மன்னை முத்துக்குமார்


நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.
****
பாடல் : மகாகவி பாரதியார்.
படம் : பாரதி
இசை : இளையராஜா
பாடியவர் : ஹாரிஸ் ராகவேந்திரா.
மன்னை முத்துக்குமார்
-
-
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்!

இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
சுடர்தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத் தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்

இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்

இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
-
பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
பாடியவர்: பி.சுசிலா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
வரிகள்: பாரதிதாசன்
மன்னை முத்துக்குமார்

வகுப்பில் கணக்குஆசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு கணக்கை சொல்லி விடை கேட்டார்.

கணக்கு இது தான்.

ஒரு பட்டியில் பத்து ஆடுகள் இருக்கிறது , அதில் ஒன்னு வேலி தாண்டி ஓடி போயிட்டு , மீதம் பட்டியில் எத்தனை ஆடுகள் இருக்கும் ?

முதல் மாணவன் சொன்னார் , சார் ஒன்பது இருக்கும் என்று.

சரி நீ உட்காரு , என்று சொல்லி கடைசி பெஞ்சில் இருக்கும் நம்ம கோயிந்து கிட்ட கேட்டார், டேய் நீ சொல்லு அவன் சொல்றது சரியா ?

இல்லை சார்.

எப்படி டா? அவன் சரியா தானேடா சொன்னான்.
இல்ல சார் , பட்டியில் ஒரு ஆடும் இருக்காது.

டே... ஒரு ஆடுதானடா தாண்டி குதித்து ஓடி போச்சு.

ஆமா சார் , ஒரு ஆடு தான் தாண்டி ஓடிச்சி, ஆனா ஒரு ஆடும் இருக்காது.

சார் உங்களுக்கு கணக்கு தெரியும் , எனக்கு ஆடுகளைப் பத்தி நல்லா தெரியும்.

ஒரு ஆடும் இருக்காது , இது தான் விடை சார்-ன்னான்.

( பையன் ஒரு ஆடு மேய்க்கும் இடையனின் மகன் என்பது பிறகு தான் தெரிந்தது ஆசிரியருக்கு )

*
மன்னை முத்துக்குமார்
தாலி/ திருமணம் குறித்து பெரியார் பேச்சு
-

****
மன்னை முத்துக்குமார்

-

-
சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
செய்யுறதைச் செஞ்சுடுங்க
நல்லதுன்னா கேட்டுக்குங்க
கெட்டதுன்னா விட்டுடுங்க

முன்னாலே வந்தவங்க
என்னென்னமோ சொன்னாங்க
மூளையிலே ஏறுமுன்னு
முயற்சியும் செஞ்சாங்க

ஒண்ணுமே நடக்காம
உள்ளம் நொந்து செத்தாங்க
என்னாலும் ஆகாதுன்னு
எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

முடியிருந்தும் மொட்டைகளாய்
மூச்சிருந்தும் கட்டைகளாய்
விழியிருந்தும் பொட்டைகளாய்
விழுந்துகிடக்கப் போறீங்களா?

முறையைத் தெரிஞ்சு நடந்து
பழைய நினைப்பை மறந்து
உலகம் போற பாதையிலே
உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க?
என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )
 *
 படம் : பாண்டித்தேவன் 
பாடல் : பட்டுக்கோட்டையார் 
-
மன்னை முத்துக்குமார்

.

.
தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

(தாலாட்டுதே)

அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

(தாலாட்டுதே வானம்)

இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது!
சொர்க்கம் என்றே இது முடிவானது!

காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

(தாலாட்டுதே வானம்)
-
படம்: கடல் மீன்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி
மன்னை முத்துக்குமார்
-
-
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?''
-
- மகாகவி சுப்ரமணிய  பாரதி -
மன்னை முத்துக்குமார்


.

.
"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
************

பாடல் : மகாகவி சுப்ரமணிய பாரதி.
படம் : சிந்து பைரவி.
பாடியவர் : டாக்டர் ஜேசுதாஸ்.
இசை : இளையராஜா.
மன்னை முத்துக்குமார்

 -

-
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம்பூதானோ
நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ

நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கிவரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி

மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும்
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான்
அள்ளும் கரம் நான்தான்
மஞ்சமதில் வஞ்சிக்கொடி வருவாள்
சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும்
பெண்ணோவியம் செந்தாமரையே

மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை
அணைக்கும் பருவ மழைமுகில்
***
பாடல் : கவிஞர் முத்துலிங்கம்
இசை : இளையராஜா
படம்: கிழக்கே போகும் ரயில்
*
மன்னை முத்துக்குமார்
 
-

-
இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே!
மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே!
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!
புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!

(இளங்காத்து)

பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னுதான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னை மடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

(இளங்காத்து)

ஓ! மனசுல என்ன ஆகாயம்
தினம்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

(இளங்காத்து)

-

-
படம்: பிதாமகன்
இசை: இளையராஜா
பாடல்: பழனிபாரதி
பாடியவர்: ஸ்ரீராம் பார்த்தசாரதி, ஸ்ரேயா கோஷல்