மன்னை முத்துக்குமார்
சிகரெட் விற்று
சிறுக சிறுக சேமித்தார்
பெட்டிக்கடை க்காரர்
புற்றுநோயை !
*
 கேட்க மட்டுமே தெரிந்த காதுகளும்
பதில் பேசாத வாயும் எப்போதும் எல்லோருக்கும்
தேவைப்படுகின்றன !
*
 உருவ வழிபாடு இல்லையென்போருக்கும்
தேவைப்படுகிறது மத அடையாளம் !
*
 பெரிதாக வருத்தம் ஏதும் இல்லை போலும்
ஒற்றைச் சிலிர்ப்பில் இழப்பை சரிசெய்து விடுகிறது
இறகு உதிர்த்த அப்பறவை !
*
~ மன்னை முத்துக்குமார்.