மன்னை முத்துக்குமார்
ஒரு கணக்கர் தனது அதிகாரியிடம் சார், எனக்கு ஒரு நாலு நாள் லீவு வேணும். இது நாள் வரை நான் லீவே எடுத்ததில்லை. கொஞ்ச ஓய்வு எடுத்துக்கலாம் -னு இருக்கேன் என்றாராம்.

அதிகாரி சிரிச்சிகிட்டே , சரி லீவு எடுத்துக்கோங்க. என்றாராம். கணக்கரும் மகிழ்சியோடு நான்கு நாள் விடுப்பு எழுதி கொடுத்துட்டு வீட்டுக்கு போனாராம்.

அடுத்த நாள் கணக்கரின் மனைவி , என்னங்க சும்மா தானே இருக்கீங்க இந்த மாவை
கொஞ்சம் ஆட்டுக்கல்லுல போட்டு ஆட்டி கொடுங்க என்றாளாம். கணக்கு பிள்ளையும் செய்தார்.

அடுத்து என்னங்க ,சும்மா தானே இருக்கீங்க கொஞ்ச ரேசன் கடைக்கு போயிட்டு வந்துடுங்க, அதையும் முடித்தார் கணக்குபிள்ளை.

மாலை நேரம் , என்னங்க துணியெல்லா அயனிங்க் கொடுத்துருக்கேன் வாங்கி வந்துடுங்க. வந்தார்.

என்னங்க சும்மா தானே இருக்கீங்க , வீட்டை கொஞ்சம் ஒட்டடை அடுச்சி கொடுங்க, செய்தார். நான்கு நாள் லீவு கேட்டவர் மறுநாள் அலுவலகம் வந்து நின்னார்

அதிகாரி அப்பவும் சிரிச்சாராம்.