஒரு ஆடும் இருக்காது , இது தான் விடை சார்-ன்னான்.

( பையன் ஒரு ஆடு மேய்க்கும் இடையனின் மகன் என்பது பிறகு தான் தெரிந்தது ஆசிரியருக்கு )

*
மன்னை முத்துக்குமார்
தாலி/ திருமணம் குறித்து பெரியார் பேச்சு
-

****
மன்னை முத்துக்குமார்

-

-
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க

முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க

ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்துகிடக்கப் போறீங்களா?

முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )
 *
 படம் : பாண்டித்தேவன் 
பாடல் : பட்டுக்கோட்டையார் 
-
மன்னை முத்துக்குமார்

.

.
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

(தாலாட்டுதே)

அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

(தாலாட்டுதே வானம்)

இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது!
சொர்க்கம் என்றே இது முடிவானது!

காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

(தாலாட்டுதே வானம்)
-
படம்: கடல் மீன்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
மன்னை முத்துக்குமார்
-
-
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?''
-
- மகாகவி சுப்ரமணிய  பாரதி -
மன்னை முத்துக்குமார்


.

.
"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
************

பாடல் : மகாகவி சுப்ரமணிய பாரதி.
படம் : சிந்து பைரவி.
பாடியவர் : டாக்டர் ஜேசுதாஸ்.
இசை : இளையராஜா.
மன்னை முத்துக்குமார்

 -

-
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூதானோ
நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ

நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கிவரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி

மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான்
அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழைமுகில்
***
பாடல் : கவிஞர் முத்துலிங்கம்
இசை : இளையராஜா
படம்: கிழக்கே போகும் ரயில்
*
மன்னை முத்துக்குமார்
 
-

-
இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே!
மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே!
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!

(இளங்காத்து)

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னை மடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

(இளங்காத்து)

ஓ! மனசுல என்ன ஆகாயம்
தினம்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

(இளங்காத்து)

-

-
படம்: பிதாமகன்
இசை: இளையராஜா
பாடல்: பழனிபாரதி
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்ரேயா கோஷல்
மன்னை முத்துக்குமார்

உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று
என்னிடம் நீ கேட்டது அதெல்லாம் எனக்கும் பிடிக்கும்
என்று சொல்லத் தானே ?

கேட்க நீ முந்திக் கொண்டாய் அவ்வளவு தான் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்


அவளை இப்போது பார்த்தாலும்
கேட்க தோணும் கணக்கு புத்தக 25 ம் பக்கத்தில்
அடை வைத்த மயிலிறகு குட்டி போட்டதா என்று ?
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்அசைந்து விடைகொடுத்தது
வண்ணத்து பூச்சியின் அழகை ரசித்த செடி !
*
மன்னை முத்துக்குமார்
இன்று உலக இசை தினம். ( 21/06/2013)  தமிழ்த் திரைப்பட பாடல்களில்  காம விரசமில்லாது  எழுதும் ஒரே கவிஞர் அண்ணன் அறிவுமதியாக தான் இருக்கும். அந்த வகையில் அண்ணன் எழுதிய ஆயிரக்கணக்கான  பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்

இந்த முத்தமிழே முத்தமிழே...ராமன் அப்துல்லா படத்துக்காக .

அண்ணன் அறிவுமதி அவர்களின் பாடலுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க எஸ் .பி .பாலசுப்ரமணியன் -சித்ரா ஆகியோர் பாடிய

முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடலென்ன
உயிரும் உயிரும் உருகும் தேடலென்ன – மனம்
வேகுது மோகத்திலே...
நோகுது தாபத்திலே

( முத்தமிழே முத்தமிழே...

காதல்வாழி சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை
தாகம் வந்து பாய்விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே
மோகம் வந்து உயிர்குடிக்க கைவளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரைச் சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்
முத்தம் சிந்தச் சிந்த ஆனாந்தம் தான்

( முத்தமிழே முத்தமிழே...

கனவு வந்து காத்திருக்கு தூங்கிக்கொள்ள மடியிருக்கா
ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா
பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்
மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய்
மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்

( முத்தமிழே முத்தமிழே... 
-
மன்னை முத்துக்குமார்
அம்மா,
அப்பா, அக்கா, தங்கை ,
உறவை
 .
.
.
இன்னொரு முறை கொடுத்து
உறவையும் அழகுப்படுத்தியவன்
நண்பன் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

கல்லூரி காலத்தில்
விடுதிக்கு வரும் நண்பனின் அப்பாவை
நண்பர்கள் உபசரிக்கும் போது
அன்பில் நெளியாத அப்பாவே இருக்க முடியாது !
*
 இமயம் தொட்டாலும்
வாடா போடா தான்
நட்பில் !!

*
 நட்பு !

அவன் அவரானது
கூச்சத்தையே தரும் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்


சத்தம் போடாதே...
இன்று தான் அவள்
இடையூறில்லாமல்
தனியாக உறங்குகிறாள்.

விலை மாதுவின் கல்லறை !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
தந்தையான பிறகு தான் புரியும்
முத்தம் காமத்தில் சேராது என்று !
*
-மன்னைமுத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்


 “இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்”
குருந்தகவல் நெஞ்சை அறுக்கத்தான் செய்கிறது
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்ட தமையனுக்கு !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

ஊருக்கெல்லாம்
நல்ல காலம் சொன்ன குடு குடுப்பைகாரன்
இன்னும் தெருவிலேயே நிற்கிறான்.
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

நீ..
பெரியவளானதை
என்னிடம் சொல்ல கூசிய போது புரிந்தது
நம் நட்பை எத்தனை பெரிதாய்
மதிக்கிறாய் என்று !
***
 அவனுக்கு பொம்பள புள்ளைங்க தான் 
பிரண்டு என்று  புறம் பேசியவனுக்கு 
தெரிய வாய்ப்பில்லை.

நட்பு பாலின பேதங்களற்றது என்று !

***
 நட்பு !
வார்த்தையல்ல.

வேதம்
வாழ்க்கை
உயிர்மூச்சு .

***
 
நண்பர் என்பதை விட நண்பன் எனபதில்
உண்மையும் அழுத்தமும் அதிகம் !

***
 அவன் இவன் என்பது நட்பின் அடர்த்தியை
வெளிப்படுத்தும் வார்த்தைகள் !
***
 
ஆறு மாத குழந்தைக்கு
காதல் தெரியாது..
ஆனால்
அதன் வயதொத்த
குழந்தையை கண்டால்
நட்பு பாராட்டும் ..

எல்லாத்துக்கும் மேல நட்பு !

***
 
பசி, காதல் , பாசம், செக்ஸ் ...
எதைப் பற்றியும் பேச
நண்பனிடம் மட்டுமே முடியும் !
***
 
 தோழியின் நட்பை பற்றி சொல்லும் போது
பூரிப்படையும் மனைவி கிடைத்தவன்
பாக்யவான் !

***
 
அம்மா அப்பாவை
தாண்டி கோபம் செல்லுபடியாகும்
ஒரே இடம் நட்பு !

***
-மன்னை முத்துக்குமார்.
.
புகைப்படம் : நவீன்  கெளதம்.

மன்னை முத்துக்குமார்
 .
இரட்டைக் குவளை முறை
நடப்பில் உள்ள ஊரிலும்
நண்பன் குடித்த மிச்ச டீயை
வாங்கி குடிக்கும் நட்பு !
 ***
-மன்னை முத்துக்குமார். 
மன்னை முத்துக்குமார்


இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள் : நரேஷ் ஐயன் /ஸ்ரேயா கோஷல்
பாடல் : தாமரை.
ஒளிப்பதிவு : ப்ரேம்குமார்.
படம் :பசங்க.
-

-
மன்னை முத்துக்குமார்

மழை
மனதையும்
நனைத்து செல்கிறது !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
வலிக்க தான் செய்கிறது
பால்ய கால நண்பன் பார்த்தும்
பார்க்காதது போல் செல்கையில் !
*
மன்னை முத்துக்குமார்


உந்தாங்கொம்பு
நூறாங்குச்சி
கில்லி/கிட்டிப்புல்
குதிரையேத்தம்
கபடி
ரேக்ளா..
.
.
.
சூதாட்ட
விளையாட்டுக்களால்
சூரையாடப்பட்டவைகள் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
விசித்திரம் !

அன்பானவர்களிடம்
தோற்றுப் போவது கூட
மகிழ்ச்சியையே தருகிறது !
*
- மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
பெரிதாய் ஏதும்  சம்பாதிக்கவில்லை
என்று  சொல்கிறார்கள் ;

நம்மை
இத்தனை காலம்
இப்படி 
பார்த்தவர்கள் !
*
 -மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

வாழ்ந்து கெட்டவன் வீடு
விலை பேசி முடிக்கையில் ;
விசும்பல் சத்தம் கேட்கும்
வீட்டின் பின்புறம் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
 நீ
பார்க்கும்
அந்த கோப
பார்வையே போதும்.
வேறெதுவும் தேவையில்ல.

உரிமையுள்ள
இடத்தில் தான்
கோபப் பட முடியுமாமே ?
*
~ மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளை பெற்றதப்பூனை
அவை பேருக்கொரு நிறமாகும்

சாம்பல் நிறமொரு குட்டி
கருஞ்சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறமொரு குட்டி

எந்த நிறமிருந்தாலும் அவை யாவும்
ஒரு தரமன்றோ..

இந்த நிறம் சிறிதென்றும் இது ஏற்றமென்றும்
சொல்லலாமோ..

சாதி பிரிவுகள் சொல்லி அதில்
தாழ்வென்றும் மேலென்றும் சொல்வார்

சாதி கொடுமைகள் வேண்டாம்
அன்பு தன்னில் செழித்திடும் வையம்...
-


***


மன்னை முத்துக்குமார்
*
வெடி சத்தத்துக்கு கூட
குலை நடுங்கி போகிறது
புகலிடம் வந்த பறவை !
**
.
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

நம்ம ஊர் கணிப்பொறி வல்லுநர் அமெரிக்காவிற்கு தொழில்முறை பயணம் சென்றார்.அங்கு சென்று தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்த கணினி மூலம் மறு வாரம் அங்கு வரவிருக்கும்தன் மனைவிக்கு மின்-அஞ்சல் அனுப்ப முடிவு செய்தார்.பயண அசதியால் மனைவியின் மின்-அஞ்சல் முகவரியை தவறாக பதிவு செய்ததை அறியாமல் அஞ்சலை அனுப்பினார்.

இதற்கிடையே இறந்த தனது கணவனின் இறுதி காரியத்தை முடித்து வீடுதிரும்பிய பெண் ஒருவர் தன் கணவன் மரணத்திற்கு வந்த துக்க விசாரிப்புகளை காண தனது மின்-அஞ்சல்கள் முகவரியை திறந்தார்.வந்த மின்-அஞ்சலை கண்டு கதறி அழுதார்.அவரின் அலறலை கேட்டு ஓடிவந்த உறவினர்கள் கணினித்திரையில் அந்தஅதிர்ச்சி செய்தியை கண்டனர்.

To: My Loving Wife

Subject: I've reached

I know you're surprised to hear from me. They have computers here, and we are allowed to send e-mails to loved ones. I've just reached and have been checked in. I see that everything has been prepared for your arrival nextweek.
------------
மன்னை முத்துக்குமார்


100 சதிவீத தேர்ச்சி என்று மார்தட்டி கொள்வதெல்லாம் சரி. அது மட்டும் தான் கல்வியா ? மருத்துவம் பொறியியல் கல்விக்கு கட் ஆப் மார்க்கை குறி வைத்து 11 ம் வகுப்பு படிக்கும் போதே 12 ம் வகுப்பு பாடத்தை சொல்லிக் கொடுத்து மனனம் செய்ய பழக்கப்படுத்தி சுயமாக சிந்திக்க விடாமல் செய்யும் கல்வி எப்படி நல்ல கல்வியாக கூடும்?

சரி வாங்க நாம் கதைக்கு போவோம்...ஒரு ஜென் கதை.


ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.

அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான கற்றல் மட்டுமே…

எனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் குருவின் இந்த ‘வேகம்’ மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே இருக்கிறாரே’ என்று குற்றம் சாட்டினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து ‘அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் வை’ என்றார்.

விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன், அதன் கனம் தாங்காமல் தடுமாறி விழுந்தான். எழுந்து கையைத் தட்டிக் கொண்டு, ‘தூக்க முடியவில்லை குருவே… மிகவும் கனமாக உள்ளது’ என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

‘சரி… அந்தக் கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு போய் வை’ என்றார் ஞானி.

அட… நான்கைந்து முறை எடுத்து வைத்ததில், விறகுகள் விரைவில் இடம்பெயர்ந்தன!

உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன் மூளைக்குள் திணித்தால் நீ திணறி விழுந்துவிடுவாய். கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால் அது நிரந்தரமாக உன் மனதில் தங்கிவிடும்.. நீ கற்ற கல்வி தரமாகவும் இருக்கும்’ என்று விளக்கினார் ஞானி.

மாணவனுக்கு மிக நல்ல பாடமாக அது அமைந்தது!
-----------------

தொடர்ந்து ஞானி இப்படிச் சொன்னார்…

நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள்.

ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறேன்…

ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோல் மேல் போட்டு கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது.

எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்று பலரும் கேட்டனர்.

ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.

எப்படி?

‘இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.

பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும்.

அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும். ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும். இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல. படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார்.

*
மன்னை முத்துக்குமார்

குழந்தைகளற்ற வீடு
யாருமில்லா பூங்கா
காதலில்லா காதலர்கள்
எல்லாம் வீண் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்


பாலவர் பள்ளியில்
சத்துணவுக்காக குழந்தை

வயலில் சிந்தியது
தாய்ப்பால் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
*
செய்யப் போகும் கொலைக்கு
முன் கூட்டியே தண்டனை
ஒற்றைக் காலில் கொக்கு !
**
~ மன்னை முத்துக்குமார்.

மன்னை முத்துக்குமார்

பலத்த மழை
விளைந்த பயிர்
வீண் !
*
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
எனக்கு பிடித்த இளையராஜாவின் திரைப்பட பாடல்கள் யூ டியூப் பில் கிடைக்கிறது.  நீங்களும் கேட்டு ரசிங்க.

.