மன்னை முத்துக்குமார்


 முதல் தளத்தில் இழவு
மூன்றாம் தளத்தில் முகூர்த்தம்
அடுக்குமாடி குடியிருப்பு !
*
இந்திய நதிகள்
இணைக்கப்படுகிறது.
ஒவ்வொறு தேர்தலின் போதும் !
*
சாதி சங்க மாநாடு
உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான்.
அந்த சே குவேரா டீ சர்ட் போட்ட இளைஞன்.
*
தெரிந்தே அடைகாத்தது
குயிலின் முட்டையை காகம்.
*
பசியால் மரித்துப்போன கவிஞரின் பெயரில்
“வளர்முகக் கவிஞர் விருது !”
*
தீ வைத்தும்
சிரிக்கிறது மெழுகுவர்த்தி !
*
புல்லாங்குழல் விற்பவன் ஊதினான்
தன் பசியையும் சேர்த்து !
*

     
மன்னை முத்துக்குமார்

பெருநகரங்களில் மிதிவண்டியை மிதிக்கையில் காரோட்டிகளின் வசவுகளையும் சேர்த்தே மிதிக்க வேண்டி இருக்கு !

*
மன்னை முத்துக்குமார்
கதை , திரைக்கதை நேர்த்தி, கச்சிதமான பாத்திரபடைப்பு , உயிரோட்டமுள்ள வசனம் அருமையான முடிவு என என்னை ஆட்கொண்ட திரைப்படம் மெளனகுரு.

நான் அடுத்த தலைமுறை இயக்குநர்களில் முதலில் வைத்து பார்ப்பது இந்த சாந்தகுமாரை தான் ஹேட்ஸ்- ஆப் சாந்தகுமார்.

யூ டியூப் லின்க் : http://www.youtube.com/watch?v=gSCNS1Tf9ec
மன்னை முத்துக்குமார்
என்னடா இவன் எப்ப பார்த்தாலும் பெரியார் புராணம் பாடுறான் என்று சலித்துக்கொள்பவர்களுக்கு ...

‘நாங்கள் சேர்ந்திருக்கும் போது நான் அவரின் சீடனைப் போலவே இருந்தேன். ஆனால் அவரோ என்னை தன் தலைவரை போல நடத்தினார் . அவர் எனக்கு மிகவும் கெளரவமான இடத்தை தந்தபோதும் நான் அவரின் உதவியாளனை போல தான் செயல்பட்டேன். ஒரு கட்டத்தில் நாங்கள் கொள்கை அளவில் முரண்பட்டு பிரிந்தாலும் தனிப்பட்ட முறையில் எங்களிடம் பேதமில்லை .”

இது காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து திராவிடர் கழகம் தொடங்கியபின் ராஜாஜியை பற்றி அடிக்கடி பெரியார் நினைவு கூர்ந்து நண்பர்களிடம் சொன்னது .

இப்ப அப்படியா ? பெரியாரிடம் இந்த சமூகம் கற்றுக்கொள்ள எண்ணற்ற விசயங்கள் இருக்கு...

ஒவ்வொன்னா சொல்வேன்.