மன்னை முத்துக்குமார்


மதிப்பிற்குரிய காலச்சுவடு ஆசிரியர் அவர்களுக்கு !

இந்த ஏப்ரல் மாத ( 2013 )காலச்சுவடு இதழ் வந்து சேர்ந்தது, படித்தேன் . அதில் ”துயர விலங்கு ” என்ற தலைப்பில் இயக்குனர் பாலாவின் பரதேசி பட விமர்சனத்தை தோழர் செல்லப்பா அவர்கள் எழுதி இருக்கிறார்.

அந்த விமர்சனத்தில் ( இதழின் 38 வது பக்கத்தில் ) ஒரு தவறான கருத்து பதிவாகி இருக்கிறது , அதாவது பாலாவின் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்குனர் ஆக காரணமானவர் இயக்குனர் மகேந்திரன் என்றும் அவர் தான் தமிழ் இயக்குனர்களில் நாவல்களை விழைவுடன் படமாக்கியவர் என்றும் பதிவு செய்திருக்கிறீர்கள் .

அது தவறு .

1979 ஆம் ஆண்டில் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு அறிமுகமான பாலுமகேந்திரா , கோகிலா, மூன்றாம் பிறை படங்களையும் இயக்கிவர், அதற்கு முன்னதாக சிவாஜியின் பல படங்களுக்கு பக்கம் பக்கமாக வசனம் எழுதிய மகேந்திரன் அவர்கள் உணர்வுகளை நடிப்பால் மட்டுமே உணர்த்தும் உத்தியை புனே திரைப்படக் கல்லூரியில் படித்த பாலுமகேந்திராவிடம் இருந்து தான் கற்றார் என்பது வரலாறு.

கல்கி இதழில் தொடர்கதையாக உமாசந்திரன் அவர்கள் எழுதிய முள்ளும் மலரும் நாவலை 1978 ல் மகேந்திரன் அவர்கள் இயக்கியது போதும் , 1983 ல் மணிரத்னம் இயக்கிய பல்லவி அனுபல்லவியை (கன்னடம் ) இயக்கிய போதும் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவை தேர்ந்தெடுத்தது எதற்காக?

இவ்விறு படங்களையும் அவர்கள் இயக்கும் முன்பே சிறந்த மூன்று படங்களை இயக்கியவர் பாலுமகேந்திரா அவர்கள் .தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவும் தெரிந்த இயக்குனர் பாலுமகேந்திரா ஒருவர் தான். அவரது திறமையில் பாடம் பயின்றவர்கள் பாரதிராஜாவும் , மணிரத்னமும்.

தமிழ் சினிமாவின் வரலாற்றை தவறாக பதிவு செய்யாதீர்கள். மகேந்திரன் தமிழின் மிகப்பெரிய ஆளுமை என்பதில் எனக்கு எப்போதுமே மாற்று கருத்து இல்லை . அதற்காக பாலும்கேந்திரா வை குறைத்து மதிப்பிடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது பார்வையில் பாலுமகேந்திரா , மகேந்திரன் , பாரதிராஜா என்ற அளவில் தான் வரிசைபடுத்த முடியும்.

ஒரு பிரிண்டிங்க மீடியாவில் பதிவு செய்யும் போது உண்மையா என்று ஆராய்ந்து பதிவு செய்யுங்க என்பது எனது தாழ்வான வேண்டுகோள் .


அன்புடன்
காலச்சுவடு வாசகன்
மன்னை முத்துக்குமார்.