மன்னை முத்துக்குமார்

-
மனுஷங்கடா நாங்க மனுஷங்கடா
ஒன்னைப்போல அவனைப்போல
எட்டுச்சாணு ஒசரமுள்ள மனுஷங்கடா

- டேய் மனுஷங்கடா

ஒங்க தலைவர் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

ஒங்க ஊர்வலத்துல தரும அடிய வாங்கிக்கட்டவும்
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்
நாங்க இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
- டேய் மனுஷங்கடா

எங்களோட மானம் என்ன தெருவுல கெடக்கா
ஒங்க இழுப்புக்கெல்லாம் பணியறதே எங்களின் கணக்கா
ஒங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க வீடு புகுந்தா ஒங்க மானம் கிழிஞ்சி போகாதா
- டேய் மனுஷங்கடா

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
- டேய் மனுஷங்கடா

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்கப்போனீங்க
- டேய் மனுஷங்கடா
------------------------
                                   மக்கள் பாவலர் தோழர்    " இன்குலாப் "
1 Response
  1. இந்தக் கவிதையுள்ள இன்குலாப் அவர்களின் சூரியனைச் சுமப்பவர்கள் என்ற நூலைத்தான் நான் என் நிறைகலைப் பட்ட ஆய்வுக்காக தேர்ந்தெடுத்தேன். ஒருசிலர் அன்போடு வேண்டாம் என்று தடுத்த போதும் அதையே என்னுடைய ஆய்வாகச் செய்து முடித்தேன். 200க்கு 188 மதிப்பெண்கள் பெற்றேன்.