மன்னை முத்துக்குமார்

சம கால பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட தக்கவர்களில் ஒருவரான கவிஞர் குட்டி ரேவதியின் சர்ச்சைக்குரியத் தலைப்பினை கொண்ட நூல் வெளியீடு 06-01-2012 அன்று சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் நடந்தது.

நூலினைப் பற்றி சொல்ல வேண்டுமெனில் கார்ல் மார்க்ஸ்- ல் தொடங்கி மகாகவி பாரதி, சதிக்கு சாவு மணி அடித்து விரட்டிய ராஜாராம் மோகன்ராய் அதன் பின்னர் புரட்சி கவிஞர் பாரதி தாசனில் நின்று இன்றைய முற்போக்கு பார்வையை கொண்ட அண்ணன் அறிவுமதி அனைவரும் வலியுறுத்தும் பெண் விடுதலை தான். ...

அவர்கள் சொன்ன போது சொன்ன விதம் யாருக்கும் சலிப்பையோ வெறுப்பையோ ஏற்படுத்தியதில்லை. அதனாலென்னவோ அவர்கள் கூற்றில் பொதுவுடமைவாதிகளும் முற்ப்போக்காளர்களுக்கும் உடன்பாடு உண்டு என்ற போதிலும் சமூகத்தில் பெரிய மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை...

ஒருவேளை கவிஞர் குட்டி ரேவதி அந்த தளம் ஏற்ப்படுத்தாத தாக்கத்தை , தனது சமூகம் மீதான கோபத்தை இப்படி காட்ட நேரிட்டதோ என்று என்ன தோன்றுகிறது.

தலைப்பு இது தாங்க ஆண்குறி மையபுனைவைச் சிதைத்த பிரதிகள்.

இதில் குட்டி ரேவதி தனது சமகால பெண் எழுத்தாளர்களையும் அவர்கள் படைப்புக்களையும் கோர்வையாக்கியுள்ளது நூலுக்கு அழகு.

விழாவில் எழுத்தாளரும் புதிய தலைமுறை வார இதழில் பணிபுரிபவருமான கவிஞர் தமயந்தி பேச்சில் பெண்ணுலகம் சந்திக்கும் ஒட்டுமொத்த அடக்குமுறைகளும் கணலாக தெரித்தது...

இந்நுலை அனைவரும் படிக்க வேண்டும் அதோடு நிற்க்காமல் சமூகத்திற்கு நாம் எந்த அளவில் மாற்றம் செய்யலாம் என்று உங்கள் மனதில் ஒரு எண்ணம் தோன்றினால் அது இந்நூலின் வெற்றி! படித்த உடன் மனம் கணக்கும் என்பதும் உறுதி.