மன்னை முத்துக்குமார்
மேலிமைக்கும்
கீழிமைக்கும்
இடைப்பட்ட
தூரம் தான்
துக்கமென்பது.

மூடிய
இமைகள்
திறக்கவும்
செய்யும் !

-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்

குழந்தைகள்
ஒரு பொழுதும்
தன் கோபத்தை
பொம்மைகளிடம்
காட்டியது இல்லை

-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
குழந்தைகள்
கேட்கும்
எல்லா
கேள்விகளுக்கும்
பதில் சொல்லும்
அப்பாவோ ,
அம்மாவோ
இன்னும்
பிறக்கவில்லை.
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
அன்னக்கொடியும் கொடிவீரனும் ..
எனையாளும் ஆளுமை பாரதிராஜாவின் “ அன்னக்கொடியும் கொடிவீரனும்
படத்தில்
 அண்ணன் அறிவுமதி யின்  ..

பொத்தி வச்ச ஆசை தான் ...கீழே க்ளிக் செய்து கேளுங்க
.
மன்னை முத்துக்குமார்
எத்தனையோ 
அநீதிகள் 
பழக்கத்தால் 
நீதிகளாய் 
பரிமளிக்கின்றன
வரதட்சணையைப் போல !
-
-மன்னை முத்துக்குமார்.
மன்னை முத்துக்குமார்
அரசியல்வாதிகளின் / சினிமாக்காரர்களின் திடீர் ஈழ கரிசனத்தை பார்க்கும் போது கலீல் ஜிப்ரானின் இந்த கவிதை தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

போரும் சிறிய நாடுகளும் :
--
விளைநிலம் ஒன்றில்
ஒற்றை ஆடும் அதன் குட்டியும்
மேய்ந்தபடி இருந்தன..

கழுகு ஒன்று
குட்டி ஆட்டினைப்
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி
வட்டமடித்து வந்தது..

கீழிறங்கி
இரையினைக் கவ்வும் நேரத்தில்
இன்னொரு கழுகும்
பசியோடு வந்து சேர்ந்தது..

எதிரிகளின்
ஆவேசப் போராட்டத்தின்
கூக்குரல்
வானமெங்கும் நிரம்பி வழிந்தது..

ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து
ஆச்சர்யப்பட்டுப் போனது..
குட்டியிடம் சொன்னது,
"பார்த்தாயா குழந்தாய்..
எத்தனை விநோதம் இது?

இவ்விரு பெரிய பறவைகளுக்கும்
விரிந்து பரந்த இந்த காயம்
போதவில்லையோ?
இப்படி ஒருவரை ஒருவர்
தாக்கிக் கொள்கிறார்களே..!

சிறகு முளைத்த அந்த
உன்னிரு சகோதரர்களுக்கிடையில்
சமாதானம் ஏற்படட்டும் என்று
இதயபூர்வமாய் நீ
இறைவனை வேண்டிக் கொள்..!!"

குட்டியும் அவ்வாறே
வேண்டிக் கொண்டது..!!
-
-கலீல் கிப்ரான்
மன்னை முத்துக்குமார்
இங்கு மிகச் சிறந்த ஒழுக்கமாய் இருக்கும் ஒரு நற்குணம்
மற்றொறு உலகத்தில் மிக தாழ்ந்ததாய் இருக்க கூடும்.

--கலீல் ஜிப்ரான்,
மன்னை முத்துக்குமார்



திட்டமிட தவறினால்
நாம் 
தவறு செய்யத் திட்டமிடுகிறோம் 
என்று பொருள் !
மன்னை முத்துக்குமார்

நான் பிறந்து
மூன்று நாட்கள் ஆகியிருந்தன..
நான் தொட்டிலில் இருந்தபடி
என் புதிய உலகத்தை
ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன்
பார்த்துக் கொண்டிருந்தேன்..
என் அம்மா,
செவிலித் தாயிடம் கேட்டாள்..
"எப்படி இருக்கிறான் என் மகன்..?"

அவள் சொன்னாள்..
"ரொம்ப நன்றாக இருக்கிறான்..
நான் இதுவரை மூன்று முறை பாலூட்டி விட்டேன்..
இவ்வளவு மகிழ்ச்சியான ஒரு குழந்தையை நான்
இதுவரை கண்டதேயில்லை.."

எனக்குக் கோபம் வந்தது..
நான் கத்தினேன்..
"அம்மா.. அது உண்மையில்லை..
என் தொட்டில் மிகவும் கடினமாக உள்ளது..
நான் குடித்த பால் கசப்பாக இருந்தது..
அவள் மார்பகங்களின் வாசம் கூட
எனக்குப் பிடிக்கவேயில்லை..
நான் மகிழ்ச்சியாய் இல்லை..
மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..!"

ஆனால் என் அம்மாவுக்கோ,
என் செவிலித்தாய்க்கோ
நான் சொல்லியது எதுவும் புரியவில்லை..
ஏனென்றால் நான் பேசிய மொழி,
நான் எங்கிருந்து வந்தேனோ, அந்த உலகத்தில் பேசுவது..
இந்தப் புதிய உலகத்தில்
அந்த மொழியை யாருமே பேசுவதில்லை..

இருபத்தியோரு நாட்கள் கடந்ததும்
எனக்குப் பெயர் சூட்டப்பட்டது..
பெயர் சூட்டி ஆசீர்வதித்த பூசாரி
என் தாயிடம்,
"நீ மிக்க மகிழ்ச்சி அடைய வேண்டும் பெண்ணே..
ஏனென்றால் உன் மகன் ஒரு கிறித்துவனாகப் பிறந்துள்ளான்.."
என்றார்..
நான் ஆச்சர்யத்துடன் அவரிடம்,
"அப்படியென்றால்
சொர்க்கத்தில் இருக்கும் உங்கள் தாய்
துக்கப்பட வேண்டுமே..
ஏனென்றால் நீங்கள் கிறித்துவராகப் பிறக்கவில்லையே..!!" என்றேன்..
ஆனால், அவருக்கும் என் மொழி புரியவில்லை..

ஏழு மாதங்கள் ஆன பிறகு,
ஒரு ஜோசியக்காரன் எங்கள் வீட்டுக்கு வந்து
என்னைப் பார்த்து என் தாயிடம்,
"உங்கள் மகன்
ஒரு சிறந்த தலைவனாய் வருவான்..
அதற்குறிய சமிக்ஞைகள் தெரிகின்றன.." என்றான்..
நான் கோபத்துடன்,
"தலைவனெல்லாம் க முடியாது..
நான் ஒரு சிறந்த இசைக் கலைஞனாவேன்..
வேறு எதுவும் ஆக மாட்டேன்.." என்று கூக்குரலிட்டேன்..
ஆனால், அந்த வயதிலும்
என் மொழி யாருக்கும் புரியவில்லை..

இன்று முப்பத்தி மூன்று ஆண்டுகள்
கழிந்த பிறகு
என் அம்மா, செவிலித்தாய், பூசாரி
எல்லோரும் இறந்து போய் விட்டனர்..
ஜோசியக்காரன் மட்டும் உயிருடன் இருக்கிறான்..
ஆலய வாசலில் அவனைப் பார்த்தேன்..
என்னோடு பேசிக் கொண்டிருந்த போது
அவன் சொன்னான்..
"நீ ஒரு சிறந்த இசைக் கலைஞனாய் வருவாய் என்று
எனக்கு அப்போதே தெரியும்..
நீ குழந்தையாய் இருந்த போதே
நான் கணித்துச் சொன்னேன்.."
என்றான்..

நான் அவன் சொன்னதை நம்பினேன்..
ஏனென்றால்,
இப்போது
என் பழைய மொழியை
நானே மறந்து போயிருந்தேன்..!!
-
-கலீல் ஜிப்ரான்.
மன்னை முத்துக்குமார்
கண் ஒரு நாள் சொன்னது..
"பாலைவனத்திற்கு அப்பால்
ஒரு பனி மூடிய மலை
தெரிகிறது பாருங்கள்..
எவ்வளவு அழகாக இருக்கிறது..?"

காது கொஞ்ச நேரம்
உன்னிப்பாய்க் கேட்டு விட்டுப்
பிறகு சொன்னது..
"மலையா?? எந்த மலை??
எனக்கு எதுவும் கேட்கவில்லையே..!!"

கையும் பேசியது..
"என்னால்
எவ்வளவு முயன்றும்
அந்த மலையைத் தொட முடியவில்லையே..
மலை நிச்சயம் இருக்கிறதா..??"

மூக்கு உறுதியாகச் சொன்னது..
"மலை எதுவும் கிடையாது..
எனக்கு எந்த வாசனையும் தெரியவில்லை..!!"

கண் வேறு பக்கமாய்த்
திரும்பிக் கொண்டது..

மற்ற உறுப்புக்களெல்லாம்
தங்களுக்குள் பேசிக் கொண்டன..
இறுதியாய் ஒரு முடிவுக்கு வந்தன..
"கண்ணில் ஏதோ
கோளாறு ஏற்பட்டு விட்டது..!!"

-கலீல் ஜிப்ரான்.i